ஈரான்-அமெரிக்க போர்: சாத்தியம் இல்லை என்பது பதில் இல்லை

ஈரானுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும், அதற்கு அபாயங்களும் உள்ளன. எனவே, தெஹ்ரான் எந்த வகையான சமநிலையை எதிர்நோக்கும்? என்பதுதான் அனைவரின் கேள்வி.

By: Updated: January 6, 2020, 04:09:07 PM

பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் மேஜர் ஜெனரல் காசெம் சுலேமானீ  கொல்லப்பட்டதிலிருந்து, உலகம் முழுவதும் கேட்கப்படும் ஒரே கேள்வி, இந்த தாக்கம் எவ்வளவு தூரம் செல்லும், இறுதியில்  ஒரு முழு போறுக்கு  வழிவகுக்குமா? என்பதாகும்.  அமெரிக்காவின் முரட்டுத் தனமான சாகசத்திற்கு எதிராக ஈரான் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், ​​இரு நாடுகளும் வெளிப்படையான போரை அறிவிப்பதில் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றே சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த கட்டத்திற்கு ஏன் வந்தது?  

அமெரிக்காவும் ஈரானும் கடந்த சில வாரங்களாகவே   மோதலில் தான் உள்ளன. ஒவ்வொரு தாக்குதலும் ஒரு எதிர் தாக்குதலுக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக டிசம்பர் 27ம் தேதியன்று, ஈராக்கிய இராணுவத் தளத்தில் 30 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டதன், விளைவாக ஒரு அமெரிக்க ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டார். டிசம்பர் 29ம் தேதியன்று  ஈராக் மற்றும் சிரியா  தளங்களில் வான்வழித் தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா இதற்கு பதிலளித்தது. இதில் ஈரானிய ஆதரவு போராளிகளின் 24 பேர்கள் கொல்லப்பட்டார்கள் .

டிசம்பர் 31ம் தேதியன்று,ஈரானிய சார்பு போராளிகள் அமைப்பு பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, 24 மணி நேரத்திற்கும் மேலாக அமெரிக்க தூதர்களை சிறைபிடித்ததது. இதன் பின்னர் தான், காசெம் சுலேமானீ மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

பதிலடி தவிர்க்க முடியாதது

உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தெஹ்ரான் தள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில், சனிக்கிழமையன்று( காசெம் சுலேமானீ இறந்த அடுத்த நாள்) இரண்டு ராக்கெட்டுகள் அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள ஈராக்கின் அல்-பாலாட் விமானத் தளத்தையும், இரண்டு மோர்டார்கள் அமெரிக்கா தூதரகம் அமைந்துள்ள பாக்தாத்தின் பசுமை மண்டலத்தையும் தாக்கியதாக ஏஎப்பி என்ற செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குட்ஸ் படையினரால் பல அமெரிக்கர்கள் மடிந்துள்ளனர்  என்று காசெம் சுலேமானீயின் கொலையை நியாயப்படுத்த அமெரிக்கா முயன்றாலும், உண்மையான நிலவரம் என்னவென்றால், தாக்குதல்கள் மூலம் மற்றொன்றை எவ்வாறு பின்வாங்க கட்டாயப்படுத்தும் என்ற அளவுகோல் இரு தரப்பினருக்கும் தெரியவில்லை. விளைவு, ஒவ்வொரு செயலும் மிகவும் கடுமையான பதிலடிக்கு வழிவகுகிறது.

மேலும், காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதன்  மூலம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது முன்னோடிகள் தவிர்த்த வந்த ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார். காசெம் சுலேமானீ பல தசாப்தங்களாக அமெரிக்காவின் பார்வைகளில் இருந்தாலும் ,  ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ் அல்லது ஜனாதிபதி பராக் ஒபாமா அவரை கொல்லும் அளவிற்கு செல்லவில்லை.

தி நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, முந்தைய இரண்டு அதிபர்களும், சுலேமானீயைக் கொல்லும் செயல் ஒரு பரந்த போருக்கான ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நன்மதிப்பை   குறைக்கும் என்று எண்ணியதாக கூறியுள்ளது.

என்ன வகையான விரிவாக்கம்

பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஈரான் இருந்தாலும், அதற்கு அபாயங்களும் உள்ளன. எனவே, தெஹ்ரான் எந்த வகையான சமநிலையை எதிர்நோக்கும்? கொலை (சுலேமானீ) பெரும் தவறு என்று அமெரிக்காவை நம்ப வைக்கும் அளவுக்கு எதிர் தாக்குதல்களை இது நோக்கமாகக் கொண்டிருக்கும்.  –  இருந்தாலும், அமெரிக்காவின் மிக உயர்ந்த வலிமையைக் கருத்தில் கொண்டு, இருநாட்டு மோதலைத் தூண்டும் அளவுக்கு முயற்சிக்காது, என்று தி நியூயார்க் டைம்ஸின் ‘தி இன்ட்ரெப்டர்’ கூறியுள்ளது.

இதன் அர்த்தம் என்னவென்றால், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தளங்கள் மீதான சிறிய, முரண்பாடான தாக்குதல்களை ஈரான் கையில் எடுக்கும். கடந்த சனிக்கிழமையன்று நடந்த  தாக்குதல்களும் இதன் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன.

ஆனால், இந்த செயல் அமெரிக்காவை விட ஈரானுக்கு  தான் மிகவும் பாதிப்படையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அனைத்து மோதல்களும் ஈரானுக்குள் உட்பட மத்திய கிழக்கிலேயே இருப்பதை தனக்கு மிகவும் சவாலாக உள்ளது என்பதை ஈரானும் யோசிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மத்தியக் கிழக்கில் ஈரானின் இராணுவத் திறன்கள் அதன் அருகிலுள்ள மற்ற நாடுகளை விட உயர்ந்தது  என்ற எச்சரிக்கையும் அமெரிக்காவிடம் உள்ளது. அதே நேரத்தில், திறனில் இருக்கும் அணு ஆயுதங்களை ஒன்றிணைக்க ஈரானுக்கு நேரம் தேவைப்படும் என்று நம்பப்படுகிறது. ஈரானின் அணுசக்தி நிறுவல்களைத் தாக்க வேண்டும் என்று அமெரிக்கா தேர்வுசெய்தால் அந்த வாய்ப்பு ஈரானுக்கு முடிவடையும்.

அது போராக இருக்க முடியுமா?

ஈரானின் பதிலடி அமெரிக்காவை எப்படித் தூண்டுகிறது என்பதைப் பொறுத்தே இதற்கான பதில் அமையும் . இவை அமெரிக்காவை ஈரான் மீதான நேரடி தாக்குதலுக்கு தூண்டிவிட்டால், அது ஒரு தொடர்ச்சியான போரின் அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும். ஒரு திட்டமிடப்படாத போருக்கு சாத்தியம் இருப்பதை தற்போது தவிர்க்கமுடியாது என்றாலும், சமூக ஊடகங்களில் ஒரே இரவில் பிரபலமடைந்த ‘மூன்றாம் உலகப் போரின் அச்சங்கள்’ என்ற சொற்றொடர்கள்    மிகைப்படுத்தப்பட்டவை

ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்க தாக்குதல்களை கடுமையாக எதிர்த்தாலும், அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தபோதோ, லிபியாவின் அரசாங்கத்தை கவிழ்க்க உதவியபோதோ அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக கூட்டு சேர்ந்து தாக்க விரும்பவில்லை,”என்று‘ தி இன்ட்ரெப்டர் ’ குறிபிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Iran us tensions why both sides will be wary of declaring outright war

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X