scorecardresearch

சாம் கர்ரன், கிரீன், ஸ்டோக்ஸ்… ஐ.பி.எல். 2023 கோடீஸ்வர வீரர்கள் இவர்கள்!

சாம் கர்ரன் மிகச்சிறந்த இடது கை ஸ்விங் பந்துவீச்சாளர். ஏமாற்றும் நிப் மற்றும் முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பதில் திறமை கொண்டவர்.

IPL latest millionaires Tamil News
Sam Curran is arguably the hottest prospect in cricket currently (AP Photo/Asanka Brendon Ratnayake)

IPL 2023 auction – latest millionaires Tamil News: இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலம் பல ஆண்டுகளாக பல வீரர்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் 5 வீரர்கள் மில்லியன் டாலர் மதிப்பைக் கடந்துள்ளனர். மேலும் பலர் லாபகரமான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர். இதில், ஆல் ரவுண்டர்களான சாம் கர்ரன், கேம் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஐபிஎல்லின் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களாக மாறியுள்ளனர்.

தற்போது, ஐபிஎல் ஏலத்தின் புதிய கோடீஸ்வரர்களைப் பற்றி பார்ப்போம்.

சாம் கர்ரான் (பஞ்சாப் கிங்ஸ் ரூ.18.5 கோடி)

பஞ்சாப் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கர்ரானுக்காக அதிக தொகையை செலவழித்தது. அது ஐபிஎல் ஏல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகையாகவும் இருந்து போனது. தற்போது தரமான ஃபார்மில் இருக்கும் அவர் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அவரது சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து டி20 உலக கோப்பையை வென்றது.

24 வயதான சாம் கர்ரன் ஒரு திறமையான இடது கை ஸ்விங் பந்துவீச்சாளர். ஏமாற்றும் நிப் மற்றும் முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பதில் திறமை கொண்டவர். அவரது இடது கை அங்கிள் மற்றும் இயற்கையான ஸ்விங் அவரை சமாளிக்க ஒரு தந்திரமான பந்துவீச்சாளராக ஆக்குகிறது. சமீபத்திய உலகக் கோப்பை டி -20 தொடரில், அவரது சராசரி 11.38 ஆகவும், 6.52 என்ற சிறப்பான எக்கனாமியையும் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் பவர்பிளேயில் நிறைய விக்கெட்டுகளை எடுத்தார். அவரது ஆரம்ப வேகத்தாக்குதல் இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கத்தை பெற்றுத் தந்தது.

மறுபுறம், சாம் கர்ரன் ஒரு திறமையான பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார். அவரது இடது கை மற்றும் எளிமையான அடிக்கும் திறன் அவரை ஒரு சரியான சூழ்நிலை ஹிட்டர் ஆக்குகிறது. அவரது கன் பீல்டிங் திறன்களுடன், அவர் உலக கிரிக்கெட்டின் முக்கிய வீராக இடம் பிடிக்கிறார்.

கேமரூன் கிரீன் (மும்பை இந்தியன்ஸ் ரூ.17.5 கோடி)

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனுக்காக மீதமுள்ள 85 சதவீத பணத்தை மும்பை இந்தியன்ஸ் செலவழித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ள கிரீன் அனைத்து ஃபார்மெட்டுகளிலும் களமாடி வருகிறார். இந்தாண்டில் இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால், அவருக்கான ஐ.பி.எல் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.

Cameron Green raising his bat after a half century
 For many fans, Cameron Green is Australia’s next big cricket superstar (AP)

கிரீன் ஒரு அற்புதமான தடகள உடலமைப்பை கொண்டார். அவரால் பவர்-ஹிட்டிங் ஷாட்களை எளிதியில் விளையாட முடியும். இதுபோன்ற டி20 தொடர்களுக்கு அவர் இன்னும் புதியவர் என்றாலும், அவரின் தரமான பேட்டிங்கால் அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுக்க முடியும். இந்தியாவுக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில், அவர் 39.33 சராசரியிலும் 214.54 என்ற சூப்பர்மேன் ஸ்ட்ரைக் ரேட்டிலும் 118 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும், அவரது பந்துவீச்சு இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. எதிர்காலத்தில் வெற்றிபெற அவருக்கு நிச்சயமாக நிறைய துருப்புகள் இருந்தாலும், அவர் தனது டி20 லைன் மற்றும் லெந்த்தை பிடிக்கவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், அவர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் கூடுதல் பவுன்ஸ்களை வீசுகிறார்.

மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை, இது எதிர்காலத்தை மனதில் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம் என்றே கூறலாம். சில நம்பிக்கைக்குரிய கூறுகளைக் கொண்ட ஒரு வீரராக அவர்கள் கிரீனை பார்க்கிறார்கள். அவர் ஏற்கனவே சில சாத்தியக்கூறுகளைக் காட்டியுள்ள நிலையில், அவர் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையை அவர் திருப்பிக் கொடுப்பாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

பென் ஸ்டோக்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 16.25 கோடி)

பென் ஸ்டோக்ஸ் ஒரு டி20 ஸ்பெஷலிஸ்டாக இல்லை என்றாலும், எதிரணிகளால் அவரை குறைத்து மதிப்பிட முடியாது. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகப் கோப்பை போட்டியில், முக்கியமான சில ஓவர்களை வீசி இருந்தார். மேலும், தனது சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்துக்கு இரண்டு முக்கியமான வெற்றிகளை அவர் தேடி தந்தார்.

நிச்சயமாக டி20-யில் அவர் பல்துறை வித்தகர் என்று குறிப்பிடலாம். அவர் டாப் ஆடரில் பேட்டிங் செய்தாலும், அவரது சிறந்த இடம் ஃபினிஷர் ரோல் தான். அவரால் ஸ்பின் மற்றும் வேகம் இரண்டையும் வெறித்தனத்துடன் அடித்து நொறுக்க முடியும். அவரது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் 25 என்ற சராசரியில் 130 ஸ்டிரைக் ரேட்டில் அடித்துள்ளார். இது நிச்சயமாக அவரது மேட்ச்-வின்னிங் குணங்களை குறைத்து மதிப்பிடுகிறது.

முன்னர் குறிப்பிட்டது போல ஸ்ரோக்ஸ் ஒரு பயனுள்ள 5வது பந்துவீச்சு விருப்பம் மற்றும் ஒரு அற்புதமான ஃபீல்டர். அவர் 2017 சீசனில் 12 விக்கெட்டுகள் மற்றும் 316 ரன்கள் எடுத்த போது ஐபிஎல்லின் ‘மிகவும் மதிப்புமிக்க’ வீரராக முடிசூட்டப்பட்டார். அவரின் தலைமைப் பண்புகளைப் பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே முயற்சிக்கும். எம்எஸ் தோனி அவர் ஓய்வுபெறும் போது, அவருக்கு பதிலாக ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம்.

நிக்கோலஸ் பூரன் (லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் ரூ. 16 கோடி)

நிக்கோலஸ் பூரன் விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். அதே நேரத்தில் அவரது வாழ்க்கையில் எண்ணற்ற தாழ்வுகளையும் பள்ளங்களையும் கடந்து வந்துள்ளார். இருப்பினும், அவரின் திறன்மிகுந்த ஆற்றல் அவரை ஐபிஎல் ஏலங்களில் நிரந்தர விருப்பமாக மாற்றியுள்ளது. லக்னோ அணிக்கு அவர் மிடில் ஆர்டரில் ஒரு முக்கியமான வீரராகவும், விக்கெட் கீப்பிங் விருப்பமாக இருப்பார்.

Pooran playing a shot
Pooran recently stepped down from West Indian captaincy after a disastrous World Cup campaign (West Indies board)

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அவரது கடைசி சீசன் குறைவாக மதிப்பிடப்பட்டது. பூரன் 140 ஸ்டிரைக் ரேட்டில் 300 ரன்களுக்கு மேல் எடுத்தது இருந்தார். இருப்பினும், அவர் பெருமை பேசுவதற்கு “பெரிய செயல்திறன்” எதுவும் இல்லை. குறிப்பிடத்தக்க வகையில், பஞ்சாப் கிங்ஸுடனான அவரது 2020 சீசன் ஒரு பேரழிவை ஏற்படுத்தியது: அவர் சராசரியாக 8 க்கு கீழ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 110 க்கு மேல் அடித்தார்.

லக்னோ அணியைப் பொறுத்தவரை, பூரன் என்பது பெரும் தலைகீழான ஒரு சூதாட்டமாகும். ஆனால் அது பின்வாங்கக்கூடிய சாத்தியமும் உள்ளது. அது பலன் தருமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

ஹாரி புரூக் (சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.13.25 கோடி)

23 வயதான இங்கிலாந்து பேட்டிங் சென்சேஷன் ஹாரி ப்ரூக் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் அறிமுகம் செய்ய உள்ளார். அவர் தனது சிறு வயதிலேயே கிட்டத்தட்ட 100 தொழில்முறை டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கூடவே அவர் ஒரு ஆக்ரோஷமான வலது கை பேட்டர் ஆவார். ஆரம்பத்திலிருந்தே வேகமாக ஸ்கோரை அடிக்கும் திறனுடன், தற்போது அவர் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அமைப்பில் முக்கியமான பகுதியாக உள்ளார்.

Brook playing a paddle sweep
 Harry Brook is a 360 degree player, with the ability to hit the ball to all parts of the ground (AP)

அவரது ஒட்டுமொத்த டி20 புள்ளிவிவரங்கள் 33.7 என்ற நல்ல சராசரியுடன் கிட்டத்தட்ட 150 ஸ்ட்ரைக் ரேட்டைப் பெருமைப்படுத்துகின்றன. இதன் பொருள் ப்ரூக்கின் விளையாட்டு ஸ்ட்ரைக் ரேட் மற்றும் நிலைத்தன்மைக்கு இடையே ஒரு சரியான அமைப்பு உள்ளது. ஐதராபாத் அணிக்கு அவர் டாப் அல்லது மிடில் ஆர்டரில் மிகவும் தேவையான தரத்தை வழங்குவார்.

ஐபிஎல்-ல் அறிமுகமான உற்சாகத்தில், ஹாரி புரூக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் தேர்வு செய்யப்பட போது எனது பாட்டி அழ ஆரம்பித்தார். மிக்க நன்றி SRH”. என்றார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Ipl latest millionaires tamil news

Best of Express