Inhaled Covid vaccine : ஒற்றை டோஸ், இன்ட்ரானசல் தடுப்பூசியின் திறனை மதிப்பிடும் ஒரு புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் இந்த தடுப்பூசி ஆபத்தான கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு எதிராக எலிகளை முழுமையாக பாதுகாக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். இந்த தடுப்பூசி வைரஸ் ஒரு விலங்கில் இருந்து மற்றொரு விலங்குக்கு பரவுவதை தடுக்கிறது என்று சையன்ஸ் அட்வான்ஸ் இதழில் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அயோவா பல்கலைக்கழகம் (யுஐ) மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு பதிலாக நாசல் ஸ்ப்ரே வழியாக நாசி வழியே செலுத்தப்படுகிறது. ஒரே டோஸ் மட்டும் போதும். மூன்று மாதங்கள் வரை இந்த மருந்தை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்திக் கொள்ள இயலும். இது உள்ளார்ந்த முறையில் வழங்கப்படுவதால், தடுப்பூசி நிர்வகிக்க எளிதாக இருக்கும், குறிப்பாக ஊசிகளுக்கு பயப்படுபவர்களுக்கு, என்று அயோவா பல்கலைக்கழக மருத்துவ குழு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தில் இந்த தடுப்பூசி உயிரணுக்களுக்கு பாதிப்பில்லாத பாராயின்ஃப்ளூயன்சா வைரஸ் 5 (PIV5) ஐப் பயன்படுத்துகிறது. தடுப்பூசி ஆன்டிபாடிகள் மற்றும் செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இது SARS-CoV-2 இன் அபாயகரமான அளவுகளிலிருந்து எலிகளை முற்றிலும் பாதுகாத்தது. இந்த தடுப்பூசி ஃபெர்ரெட்களில் தொற்று மற்றும் நோயைத் தடுத்தது, மேலும் கோவிட் -19 நோய்த்தொற்றுள்ள ஃபெர்ரெட்களிலிருந்து மற்ற விலங்குகளுக்கு நோய் பரவுவதையும் தடுத்தது என்கிறது ஆய்வு முடிவுகள்.
Source: University of Iowa
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil