சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 2023- இந்தாண்டு “டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்ற கருப்பொருளில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. (DigitALL: Innovation and technology for gender equality)
ஐக்கிய நாடுகள் சபை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது. டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் அனைவரது பங்கு பற்றிய விவாதங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
IWD பெண் தொழிலாளர் இயக்கங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், பெண்கள் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகல் இல்லாததால், அவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பரந்த துறைகளில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
STEM துறைகளில் பெண்கள் குறைவு ஏன் முக்கியத்துவமானது?
STEM துறை வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. ஐடி துறை, சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் துறை, மருத்துவ துறை ஆகியவைகளில் பெண்கள் பங்கு குறைவாக உள்ளது. இந்த குறைவான பிரதிநிதித்துவம் கவனிக்கத்தக்கது, ஏனெனில் STEM துறைகளின் வளர்ச்சிகள், குறிப்பாக தொழில்நுட்பத்தில், நவீன வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பெரிய அளவில் வடிவமைக்கின்றன. ChatGPT போன்ற சாட்போட்கள் பல்வேறு அமைப்புகளில் தொழிலாளர்களை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சமூக ஊடகங்கள் எங்கும் அடையாளங்கள் மற்றும் பொது உரையாடல்களை வடிவமைக்கிறது.
மேலும், தொழில் நுட்ப ரீதியாக இந்த துறைகள் பொதுவாக தொழிலாளர்களுக்கு லாபகரமானவையாக உள்ளது. இந்த துறை சார்ந்த ஊழியர்கள் மற்ற துறைகளில் வேலை செய்பவர்களை விட மூன்றில் இரண்டு பங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று பியூ ஆராய்ச்சி மையம் கூறுகிறது. . எனவே, STEM இல் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம் ஒட்டுமொத்த பாலின ஊதிய இடைவெளியையும் பாதிக்கிறது. பெண்கள் பொதுவாக குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் அதிகமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் STEM துறைகள் போன்ற அதிக ஊதியம் பெறும் வேலைகளில் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.
STEM இல் ‘பாலின இடைவெளி’ என்ன?
உலகளவில், 35 சதவீத ஆண்களுடன் ஒப்பிடுகையில், உயர்நிலைக் கல்வியில் 18 சதவீத பெண்கள் STEM துறை படிப்புகளைப் படிக்கின்றனர். இதில் STEM துறைகளுக்குள்ளே பாலின இடைவெளி உள்ளது. பெண்கள் இயற்கை அறிவியல் சார்ந்த படிப்புகள் படிக்கின்றனர். அதே நேரத்தில் அதிகமான ஆண்கள் பொறியியல், உற்பத்தி மற்றும் கட்டுமானம் சார்ந்த படிப்புகளைப் படிக்கின்றனர்.
இந்தியாவில், பொறியியல் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைவாக உள்ளது. 2020-2021 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் தரவுகளின்படி, யுஜி, பிஜி, எம்ஃபில் மற்றும் பிஎச்டி இன்ஜினியரிங் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக, மொத்த மாணவர் சேர்க்கை 36,86,291 ஆக உள்ளது. .
ஆனால் இளங்கலை, முதுகலை, எம்ஃபில் மற்றும் பிஎச்டி நிலைகளில் அறிவியல் படிப்புகளில் ஆண்களை விட பெண்கள் 53 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர். இருப்பினும் இவைகள் வேலைவாய்ப்பில் அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல.
இந்த இடைவெளி ஏன்?
பெண்கள் எவ்வாறு தங்கள் வேலையைத் தேர்வு செய்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் விருப்பங்கள் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
யுனிசெஃப் நிறுவனம் பாடத்திட்டங்களில் உள்ள பாலின சார்புகளை சுட்டிக்காட்டுகிறது.
உதாரணமாக, இந்தியாவில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்புத்தகங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான விளக்கப்படங்கள் ஆண்களாகவும், 6 சதவீதம் மட்டுமே பெண்களாகவும் உள்ளன. இங்கிலாந்தில், நான்கில் ஒரு பங்கிற்கும் மேற்பட்ட பெண்கள் தொழில்நுட்பத் துறையில் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறுகின்றனர். வெறும் 22 சதவீத பெண்கள் மட்டுமே இத்துறைகளில் பிரபலமானவர்களாக உள்ளனர் என்று கூறுகின்றனர்.
அமெரிக்காவில், 26 சதவீத டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் நிறுவனர் உள்ளார். அதே ஐரோப்பாவில் 21 சதவீத தொழில்நுட்ப நிறுவனங்களை பெண்கள் வழிநடத்துகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு பெண்களுக்கு அதிக முன்மாதிரிகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/