ஐபிஎல் 2021 : கொரோனா பதற்றம் கிரிக்கெட் வீரர்களை எவ்வாறு பாதிக்கிறது?

கொரோனா உயிர் பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளே இருப்பவர்கள் “அநேகமாக நாட்டின் பாதுகாப்பான மக்கள்” என்று கூறினார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இதில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.52 லட்சமாக பதிவாகியுள்ளது. இந்த பாதிப்புக்கு இடையே கடந்த ஏப்ரல் 9-ந் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அனைத்து அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில்,டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருவதால், அவர்களுக்கு ஆதராவாக அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதால் தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து 3 ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து நாடு திரும்பியுள்ளனர். இதில் அவர்கள் ‘தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். கொரோனா உயிர் பாதுபாப்பு பயோ பபுள் காரணமாக இங்கிலாந்து வீரர் ஒருவரும் வெளியேறியுள்ளா. இந்நிலையில், இதுவரை சென்னை மற்றும் மும்பையில் நடந்துவந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து டெல்லியில் முதல் போட்டி புதன்கிழமை (நாளை), தொடங்குகிறது. இந்த போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.  கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி நகரம் பெரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எத்தனை வீரர்கள் வெளியேறிவிட்டார்கள்?

ஐபிஎல் தொடரில் இருந்து இதுவரை ஐந்து வீரர்கள் வெளியேறியுள்ளனர். இதில் அஸ்வின் தவிர, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை, அதே அணியின் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில், நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) அணியில் இருந்து லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக வெளியான ட்விட்டர் பதிவில், தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

கொரோனா பயோ பாதுகாப்பு குறித்து அக்கறை உள்ளதா?

கடந்த இரு தினங்களுக்கு முன்பு (ஏப்ரல் 24) செய்தியாளர்களை சந்தித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், கொரோனா உயிர் பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளே இருப்பவர்கள் “அநேகமாக நாட்டின் பாதுகாப்பான மக்கள்” என்று கூறினார். அதே சமயம், “இங்கே என்ன நடக்கிறது என்பதை விட வெளியே என்ன நடக்கிறது என்பது பற்றிய சிந்தனை அதிகமாவிட்டது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுகளுக்கு தடை விதித்துள்ளனர். இதனால் இது ஐபிஎல் முடிந்த பிறகு வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவது குறித்து கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்தியாவின் தொற்றுநோய்களின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும், நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) உதவி பயிற்சியாளர் டேவிட் ஹஸ்ஸி கூறுகையில், “எல்லோரும் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வர முடியுமா என்று கொஞ்சம் பதட்டமாக இருக்கிறார்கள். இன்னும் சில ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வருவதில் கொஞ்சம் பதட்டமாக இருப்பார்கள் என்று நான் தைரியமாகக் கூறுகிறேன், ”என்று தெரிவித்துள்ளார்..

அஸ்வின் ஏன் வெளியேறினார்?

நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டிக்கு பின்னர் டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர், அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். எனது குடும்பம் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது., இந்த கடினமான காலங்களில் நான் அவர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். கொரோனா தொற்று பாதிப்பு குறையும் பட்சத்தில், தான் மீண்டும் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி “டெல்ஹிகாபிட்டல்ஸ்” என பதிவிட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, அஸ்வின் மனைவி ப்ரித்தி, கொரோனா வைரஸ் தங்கள் வீட்டு வாசலை அடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அணியில் களத்திற்கு வெளியே ஒரு “பெரிய பகுதி” நிலைமையைச் சுற்றி வருகிறது. “அணியில் வீரர்கள் மற்றும் / ஆதரவு ஊழியர்கள் கொரோனா பாதுகாப்புவளையத்தில் உள்ளனர். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது எளிதானது அல்ல, ”என்றும் அவர் கூறினார்.

கொரோனா பாதுகாப்பு வளையம் ஒரு காரணமாக இருக்க முடியுமா?

ஆம். ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் லிவிங்ஸ்டன் கொரோனா பாதுகாப்பு பயோ பபிள் காரணம் காட்டி நாடு திரும்பினார். இது குறித்து ராஜஸ்தான் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், “லியாம் லிவிங்ஸ்டன் நேற்றிரவு நாடு திரும்பினர்.  அவரது முடிவை நாங்கள் புரிந்துகொண்டு மதிக்கிறோம், எங்களால் முடிந்தவரை அவருக்கு ஆதரவளிப்போம் ”என்று பதிவிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு சர்வதேச கேப்டனும் கொரோனா பாதுகாப்பு பயோ பபிள் வாழ்க்கை எவ்வளவு கடினமானது மற்றும் மனநல பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி பேசியுள்ளார். ஐ.பி.எல்-க்கு முந்தைய இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது இங்கிலாந்து அணி நிர்வாகம் விமர்சனங்களை புறக்கணித்து சுழற்சி முறையில் வீரர்களை களமிறக்கியதற்கு இதுவும் ஒரு காரணம். ஐபிஎல் டி 20 லீக்கைப் பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், போட்டி துவங்குவதற்கு முன்பே தொடரில் இருந்து விலகினார்.  அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் விலகிய நிலையில், பல இங்கிலாந்து வீரர்கள் கடந்த குளிர்காலத்தில் பிக் பாஷ் தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நகரின் ஊரடங்கு காலத்தை மே 3 வரை நீடித்துள்ளார். கடந்த சில நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் “36 சதவீதமாக” உள்ளது. டெல்லியில் நடைபெறும் போட்டிகளை பிசிசிஐ முன்னேற முடிவு செய்துள்ளது. இந்திய வாரியம் அதன் உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகள் , தினசரி சோதனைகள் மற்றும் உயிர் குமிழி செயல்படுத்துபவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. மேலும், விமான நிலையங்களில் தனி ஐபிஎல் செக்-இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl cricket 2021 how covid anxiety is affecting cricketers

Next Story
கொரோனா இரண்டாம் அலையில் என்ன மாறுபட்டுள்ளது?Explained: What has changed in second wave of Covid-19?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com