ஆகஸ்ட் 27ம் தேதி முதல் பாகிஸ்தான் இந்தியாவுடன் அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்தியது. தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது குறித்து கூருகையில், " எந்தமுன் அறிவிப்புமின்றி பாகிஸ்தானின் ஒருதலை பட்சமாக இந்த முடிவை எடுத்துள்ளது , இந்த முடிவு சர்வதேச விதிமுறைகளுக்கு நேரடி முரண்பாடாக உள்ளது என்றார். பாகிஸ்தான் பாகிஸ்தான் தான், நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் " என்று அழுத்தமாய் சொல்லி தனது கருத்தை முடித்தார்.
இருநாடுகளுக்கு இடையில் இருக்கும் அஞ்சல் பரிமாற்றங்கள் எவ்வாறு நடக்கின்றன, இதை யார் நெறிமுறைப் படுத்துவது? பாகிஸ்தான் செயலுக்கு சர்வதேச விதிமுறைகள் என்ன சொல்கிறது? என்பதை இங்கே காணலாம்.
ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையிலான அஞ்சல் பரிமாற்றத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?
அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union) என்பது ஒரு பன்னாட்டு அமைப்பு. இது உறுப்பு நாடுகளிடையே அஞ்சல் கொள்கைகளையும், சர்வதேச அஞ்சல் பரிமாற்றத்திற்கான விதிகளையும், சர்வதேச அஞ்சல் சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கின்றது. 1874 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றியம், உலகம் முழுவதும் 6.40 லட்சம் தபால் நிலையங்களை ஒழுங்குபடுத்தி வருகிறது. இந்த பன்னாட்டு அமைப்பில் இந்தியா ஜூலை 1, 1876 ல் உறுப்பினராக சேர்ந்தது. பாகிஸ்தான் நவம்பர் 10, 1947 இல் பாகிஸ்தான் இந்த அமைப்பில் இணைந்தது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அஞ்சல் பரிமாற்றம் எப்படி இருந்தது?
இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் அனைத்து வெளிநாட்டு தபால்களும் இந்திய அரசாங்காத்தால் இயக்கப்படும் 28 வெளிநாட்டு தபால் அலுவலகங்கள் மூலம் கையாளப்படுகின்றன. டெல்லி, மும்பையிலுள்ள அலுவகங்கள் குறிப்பாக பாகிஸ்தானுக்கான அஞ்சல்களைக் கையாள நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் தற்போதைய நடவடிக்கைக்கு முன்புவரை, அஞ்சல்கள் கிட்டத்தட்ட தினமும் பரிமாறப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான இணைப்பு இல்லாததால், சவுதி அரேபியா விமான பாதை வழியாக அஞ்சல் அனுப்பப்பட்டது. விமான நிலையத்தில் சுங்க இலாகா சோதனைக்குப் பிறகு இரு நாடுகளின் அஞ்சல் பைகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன" என்று இந்தியா அஞ்சல் துரையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் உறுப்பு நாடு ஒருதலைப்பட்சமாக மற்றொரு நாட்டோடு அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்த முடியுமா?
அனைத்துலக அஞ்சல் ஒன்றிய விதிகளின் கீழ், ஒரு நாடு (தற்போது, பாகிஸ்தான் ) மற்ற நாட்டோடு அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்தால், நிறுத்தப்பட்ட நாட்டின் ஆபரேட்டருக்கு உடனடியாக (இந்திய அஞ்சல் துறை) அறிவிக்க வேண்டும். முடிந்தால், சேவைகள் எந்த காலளவு நிறுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தையும் சொல்ல வேண்டும் . அனைத்துலக அஞ்சல் ஒன்றிய நிர்வாகத்திடம் அறிவிக்கப்பட வேண்டும். அனைத்துலக அஞ்சல் ஒன்றிய நிர்வாகம் 2018 ல் வெளியிட்ட கையேட்டின் பிரிவு 17-143 ல் இது குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.
பின், பாகிஸ்தான் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் நெறிமுறையைப் பின் பற்ற வில்லையா?
இல்லை. ஆகஸ்ட் 23ம் அன்று, பாகிஸ்தானின் சுங்க மற்றும் தபால் துறைகள் இந்தியாவுடனான தபால் பரிமாற்றத்தை நிறுத்த உள் உத்தரவை பிறப்பித்து. விமான நிலையங்கள் பாகிஸ்தானுக்கான அஞ்சல் பைகளை எடுப்பதை நிறுத்தியதோடு , அவற்றை மீண்டும் எடுத்துச் செல்லும்படி இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தன. அதேபோன்று, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் அஞ்சல்களையும் இந்திய அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை . அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டது என்ற உத்தரவை ஆகஸ்ட் 27ம் தேதியன்று பாகிஸ்தான் தரப்பினரால் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தி வைப்பது குறித்து பாகிஸ்தான் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்திற்கு அறிவித்திருக்கிறதாஎன்பது கூட இந்தியாவிற்கு இன்னும் தெரியவில்லை . மேலும், அவர்கள் கொடுத்த உத்தரவில் எந்த காரணத்திற்காக அஞ்சல் பரிமாற்ற சேவை நிறுத்தப்பட்டது என்ற காரணத்தையும் குறிப்பிடவில்லை.
அஞ்சல்களின் தற்போதைய நிலை என்ன?
இந்திய தபால் துறையும் இப்போது பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் அஞ்சல்களை முன்பதிவு செய்வதை நிறுத்திவிட்டது. வெளிவிவகாரத் துறை அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகம் போன்றவைகளின் பதிலுக்காக இந்தியா தபால் துறை காத்திருக்கின்றது .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.