ஃப்ரீபர்க் பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் கிளஸ்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் சிஐபிஎஸ்எஸ் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் கொரோனா வைரஸ் மூளையை பாதிப்பது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வில், கொரோனா நோயாளிகளின் மைய நரம்பு மண்டலத்தில் வாஸ்குலர் அமைப்பைச் சுற்றியுள்ள மற்றும் மூளை திசுக்களில் வெவ்வேறு நோயெதிர்ப்பு உயிரணுக்களை உள்ளடக்கிய ஒரு கடுமையான அழற்சி உருவாகலாம் என கூறப்பட்டுள்ளது.
மூளையை வைரஸ் நேரடியாக தாக்குவதால் உண்டாவதே மூளையழற்சி நோய். கொரோனா வைரஸின் தாக்கம் மூளையழற்சி நோயாகவும் வரலாம். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன் வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது. அப்படி போராடும்போது நமது உடலில் உள்ள செல்களையும் தாக்கத் தொடங்குகிறது. மூளையின் செல்களையும் நரம்பு செல்களையும் தாக்குகிறது. ரத்த ஓட்டத்தை தடுப்பதுடன் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவைக் குறைக்கிறது.
பேராசிரியர்கள் டாக்டர் மார்கோ பிரின்ஸ் மற்றும் டாக்டர் பெர்ட்ராம் பெங்ஸ் தலைமையிலான குழு, அதன் முடிவுகளை இம்யூனிட் இதழில் வெளியிட்டுள்ளன.
கொரோனாவால் மைய நரம்பு மண்டலம் பாதிப்படையும் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தாலும், மூளை வீக்கத்தின் அளவு ஆச்சரியப்படுத்தியதாக எழுத்தாளர் ஹென்ரிக் சாலிக் ஃப்ரீபர்க் பல்கலைக்கழக இணையதளத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.
டாக்டர் மரியஸ் ஸ்வாபென்லேண்ட் கூறுகையில், ஆராய்ச்சியில் கண்டறிந்த பல நுண்ணுயிர் முடிச்சுகள் பொதுவாக ஆரோக்கியமான மூளையில் காணப்படவில்லை என கூறியுள்ளார்.
புதிய அளவீட்டு முறையை பயன்படுத்தி, வெவ்வேறு உயிரணு வகைகளையும், வைரஸ் பாதிக்கப்பட்ட செல்கள் மற்றும் அவற்றின் இடம் சார்ந்த தொடர்புகளையும் முன்னர் காணப்படாத வகையில் கண்டறிந்துள்ளனர்.
பிற மூளை அழற்சி நோய்களுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸால் ஏற்படும் அழற்சி தனித்துவமாகவும் மூளையின் நோய் எதிர்ப்பு திறனை கடுமையாக பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன என டாக்டர் பிரின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil