Advertisment

டீன் ஏஜ் பெண்களின் மனநிலையை மோசமாக்கும் இன்ஸ்டாகிராம்: ஃபேஸ்புக் ஆய்வு

இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தற்கொலை எண்ணங்கள் வந்ததாக 13% பிரிட்டிஷ் பயனர்கள் மற்றும் 6% அமெரிக்க பயனர்கள் கூறியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
instagaram

இன்ஸ்டாகிராம் செயலியின் பயன்பாடு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள இளைஞர்களை எதிர்மறையாக பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல்(WSJ) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

Advertisment

பேஸ்புக் நடத்திய ஆய்வில் இன்ஸ்டாகிராம் டீன் ஏஜ் பெண்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், உடல் சம்பந்தமான புகைப்படங்களால் ஏற்படும் பிரச்சினைகள் கவலை மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக இன்ஸ்டாகிராம் செயலி அதன் மில்லியன் கணக்கான இளம் பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களில் பலருக்கு, குறிப்பாக டீனேஜ் பெண்களுக்கு இது மோசமானது என்பதை மீண்டும் கண்டறிவதாக, தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், உள் ஆவணங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனர்களின் இளம் வயது கொண்ட பயனர்கள் மனநலம் பாதிக்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. சுமார் 32 சதவிகிததிற்கும் அதிகப்படியான இளம் பெண்கள் தங்கள் உடலைப் பற்றி மோசமாக உணர்ந்தபோது, இன்ஸ்டாகிராம் அவர்களை இன்னும் அதிக மோசமாக உணர வைத்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற இடங்களில் டீன் ஏஜ் வயது பெண்களுக்கு மனநிலை மாறியதாகவும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய காரணத்தினால் சில நேரங்களில் மனநிலை மாறி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளனர் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தற்கொலை எண்ணங்கள் வந்ததாக 13 சதவிகித பிரிட்டிஷ் பயனர்கள் மற்றும் 6 சதவிகித அமெரிக்க பயனர்கள் கூறியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கை காட்டிலும் டீன் ஏஜ் வயதினர் இன்ஸ்டாகிராமை அதிக பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 40 சதவீதத்திற்கும் மேலான பயனர்கள் வெறும் 22 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சமூக ஊடகங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?

பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஒரு ஆய்வு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, அமெரிக்காவில் 18-29 வயதுடையவர்களில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் (71%) அல்லது ஸ்னாப்சாட் (65%) பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வயதினரில் பாதி பேர் தாங்கள் டிக்டாக்கை பயன்படுத்துவதாகக் கூறினர்.

18-24 வயதுக்குட்பட்டவர்களில் இன்ஸ்டாகிராம் (76%), ஸ்னாப்சாட் (75%) மற்றும் டிக் டாக் (55%) பயன்படுத்துவதாக அறிக்கை கூறுகிறது. அமெரிக்கர்களின் (35%) சிறிய பங்கை ஒப்பிடுகையில், ஹிஸ்பானிக் (52%) மற்றும் கருப்பு அமெரிக்கர்கள் (49%) இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாகக் கூறினர்.

அமெரிக்காவில் 10ல் ஏழு பேர் சமூக ஊடகங்களை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள, செய்திகளை தெரிந்துகொள்ள, தகவல்களைப் பகிர அல்லது தங்களை மகிழ்விக்க பயன்படுத்துகின்றனர் என பியூ ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தில், இன்ஸ்டாகிராம் பயனாளிகளில் அதிக சதவீதம் பேர் 25-34 வயதுக்குட்பட்டவர்கள் (30.9%) என்று ஸ்டாடிஸ்டா கூறுகிறது. இதைத் தொடர்ந்து 18-24 வயதுடையவர்கள் (22.9% பேர்) இதனை பயன்படுத்துகின்றனர். ஜூலை 2021 நிலவரப்படி, இங்கிலாந்தில் 28 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் உள்ளனர்.

WSJ இன் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, Instagram ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த ஆராய்ச்சி வரையறுக்கப்பட்ட கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துகிறது. இளைஞர்கள் போராடக்கூடிய சிக்கலான மற்றும் கடினமான பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது நிரூபிக்கிறது. மேலும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கு உதவ நாங்கள் அனைத்து வேலைகளையும் செய்கிறோம். மனநலத்தில் சமூக ஊடகங்களின் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி "கலவையானது" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் நல்வாழ்வில் சமூக ஊடகங்களின் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி கலக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் சொந்த ஆராய்ச்சி வெளிப்புற ஆராய்ச்சியை பிரதிபலிக்கிறது. சமூக ஊடகங்கள் இயல்பாகவே மக்களுக்கு நல்லது அல்லது கெட்டது அல்ல. பலருக்கு ஒரு நாள் உதவியாகவும், அடுத்த நாள் சிக்கலாகவும் இருக்கும். மக்கள் சமூக ஊடகங்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், அதைப் பயன்படுத்தும் போது அவர்களின் மனநிலையும் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய இந்த தளம் வேலை செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Facebook Instagram Users
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment