scorecardresearch

தடுப்பூசிகளுக்கு காப்புரிமம் நீக்குவதால் ஏழை, நடுத்தர வருமான நாடுகள் எவ்வாறு பயனடையும்?

அமெரிக்காவின் அறிவுசார் உரிமத்திற்கான தள்ளுபடி அறிவிப்பு கடந்த ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்மொழிவிலிருந்து வந்தது.

தடுப்பூசிகளுக்கு காப்புரிமம் நீக்குவதால் ஏழை, நடுத்தர வருமான நாடுகள் எவ்வாறு பயனடையும்?

 Aanchal Magazine , Prabha Raghavan

Intellectual property waiver for Covid-19 vaccines : புதன்கிழமை அன்று தடுப்பூசிகளுக்கான காப்புரிமம் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது. அசாதாரண சூழலில் அசாதாரண நடவடிக்கைகளுக்கான அழைப்பு இது என்று கூறியது. அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியான கேத்ரின் டை என்பவர் அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்புடன் உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை “text-based negotiations” தொடரும் என்று அறிவித்திருந்தார்.

“text-based negotiations” என்பது பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நபர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரிலான வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டு பிறகு ஒருமித்த கருத்தில் முடிவு எட்டப்படுவது நீண்ட கால நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தனிநபர் சந்திப்பு மற்றும் ஆன்லைன்களில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் ஒருமித்த அடிப்படையிலான தன்மை மற்றும் இதில் இருக்கும் சிக்கல்கள் ஆகியவற்றின் காரணமாக இந்த பேச்சுவார்த்தை நேரம் எடுக்கும் என்று அவர் கூறினார்.

உலக வர்த்தக அமைப்பில் இருக்கும் 164 நாட்டினரும் இந்த வரைவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் மேலும் எந்த நபர் வேண்டுமானாலும் வீட்டோ தெரிவிக்கலாம். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் இந்த காப்புரிமம் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆலோசனை நடத்தும் என்று தெரிவித்துள்ளது.

கோவிட் தடுப்பூசிகளுக்கான அறிவுசார் காப்புரிமம் ரத்து என்றால் என்ன?

ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா, நோவாவாக்ஸ், ஜான்சன் & ஜான்சன் மற்றும் பாரத் பயோடெக் போன்ற கோவிட் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்களுடன் (ஈயூஏ) நடுத்தர வருமானம் பெரும் நாடுகளில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் ஒன்றாகும்.

தற்போது அனைத்து உற்பத்தியும் அதிக வருமானம் பெறும் நாடுள்கள் மீது கவனம் செலுத்தியுள்ளது. டுத்தர வருமான நாடுகளின் உற்பத்தி உரிமம் அல்லது தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம் நடத்தி வருகிறது. உற்பத்தி திறன்களை அதிகரிப்பது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும் என்று மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த காப்புரிமம் நீக்கத்திற்கு எதிராக அறிவித்து வருகின்றனர்.

பெரும்பாலான ஆய்வாளர்கள் இதற்கு குறைந்தது சில மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள்; இந்த ஒப்பந்தம் நவம்பர் இறுதியில் உலக வர்த்தக அமைப்பின் அடுத்த மாநாட்டில் விவாத பொருளாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் அறிவுசார் உரிமத்திற்கான தள்ளுபடி அறிவிப்பு கடந்த ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்மொழிவிலிருந்து வந்தது. அந்த முன்மொழிவு சோதனை கண்டறியும் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட அனைத்து கோவிட் தலையீடுகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியது.

இந்த உரிமம் நீக்க விவகாரத்தில் திட்டத்தில் முன்னோக்கி செல்லும் பிற தலையீடுகளும் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். தொற்றுநோய்க்கு மத்தியில், இந்த தலையீடுகளுக்கான சாத்தியமான அணுகல் உற்பத்தி திறன் மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளின் மூலப்பொருட்களை பெறுவதற்கான முனைப்பு ஆகியவற்றால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கே. ஸ்ரீநாத் ரெட்டி அறிவித்தார். கனடா, தென் கொரியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் காப்புரிமை தள்ளுபடி பெற முடியுமானால் கோவிட் தடுப்பூசிகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

தள்ளுபடிக்கு எதிராக வைக்கப்படும் வாதங்கள் என்ன?

மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட மருந்து நிறுவனங்கள் எழுதிய கடிதம் ஒன்றில் முன்மொழியப்பட்ட தள்ளுபடியை எதிர்த்தன. தொற்றுநோய்க்கான உலகளாவிய பதிலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும், புதிய வைரஸ் பிறழ்வை தடுக்க செய்துவரும் முயற்சிகள் உட்பட அனைத்தும் தடுப்பூசி பாதுகாப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் தகவல் பகிர்வுக்கு ஒரு தடையையும் ஏற்படுத்தக்கூடும். மேலும் காப்புரிமம் நீக்கம் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காது என்று கூறியிருந்தனர்.

ஸ்கை நியூஸுக்கு பேட்டி அளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், காப்புரிமம் பாதுகாப்பு விதிகளை மாற்றுவதற்கும் கோவிட் -19 தடுப்பூசி தொழில்நுட்பங்களைப் பகிர்வதற்கும் எதிராக தன்னுடைய கருத்துகளை பதிவு செய்தார். காப்புரிமம் தற்போது பிரச்சனை இல்லை. சில செயலற்ற தடுப்பூசி தொழிற்சாலைகள் ஒழுங்கற்ற ஒப்புதழுடன் மாயமாக தடுப்பூசிகளை உருவாக்குவது போன்று அது இல்லை என்று தெரிவித்தார். தடுப்பூசி தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளாததற்கு “ஒரு நிறுவனம் தடுப்பூசிகளை வளரும் நாட்டிற்கு நகர்த்துவது சாத்தியமில்லை” என்று காரணம் கூறி இந்தியாவை மேற்கோள் காட்டினார். எங்களின் மானியம் மற்றும் நிபுணத்துவம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்.

தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்யும் திறன் இல்லை என்ற வாதம் பொதுவான மருந்துகளுக்கான காப்புரிம விவகாரத்தில் வைத்தது போன்றே தற்போதும் வைக்கலாம் என்று மருந்துநிறுவனங்கள் செயல்படுகின்றன. திறன் மற்றும் தரத்தை கேள்விக்குள்ளாக்குவார்கள். ஆனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளன, மேலும் தரத்தை எப்போதும் மதிப்பிட முடியும். 1972 மற்றும் 2005 க்கு இடையில், இந்தியா தயாரிப்பு காப்புரிமையை விட செயல்முறை காப்புரிமையை (process patent)-ஐ ஏற்றுக்கொண்டது, மேலும் ஒரு ஜெனரிக் மருந்துகளுக்காக ஒரு பெரிய தொழிற்சாலையையே இது உருவாக்கியது. இந்தியாவில் தங்கள் தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதில் மேற்கத்திய நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்ற போது, சொந்த தயாரிப்பின் தரம் குறைவாக இருக்கும் என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார் ரெட்டி.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா வைத்த முன்மொழிவில் என்ன இடம் பெற்றிருந்தது?

அக்டோபர் 2020 இல், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு குறைந்த விலையில் மருத்துவ தயாரிப்புகளை சரியான நேரத்தில் பெறுவதை தடுக்கக்கூடிய அறிவுசார் சொத்துரிமை ( Trade Related Aspects of Intellectual Property Rights (TRIPS)) ஒப்பந்தத்தின் வர்த்தக தொடர்பான அம்சங்களின் சில நிபந்தனைகளைத் தள்ளுபடி செய்யுமாறு இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக வர்த்தக அமைப்பைக் கேட்டுக் கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் இரண்டாம் பாகத்தில் இருக்கும் அமல்படுத்துதல், விண்ணப்பித்தல் மற்றும் என்ஃபோர்ஸ்மெண்ட் பிரிவுகளில் தள்ளுபடியை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த பிரிவுகள் – 1, 4, 5 மற்றும் 7 – பதிப்புரிமை மற்றும் அது தொடர்பான உரிமைகள், தொழில்துறை வடிவமைப்புகள், காப்புரிமைகள் மற்றும் வெளியிடப்படாத தகவல்களின் பாதுகாப்பு தொடர்பானவை. டிரிப்ஸ் ஒப்பந்தத்தில் கிடைக்கும் நெகிழ்வுத்தன்மையைப் பயன்படுத்தும் போது வளரும் நாடுகள் குறிப்பாக நிறுவன மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என்று அந்த முன்மொழிவு கூறியது.

காப்புரிமம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன?

காப்புரிமை என்பது ஒரு சக்திவாய்ந்த அறிவுசார் சொத்துரிமையைக் குறிக்கிறது, மேலும் இது ஒரு கண்டுபிடிப்பாளருக்கு ஒரு வரையறுக்கப்பட்ட, குறிப்பிட்ட நேரத்திற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பிரத்யேக ஏகபோகமாகும். கண்டுபிடிப்பை மற்றவர்கள் நகலெடுப்பதைத் தடுக்க இது சட்ட உரிமையை வழங்குகிறது. காப்புரிமைகள் செயல்முறை காப்புரிமைகள் அல்லது தயாரிப்பு காப்புரிமைகளாக இருக்கலாம்.

தயாரிப்பிற்கான காப்புரிமம் என்பது இறுதி பொருளுக்கான காப்புரிமம் ஆகும். வேறெந்த வழிமுறைகளை பயன்படுத்தி அந்த பொருளை உற்பத்தி செய்வது போன்ற அனைத்து வகையான தயாரிப்புகளையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கண்டுபிடிப்பாளர் தவிர வேறு யார் செய்வதையும் தடுக்கிறது. ஆனால் செயல்முறை காப்புரிமையில் காப்புரிமைதாரரைத் தவிர வேறெந்த நபரும் அந்த செயல்முறையில் மாற்றங்களை உருவாக்கி அதற்கு தயாரிப்பு உரிமம் பெறுவதற்கான காப்புரிமத்தை பெற முடியும். 1970 களில் இந்தியா தயாரிப்பு காப்புரிமையிலிருந்து செயலாக்க காப்புரிமையை நோக்கி நகர்ந்தது, இது உலகளாவிய அளவில் பொதுவான மருந்துகளின் குறிப்பிடத்தக்க உற்பத்தியாளராக மாற இந்தியாவுக்கு உதவியது, மேலும் 1990 களில் சிப்லா போன்ற நிறுவனங்களுக்கு ஆப்பிரிக்காவிற்கு எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகளை வழங்க அனுமதித்தது.

காப்புரிமம் தவிர வேறென்ன பிரச்சனைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தடையாக உள்ளது?

The International Federation of Pharmaceutical Manufacturers & Associations (IFPMA) என்ற அமைப்பு தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தடையாக இருக்கும் சவால்களை சுட்டிக்காட்டியது. வர்த்தக தடைகள், விநியோக சங்கிலிகளில் பிரச்சனை, மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விநியோக சங்கிலிக்கு தேவைப்படும் மூலப்பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் ஏழைநாடுகளுக்கு பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை வழங்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டியது.

மூலப்பொருட்களின் பற்றாக்குறை மிக முக்கிய பிரச்சனையாகும். சில உற்பத்தியாளர்கள் மிக குறிப்பிட்டு சொல்லக் கூடிய விநியோகஸ்தர்களிடம் இருந்தே பொருட்களை பெறுகின்றனர். மாற்று ஆதாரங்கள் குறைவாகவே உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகள் முக்கியமான மூலப்பொருட்களை ராணுவ உற்பத்தி சட்டத்தின் மூலம் தடுத்து வைத்துள்ளன.

இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜே அண்ட் ஜே தடுப்பூசியை இந்தியாவில் உருவாக்கும் பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் இயக்குநர் மஹிமா டட்லா, அமெரிக்க சப்ளையர்கள் உலகளாவிய வாடிக்கையாளர்களிடம் இந்தச் சட்டத்தின் காரணமாக தங்கள் ஆர்டர்களாஇ நிறைவேற்ற முடியாமல் உள்ளனர் என்று ஃபைனான்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.

அதார் பூனவல்லா போன்ற தடுப்பூசி தயாரிப்பாளர்கள் ராணுவ பாதுகாப்பு சட்டம், ப்ளாஸ்டிக் பைகள், வடிப்பான்கள், நோவாவாக்ஸ் தடுப்பூசிகளை தயாரிக்க தேவைப்படும் சில இடைப்பொருட்கள் ஆகியவற்றை தடுத்துள்ளது. ஏப்ரல் 25 அன்று, வெள்ளை மாளிகை, அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் சீரமின் உற்பத்தியான கோவிஷீல்ட் தயாரிப்பதற்கு அவசரமாக தேவைப்படும் குறிப்பிட்ட மூலப்பொருட்களின் ஆதாரங்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது, மேலும் அவை உடனடியாக இந்தியாவுக்குக் கிடைக்கும் என்று கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Intellectual property waiver for covid 19 vaccines