தடுப்பூசிக்கு பிறகு ஏற்படும் கொரோனா தொற்று; நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?

1.1 கோடி பேர் கோவாக்ஸின் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். 93.56 லட்சம் பேர் முதல் டோஸை பெற்றுள்ளனர் அதில் 4208 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Infections after Covid-19 vaccinationInfections after Covid-19 vaccination

Infections after Covid-19 vaccination : கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசிகள் மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, இரண்டு டோஸ்கள் பெற்றுக் கொண்டவர்களுக்கும் கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை மருத்துவ ரீதியில் ப்ரேக்த்ரோ தொற்றுகள் என்றூ வகைப்படுத்துவார்கள். இது தடுப்பூசி நோய் தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அனைத்து பாதுகாப்புகளையும் உடைப்பதால் ப்ரேக்த்ரோ தொற்று என்று வழங்குவோம்.

வெகுசில ப்ரோக்த்ரோ வகையான தொற்றுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது சில சந்தேகங்களையும் கொரோனா தடுப்பூசி மீதான கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இது மேலும் மக்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக் பெற்றுக் கொள்வதில் தயக்கம் அடைய வைக்கிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பெற்றுக் கொண்ட மக்கள் தொகையில் ப்ரேக்த்ரோ வகை தொற்றுகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது என்று ஐ.எம்.சி.ஆர்.ஆரின் தரவு உறுதி செய்துள்ளது.

முழுமையான பாதுகாப்பு உறுதி இல்லை

எந்த நோய்க்கும் எதிராக 100% பாதுகாப்பினை தடுப்பூசிகள் வழங்காது என்பது நன்றாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகும். கொரோனா தடுப்பூசி உட்பட, ப்ரேக்த்ரோ பாதிப்புகள் அனைத்து வகையான தடுப்பூசிகளிலும் உள்ளன. அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான சி.டி.சி. தடுப்பூசி பெற்றவர்கள் அதிகமாக தாக்குதலுக்கு ஆளாகமாட்டார்களே தவிர முழுமையான பாதுகாப்பினை வழங்காது என்று கூறியுள்ளது.

சோதனையோட்டங்களின் போது கொரோனா தடுப்பூசிகள் 60% முதல் 95% வரையில் செயல்திறன் மிக்கதாக இருந்தது. ஆனால் உண்மையில் சோதனை ஓட்டங்களில் கூறியதைவிட அதன் வீரியம் குறைவாகவே உள்ளது. எனவே தடுப்பூசி பெற்ற சிலருக்கு நோய் தொற்று ஏற்படுவது சகஜம்.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி உட்செலுத்தி இரண்டு வாரம் ஆன நிலையில் தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் கூட ஒருவருக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். இந்த வைரஸின் பிறழ்வுகளும் அதிக அளவில் உருவாகி பரவி வருகின்றன. அவற்றில் ஒரு சில வைரஸ்கள் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியையே கேள்விக்குறியாக்குபவை. எனவே தடுப்பூசிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தகர்த்தெறிவதற்கான சாத்தியங்களும் இந்த வைரஸ்களுக்கு உண்டு.

ப்ரேக்த்ரோ தொற்றுகளின் எண்ணிக்கை

கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து எழுந்த சந்தேகங்களை களைய எடுத்துக் கொண்ட முயற்சியில் ஐ.எம்.சி.ஆர். கடந்த வாரம் தரவுகளை வெளியிட்டது. அதில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 10 ஆயிரம் நபர்களில் இருவர் முதல் நால்வருக்கே இது போன்ற தொற்று ஏற்படும் என்று கூறியுள்ளது.

இதுவரை 11.6 கோடி மக்கல் கோவீஷீல்ட் மருந்தினை பெற்றுள்ளனர். அதில் 10.03 கோடி நபர்கள் முதல் டோஸை பெற்றுள்ளனர். 17,145 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. % அடிப்படையில் அது 0.02% ஆகும். இரண்டாம் டோஸை பெற்ற 1.57 கோடி நபர்களில் 5,014 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது 0.03% பேர் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

1.1 கோடி பேர் கோவாக்ஸின் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். 93.56 லட்சம் பேர் முதல் டோஸை பெற்றுள்ளனர் அதில் 4208 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சதவிகித அடிப்படையில் பார்த்தால் இது 0.04% ஆகும். இரண்டாம் டோஸை பெற்ற 17.37 லட்சம் நபர்களில் 695 நபர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இது 0.04% ஆகும்.

பார்ப்பதை போன்றே இந்த அளவுகள் மிகவும் குறைவானவை தான். தடுப்பூசி பெற்றுக் கொண்ட பிறகு எத்தனை நாட்கள் கழித்து இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதும் நமக்கு தெளிவாக இல்லை; மேலும் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் முன்கள மற்றும் மருத்துவ பணியாளர்கள் வெகுநாட்களாகவே வைரஸ் பரவும் இடங்களில் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு தொற்று நோய அபாயம் அதிகமாக உள்ளது என்று ஐ.எம்.சி.ஆர். இயக்குநர பல்ராம் பார்கவா கூறினார். புதிதாக உருவாகியுள்ள மாறுபட்ட வைரஸ் அதிக அளவு கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ப்ரேக்த்ரோ தொற்று லேசனாது

தொற்றை எதிர்த்து பாதுகாப்பதற்காக தடுப்பூசி அல்ல. அது லேசனா அல்லது கடுமையான அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதலை தவிர்க்க உதவுகிறது. இந்த ப்ரேக்த்ரோ தொற்று லேசானது என்று கே.இ.எம். மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முன்னோட்டத்திற்கு முதன்மை மேற்பார்வையாளராக பணியாற்றிய டாக்டர் ஆஷிஷ் பவ்தேகர் கூறினார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஆரம்ப தலைமுறை அவசரகால பயன்பாட்டு அங்கீகார தடுப்பூசிகள் என்று மகாராஷ்டிரா மாநில கோவிட் 19 பணிக்குழுவின் நிபுணர் டாக்டர் சஷாங்க் ஜோஷி சுட்டிக்காட்டினார். “ஒரு வழக்கமான தடுப்பூசி கால அட்டவணையில், ஒரு தடுப்பூசியை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும், ஆனால் இவை ஆரம்ப தலைமுறை விரைவான தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் செயல்திறனைப் பற்றிய சிறந்த நுண்ணறிவைப் பெற எங்களுக்கு கூடுதல் தரவு மற்றும் வலுவான மருந்தக விழிப்புணர்வு தேவை. சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் இறுதியில் உருவாக்கப்படும், இது திருப்புமுனை நோய்த்தொற்றுகளின் வீதத்தைக் குறைக்கும், ”என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

உலகளாவிய ப்ரேக்த்ரோ வைரஸ் தொற்றுகள்

87 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர். அவர்களில் 7157 நபர்களுக்கு ப்ரேக்த்ரோ தொற்று ஏற்பட்டுள்ளது என்று சி.டி.சி. கூறியுள்ளது.

சி.டி.சி. இந்த வகையான தொற்றுகளை எதிர்பார்த்தது என்பது உண்மை ஆனால் அது எச்சரிக்கை செய்யும் அளவிற்கு அதிக அளவில் இல்லை என்பது உண்மை. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் பிறழ்ந்த வகைகள் தடுப்பூசியிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு புதிய அமெரிக்க ஆய்வின்படி, இரண்டு அளவு தடுப்பூசி போட்ட பிறகு கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது. அவர்களின் ஆய்வில், 417 முழுமையாக தடுப்பூசி போட்டவர்களிடமிருந்து கோவிட் -19 இன் இரண்டு அரிய வழக்குகள் பதிவாகியுள்ளன. பங்கேற்பாளர்களுக்கு ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி போடப்பட்டது. நேர்மறையை பரிசோதித்த இருவரும் பெண்கள், இரு பெண்களுக்கும் லேசான அறிகுறிகள் இருந்தன, விரைவாக குணமடைந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“தொற்றுநோயின் நோக்கத்தைப் பொறுத்தவரை, இப்போது உலகில் ஒரு பெரிய அளவிலான வைரஸ் உள்ளது, அதாவது பிறழ்வுகள் உருவாகவும் பரவவும் ஒரு பெரிய வாய்ப்பு. எதிர்வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் தடுப்பூசிகளை உருவாக்குபவர்களுக்கு இது ஒரு சவாலாக இருக்கும், ”என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Infections after covid 19 vaccination

Next Story
அற்புதம் நிகழும் என்ற எண்ணம் கொரோனாவை வெல்ல உதவாதுMagical thinking won’t help us fight Covid-19, masks and social distancing will
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express