Advertisment

Explained: அணு ஆயுத ஒப்பந்த வரம்புகளை பின்பற்றுமா ஈரான் ?

2015 ஈரான் அணுஆயுத ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என்று டிரம்ப் 2018ம் ஆண்டு மே மாதம் இதிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained: அணு ஆயுத ஒப்பந்த வரம்புகளை பின்பற்றுமா ஈரான் ?

Iran and 2015 JCPOA Agreement : 1979 ஈரானிய புரட்சிக்கு பிறகு ,மேற்கத்திய நாடுகளை ஆதரிக்கும் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததோடு மட்டுமல்லாமல், இஸ்லாமிய குடியரசாக ஈரான் மாற்றப்பட்டது.சமீபத்திய தசாப்தங்களில், ஈரானின் அணுசக்தி திட்டம் தெஹ்ரானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய சர்ச்சையாக உள்ளது.

Advertisment

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆறு முக்கிய நாடுகளுடன் கையெழுத்திட்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை பின்பற்றாது என்றும், யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான வரம்புகளை கைவிடுவதாகவும் அறிவித்தது. எவ்வாறாயினும் ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் கூறியுள்ளது.

காசெம் சுலேமானீ மறைவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

E3 (ஐரோப்பிய நாடுகள்) என்று கூறப்படும் மூன்று நாடுகளை கொண்ட அமைப்பு ( பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி)  தெஹ்ரானுக்கு  2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் கூறப்பட்டுள்ள  உறுதிப்பாட்டை காப்பாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஈரான் மேஜர் ஜெனரல் காசெம் சுலேமானீ பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டர். அதன் விளைவாக வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மோதலின் தாக்கமாக  தற்போதைய அணு ஆயுத ஒப்பந்த ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிபர் ஒபாமா தலைமயின் கீழ் கையெழுத்திடப்பட்ட இந்த அணுசக்தி ஒபந்தத்தை, இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக அறிவித்தார். மேலும், ஈரானை முடக்கும் விதமாக பொருளாதாரத் தடைகளையும் அறிவித்தார். இன்னும் சுருங்க சொன்னால், அதிபர் ட்ரம்ப் வந்ததில் இருந்து அமெரிக்க-ஈரான் உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன.

ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மீதான சண்டை : 

ஷா ஆட்சியின் கீழ் 1970ம் ஆண்டு அணுக்கருப் பரவாமை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty) ஈரான் ஒப்புதலில் கையெழுத்திட்டது. எவ்வாறாயினும், அணுசக்தி தனது நாட்டில்  விரிவுபடுத்தும் என்று அறிவிக்கப்பட்டது .

இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், இரானின் அணுசக்தி கொள்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. உதாரணமாக, 1980களின் பிற்பகுதியில், அந்நாடு ஏஎம்ஏடி (AMAD) என்று இரகசிய அணு ஆயுத திட்டத்தை தொடங்கியது. 2003ம் ஆண்டில், சர்வதேச நாடுகள் கொடுத்த  அழுத்தம் காரணமாக, ஏஎம்ஏடி அணு ஆயுத திட்டத்தை கை விடுவதாக அறிவித்தது. மேலும் ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தனது நாட்டை ஆய்வு செய்ய வழிவகுக்கும் அணுக்கருப் பரவாமை ஒப்பந்தத்தில் இருக்கும் கூடுதல் நெறிமுறையிலும் ஈரான் கையெழுத்திட்டது.

2006ம் ஆண்டில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற மூன்று நாடுகளுடன் பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி இணைந்து பி 5 + 1 என்ற குழுவை உருவாக்கின.   ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவது இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும்.

2009 ம் ஆண்டில், ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ், ஈரானின் உயர்மட்ட அணுசக்தி அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

டிரம்பின் மிரட்டலுக்கு உள்ளான ஈரான் தளங்கள்: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய இடங்கள் இவை

2013ம் ஆண்டில், ஈரான் நாட்டிற்கும், ஆறு நாடுகளுக்கும் இடையில் ஒரு இடைக்கால ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.  தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை தற்காலிகமாகத் தடுக்கும் வகையில் இருந்ததன. இதற்கு பதிலாக முடக்கிய சில ஈரானிய சொத்துக்ககளின் மீதான தடையை நீக்கவும் அமெரிக்கா முன்வந்தது. உண்மையில், 2015ம் ஆண்டு  கொண்டுவரப்பட்ட  விரிவான அணுசக்தி ஒப்பந்ததிற்கான அடித்தளமாக இந்த தற்காலிக ஒப்பந்தம் இருந்தது.

2015 ஆண்டு வரையப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க  அணுசக்தி ஒப்பந்தம் : 

2015 ல், ஈரான், பி 5+1  (ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் + ஜெர்மனி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியதித்திக்கும்  இடையே ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் (முறையாக கூட்டு விரிவான செயல் திட்டம்) கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா மற்றும் பிற பொருளாதாரத் தடைகளிலிருந்து ஈரான் விலக்கு அளிக்கப்படும். இதற்காக, ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மட்டுப்படுத்தவும்  ஒப்புக்கொண்டது. இதன் விளைவாக சர்வதேச தொழில் நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தகளிலும்  ஈடுபட ஆரம்பித்தன .

2016 ஆம் ஆண்டில், அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றியதாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தனது ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியது.  தொடர்ச்சியாக  ஈரான் மீதான பெரும்பாலான பொருளாதாரத் தடைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீக்கப்பட்டது . ஈரான் உலகளாவிய வங்கி முறைக்கு மீண்டும் மெதுவாக நுழைந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கியது.

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபின், ஈரானின்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும், பிராந்திய மோதல்களில் ஈடுபடுவதையும் தடுக்க இந்த ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என்று டிரம்ப், 2018 மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.   இதற்கு பதிலைத்த தெஹ்ரான், 2015 ஒப்பந்தத்தின் கீழ் தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து நிலைநிறுத்தப்போவதாகக் கூறியது.

ஜூன் 2018ல், ஈரான் தனது அணுஆயுத செறிவூட்டல் உள்கட்டமைப்பை 2015  ஒப்பந்த எல்லைக்குட்பட்டு விரிவுபடுத்துவதாக அறிவித்தது.

 

பின்னர் 2019 மே மாதத்தில், தெஹ்ரான் அதன் பொருளாதார கோரிக்கைகளுக்கு மற்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால்,2015  ஒப்பந்த கடமைகளை கடைப்பிடிப்பதை நிறுத்துவோம் என்று அறிவித்தது.  ஜூலை மாதம், ஈரான் அதன் செறிவூட்டல் வரம்பை மீறியுள்ளதாக பன்னாட்டு அணுசக்தி முகமையகமும் உறுதிப்படுத்தியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரானிய அரசு தொலைக்காட்சி 2015 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த வரம்புகளையும் தெஹ்ரான் இனி மதிக்காது என்று கூறிஇருக்கிறது.  எவ்வாறாயினும், ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப், உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு இடமுண்டு என்று நம்பிக்கை தரும் வகையில் ட்வீட் செய்துள்ளார்  - “இந்த நடவடிக்கை 2015 ஒப்பந்ததிற்கு  உட்பட்டதுதான், உங்களுடைய வாக்குறுதிகளை நியாமான முறையில் செயல்படுத்துவதன்  மூலம் இந்த நடவடிக்கை மாற்றி அமைக்கப்படும்,” என்று பதிவிட்டுள்ளார்.

Iran Germany Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment