கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் கடந்த வாரம், 'இஸ்லாமியக் ஸ்டேட்' தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு, 14 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதித்தது.
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலமாக, ஆப்கான் அரசு படைகளுக்கு முன் சரணடைந்த 600- பயங்கரவாதிகளில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் இருந்துள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது.
கேரளா என்.ஐ.ஏ நீதிமன்றம் விசாரித்த (அல்லது) விசாரணையில் உள்ள 30 வழக்குகளில் 10 ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பானவை. பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் சில வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கேரளாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் & கேரள :
கேரளாவைச் சேர்ந்த சுமார் 100-120 நபர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்திருக்கலாம் (அல்லது) சேர முயன்றதாக இந்திய புலனாய்வுத் துறை மதிப்பிடுகிறது. அவர்களில் சிலர் தாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சிரியா, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பயணித்திருகின்றனர்; மற்றும் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் சேர கேரளாவிலிருந்து நேரடியாகவே பயணித்திருக்கின்றனர். 2018ம் ஆண்டின் இறுதியில், சிரியா, ஈராக் போன்ற பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் படைகள் பின்வாங்கிக் கொண்டிருந்தபோதும், கேரளாவைச் சேர்ந்த 10 மக்கள் பயணித்திருகின்றனர் .
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
பல ஆண்டுகளாக புனிதப் போர் என்று கூறப்படும் இந்த சண்டையில் கேரளா இளைஞர்கள் பல பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2019ம் ஆண்டு ஆகஸ்டில் மலப்புரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் முஹம்மது முஹ்சின் குடும்பத்திற்கு தங்களது ஒரே மகன் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது.
2014-15 ஆண்டுகளில், ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 17 இந்தியர்களை இந்தியாவின் புலனாய்வுத் துறை அடையாளம் கண்டது . அவர்களில் மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மத்திய கிழக்கில் வேலை செய்யும் போது 2013-14ல் சிரியாவுக்குச் சென்றிருந்தனர். மே-ஜூன் 2016ல்,பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கேரளாவைச் சேர்ந்த சுமார் இரண்டு டஜன் மக்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்தனர்.
தொடர் விசாரணையில் ஐ.எஸ் அமைப்பு கேரளாவில் அரங்கேற்றிவரும் மூன்று யுக்திகள் கண்டறியப்பட்டது.
காசராகோட் ஐ.எஸ் செயல்முறை : (காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் காசராகோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் )
'காஃபிர்கள்' (முஸ்லிமல்லாதவர்கள்) நிலத்திலிருந்து தப்பிப்பது இவர்களின் நோக்கம். இதன்மூலம் காசர்கோடு நகரவாசி, தனது குடும்பத்தாருடன் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிசென்று ஐ.எஸ் அமைப்பில் இணைவார்.
ஐ. எஸ் கண்ணூர் செயல்முறை: இந்த செயல்முறையின் மூலம், கண்ணூர் நகரவாசி சிலர், சிரியா ஐ.எஸ் அமைப்பில் உடல் ரீதியாக போராட அந்நாட்டிற்கு சென்றனர், அல்லது செல்ல முயன்றனர்.
மூன்றாவது, ஒமர் அல்-இந்தி ஐ.எஸ் செயல்முறை என்று அழைக்கப்படுகிறது. இது கண்ணூரில் சோக்லி கிராமத்தைச் சேர்ந்த மன்சீத் முஹம்மது என்கிற ஒமர் அல்-இந்தி இது குறிப்பிடுகிறது. கேரளாவில் “அன்சார்-உல்-கிலாஃபா கே.எல்” என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் 'விலாயத்தை' நிறுவுவது இந்த அமைப்பின் நோக்கமாகும். இந்தியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் இந்த அமைப்பை பின்பற்றுவர்கள் பரவியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த குழுவின் உறுப்பினர்கள் கடந்த மாதம், இந்தியாவில் கைது செய்யப்பட்டு குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்கள்.
காசராகோடு ஐ.எஸ் செயல்முறை:
பெரும்பாலும் கல்வித் தகுதி வாய்ந்த இளைஞர்களும், பெண்களும் இந்த வகையை பின்தொடர்கிறார்கள். 2016 ஜூன் மாதத்தில் கேரளாவில் இருந்து 24 பேர், ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தி இந்திய பாதுகாப்பு துறையில் இருக்கும் அனைவரையும் தடுமாற வைத்தது. இணையம் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்த பிறகு பெரும்பாலான ஆண்கள் திடீரென ஆழ்ந்த மதப்பற்று உடையவர்களாகின்றனர். அவர்கள் சலாபி இஸ்லாத்தை கடுமையாகப் பின்பற்றினர். பிரதான முஸ்லீம் சமுதாயத்திலிருந்து விலகி இருந்தனர், எந்த அரசியல் கட்சியுடனும் எந்த தொடர்பும் இல்லை.
பொறியியலாளரும் கல்வி ஆர்வலருமான அப்துல் ரஷீத்தை இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்முறையின் தலைவராக என்.ஐ.ஏ அடையாளம் கண்டுள்ளது. சோனியா சபாஸ்டியன் என்ற கிறிஸ்தவரை மாற்றி, ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பீகாரைச் சேர்ந்த யஸ்மீன் முகமது ஜாஹித், தனது குழந்தையுடன் காபூலுக்குச் செல்ல முயன்றபோது 2016 ல் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த யஸ்மீன் முகமது ஜாஹித், அப்துல் ரஷீத்தின் இரண்டாவது மனைவியாவார் . என்ஐஏ நீதிமன்றம் கடந்த ஆண்டு யஸ்மீன் முகமது ஜாஹித் குற்றவாளி எனவும் தீர்ப்பளித்தது, இந்த ஆண்டு ஆகஸ்டில் அந்த தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த ஐஎஸ் செயல்முறையில் உள்ள மற்ற 14 உறுப்பினர்கள் பெயரையும் என்ஐஏவால் அடையாளம் காணப்பட்டுள்ளது . இருப்பினும், அவர்களில் பலர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஐ. எஸ் கண்ணூர் செயல்முறை :
கண்ணூரில், அதிலும் முக்கியமாக வலப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த சுமார் 40-50 நபர்கள், சிரியாவில் ஐ.எஸ்.ஐ அமைப்பில் சேர்ந்துள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. வலதுசாரி முஸ்லீம் அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பி.எஃப்.ஐ) ஆர்வலர்கள் இந்த கண்ணூர் ஐ. எஸ் செயல்முறையில் முக்கிய பங்களிகின்றனர்.
கண்ணூர் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய நபராக ஷஜஹான் வள்ளுவ கண்டி இருக்கிறார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இரண்டு முறை சிரியா செல்ல முயன்ற அவரின் பயணம் தோல்வியில் முடிவடைந்து, மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபட்டார். துணைக் கண்டத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நிறுவ ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்ததாக விசாரனையில் கூறியிருக்கிறார் ஷஜஹான். என்ஐஏ குற்றம் சாட்டப்பட்டதாக பட்டியலிடப்பட்ட 16 நபர்களில் பெரும்பாலானவர்கள் சிரியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
உமர் அல்-இந்தி ஐ.எஸ் அமைப்பு:
இந்த ஐ.எஸ் அமைப்பு தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிரிவையும் உருவாக்குவதை நோக்கமாக கொண்டது . தலைவர் மன்சீத் முஹம்மது உட்பட குற்றம் சாட்டப்பட்ட 8 நபர்களில் என்ஐஏ நீதிமன்றம் கடந்த வாரம் 6 பேரை குற்றவாளியாக தீர்பளித்தது. 2016ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி கண்ணூரில் உள்ள கனகமலா என்ற இடத்தில் இந்த அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ரகசிய கூட்டத்தை என்ஐஏ சோதனை செய்த போது தான் இதை பற்றிய முழு விவரங்கள் உலகிற்கு தெரியவந்தன. முக்கிய அரசியல் தலைவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள், பகுத்தறிவாளர்கள், அஹ்மதியா முஸ்லிம்கள் போன்றோர்களை தாக்குவது இந்த அமைப்பின் திட்டமாகும். கொடைக்கானல் வரும் வெளிநாட்டினர், குறிப்பாக யூதர்களை தாக்க இந்த தாக்க இந்த குழு திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இதற்காக ஆயுதங்கள்,விஷம் மற்றும் குண்டுகளை சேகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பொறியியல் பட்டதாரி ஷாஜீர் மங்களசேரி, 30, இந்த குழுவின் 'எமிர்’ஆவார். அவர் 2016 ல் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர் ஆவார்.
கேரளாவின் தொடுபுசாவைச் சேர்ந்த சுபஹானி ஹஜா இந்த குழுவின் உறுப்பினராவார் . இவர், 2015 இல் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் சண்டையிட்டனர். அவருக்கு மொசூலில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயிற்சி அளித்திருந்தது , பின்னர் போரில் காயமடைந்த பின்னர் இந்தியா திரும்பினார். தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்ட அவர் இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.