Advertisment

ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து: கோப்பர்நிக்கஸ் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் சர்வீஸ் எப்படி உதவியது?

பனிப்புயல் போன்ற சூழலில் இரவு முழுவதும் தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் சிதைவுகள் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.

author-image
WebDesk
New Update
Ebrahim Raisi

What is Copernicus Emergency Management Service, called in to locate Raisi’s chopper?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான நிலையில், ஈரானின் உதவிக்கான கோரிக்கையைத் தொடர்ந்து, தேடல் முயற்சிகளுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதன் விரைவான செயற்கைக்கோள் மேப்பிங் சேவையை செயல்படுத்தியது.

Advertisment

நெருக்கடி மேலாண்மைக்கான ஐரோப்பிய ஆணையர் ஜேன்ஸ் லெனார்சிக், X தளத்தில் ஈரானின் உதவிக்கான கோரிக்கையின் பேரில், ஈரான் அதிபர் மற்றும் அதன் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தை கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் @CopernicusEMS ரேபிட் ரெஸ்பான்ஸ் மேப்பிங் சேவையை நாங்கள் செயல்படுத்துகிறோம்’ என்று பதிவிட்டார்.

பனிப்புயல் போன்ற சூழலில் இரவு முழுவதும் தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் சிதைவுகள் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் திட்டத்தின் கீழ் வரும் அவசரகால மேலாண்மை சேவையின் (EMS) முக்கியமான கூறுகளில் ஒன்று ரேபிட் மேப்பிங் சேவையாகும்.

கோப்பர்நிகஸ் EMS என்றால் என்ன, அதன் ரேபிட் மேப்பிங் சேவை எவ்வாறு செயல்படுகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் திட்டம் என்ன?

கோப்பர்நிகஸ் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது சென்டினல்ஸ் (Sentinels) எனப்படும் செயற்கைக்கோள்களின் தொகுப்பிலிருந்து தரவுகளை சேகரிப்பதன் மூலம் பூமியையும் அதன் சுற்றுச்சூழலையும் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது பங்களிக்கும் மிஷன் (தற்போதுள்ள வணிக மற்றும் பொது செயற்கைக்கோள்கள்) மற்றும் தரை நிலையங்கள் போன்ற விண்வெளி அல்லாத மூலங்களிலிருந்தும் தரவைப் பெறுகிறது.

மதிப்பு கூட்டப்பட்ட தகவலை உருவாக்க தரவு செயலாக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகிறது, இது பல பகுதிகளில் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) இணையதளத்தின்படி நில மேலாண்மை, கடல் சூழல், வளிமண்டலம், அவசரகால பதில், பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதில் அடங்கும்.

யூசர்ஸ் தகவல்களை "முழுமையாக பொதுவெளியில் இலவசமாக" பெறுகிறார்கள் என்று இணையதளம் கூறுகிறது.

1998 இல் தொடங்கப்பட்ட, கோப்பர்நிக்கஸ் திட்டம் முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உலகளாவிய கண்காணிப்பு (GMES) என்று அழைக்கப்பட்டது.

தற்போது, ​​இது ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பு (EEA) ஆகியவற்றின் ஆதரவுடன் ஐரோப்பிய ஆணையத்தால் (EC) செயல்படுத்தப்படுகிறது.

கோப்பர்நிக்கஸ் EMS என்றால் என்ன?

Copernicus EMS ஆனது 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது, மேலும் இயற்கைப் பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட அவசரநிலைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை நிர்வகிப்பதற்கு உதவும் செயற்கைக்கோள் ரிமோட் சென்சிங் மற்றும் சிட்டு தரவு மூலங்களிலிருந்து பெறப்பட்ட புவி-இடஞ்சார்ந்த தகவல்களை (geo-spatial information) வழங்குகிறது.

சேவையில் மேப்பிங் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை என இரண்டு கூறுகள் உள்ளன.

இதில் மேப்பிங், செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் மேப்ஸ் மற்றும் பகுப்பாய்வுகளை வழங்குகிறது; பிந்தையது வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத் தீ பற்றிய விழிப்பூட்டல்களை வெளியிடுகிறது, மேலும் காட்டுத் தீ பாதிப்புகளின் உண்மையான நேர மதிப்பீட்டை வழங்குகிறது.

மேப்பிங்- ரேபிட் மேப்பிங் (RM); ஆபத்து மற்றும் மீட்பு மேப்பிங் (RRM) என இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது.

ரைசியின் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரைத் தேடுவதற்காக செயல்படுத்தப்பட்ட ரேபிட் மேப்பிங் (RM), உலகில் எங்கிலும், நாட்கள் அல்லது மணிநேரத்திற்குள் வரைபடங்களை வழங்குகிறது.

வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான வரைபடங்களை RRM வழங்குகிறது- உடனடி பதில்களுக்கு அல்ல. இது தடுப்பு, தயார்நிலை, பேரிடர் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மீட்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

ரேபிட் மேப்பிங் எவ்வாறு செயல்படுகிறது?

வரைபடங்களை விரைவாக வழங்க, சேவையானது தேவைப்படும் போது செயற்கைக்கோள் படங்கள், புவியியல் தரவு மற்றும் சமூக ஊடகங்களைப் பெறுகிறது, செயலாக்குகிறது மற்றும் பகுப்பாய்வு செய்கிறது.

கோப்பர்நிகஸ் வலைத்தளத்தின்படி, RM சேவை நான்கு வெவ்வேறு "தயாரிப்புகளை" வழங்க முடியும் - அவை ஒவ்வொன்றும் வரைபடங்கள் மற்றும் சுருக்கமான பகுப்பாய்வுகளை வழங்குகிறது - சேவையை கோரும்போது பயனர் அதை தேர்வு செய்யலாம்.

ரெஃபரென்ஸ் பிராடக்ட்

அவசரநிலை/பேரழிவு ஏற்படுவதற்கு முன், பாதிக்கப்படக் கூடிய பகுதி மற்றும் விவரங்கள் பற்றிய விரைவான தகவலை இது வழங்குகிறது.

ஃபர்ஸ்ட் எஸ்டிமேட் பிராடக்ட்

பேரழிவு நடந்த பிறகு மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களின் விரைவான மதிப்பீட்டை இது வழங்குகிறது.

டெலினேஷன் பிராடக்ட்

இது பேரழிவு நடந்த பிறகு ஏற்படும் பாதிப்பு, அளவு மற்றும் நிலைமை குறித்த தகவல்களை வழங்குகிறது.

கிரேடிங் பிராடக்ட்

இது பேரிடர் நடந்த பின் சேத மதிப்பீடு, இடப் பரவல் மற்றும் அளவு ஆகியவற்றை வழங்குகிறது.

Read in English: What is Copernicus Emergency Management Service, called in to locate Raisi’s chopper?

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Iran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment