Amitabh Sinha
ISRO Chandrayaan-2 moon landing in perspective : இஸ்ரோவின் சந்திரயான் - 2, 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமிக்ஞையை இழந்தது. இதனால் இஸ்ரோ முற்றிலுமாக அமைதியாகிவிட்டது. லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க தேவையான வேகத்தை விட அதிக வேகத்தில் கீழிறங்கியது. நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கி.மீ தூரத்தில் சந்திரயான் 2 தரையிறங்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டது. இந்த மிசனில் 90% ஆராய்ச்சிகள் முழுமையாக ஆர்பிட்டரே மேற்கொள்ளும் என்று சிவன் கூறியிருந்த நிலையில் உங்களுக்கு சந்திரயான் குறித்து தோன்றும் சந்தேகங்களுக்கு விடை இங்கே.
To read this article in English
சந்திரயான் 2 தோல்வியா?
நிச்சயமாக இல்லை. இந்த விண்கலத்தில் லேண்டர் மட்டுமல்லாமல், ஆர்பிட்டர் மற்றும் ரோவர் ஆகிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சீராக இயங்கி நமக்கு தேவையான செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கும். லேண்டரும் ரோவரும் வெறும் 14 நாட்களுக்கு மட்டுமே செயல்படும் வகையில் தான் வடிவமைக்கப்படுள்ளது. ஆராய்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் வெற்றி கரமாக ஆர்பிட்டர் மூலமாக துவங்கும்.
ISRO Chandrayaan-2 : விக்ரம் நிலை என்ன? முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டதா?
அது குறித்து முழுமையாக ஒன்றும் தெரியவில்லை. இறுதியாக விக்ரமுடன் தொடர்பு கொண்ட போது, அது மணிக்கு 180 கி.மீ (நொடிக்கு 50-60 மீட்டர்) என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. நொடிக்கு 5 மீட்டர் என்ற வேகத்தில் தரையிறங்கினால் அதனை தாங்கும் வகையில் ஷாக் அப்சார்ப்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் நிலவை நோக்கி அது தரையிறங்கிய வேகம் மிகவும் அதிகமானது. அதனால் விக்ரம் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் பாகங்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று சிவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீங்கள் விக்ரமை தொடர்பு கொள்ள காரணம் என்ன?
வெறும் முன்முடிவுகள் மூலமாக விக்ரம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது என்று ஏற்றுக் கொள்ள இயலாது. எதனால் இந்த இழப்பு என்பதை அறிந்து கொள்ள, லேண்டர் இருக்கும் இடம் மற்றும் அதன் மீதான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முடிந்த வரை லேண்டரின் கனெக்சனை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இது சாத்தியம் என்று நினைக்கின்றீர்களா?
ஏற்கனவே ஆர்பிட்டர் மூலமாக லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும் பகுதி என்பதால் தெர்மல் இமேஜ் கிடைத்துள்ளது. நிலவின் தரைப்பகுதிக்கு வருவதற்கு சிறிது இடைவெளி இருக்கும் போதே சிக்னல் லாஸ் ஆனதால், நாங்கள் திட்டமிட்ட பகுதியில் இருந்து கொஞ்சம் விலகி தான் தரையிறங்கியிருக்கும் என்று யூகித்தோம். அப்படியே நடந்தும் உள்ளது. சமிக்ஞைகளை தொடர்ந்து பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆனாலும் லேண்டரில் மீண்டும் தொலைத் தொடர்பு சிக்னல்களைப் பெறுவது சற்று சவாலான காரியம் தான். நமக்கு லேண்டர் எந்த அளவுக்கு பாதிப்பை சந்தித்திருக்கிறது என்று தெரியாது. அதே போன்று கம்யூனிகேசன் ஏரியா முற்றிலுமாக சேதம்டைந்துள்ளதா என்றும் தெரியாது. ஆனால் லேண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் சில முக்கிய கருவிகள் தானாகவே சிக்னல்கள் அனுப்பக் கூடியவை. அவை, அதற்கு அருகில் இருக்கும் விண்வெளி மையம் அல்லது செயற்கைக் கோள்களால் பெற இயலும். 14 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்யும் வகையில் அவை உருவாக்கப்பட்டிருப்பதால் வரும் இரண்டு வாரங்களில் முழுமையாக சிக்னல்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்பு நிலவில் நிலவும் அசாதாரண குளிர் காரணமாக வேலை செய்யாமல் போகும் நிலை உருவாகும்.
நமக்கு மகிழ்ச்சி தரும் சாத்தியக் கூறுகள் என்ன?
ஒரு முறை நமக்கு சிக்னல்கள் கிடைக்கத் துவங்கினாலும் க்ரௌண்ட் ஸ்டேசனில் இருந்து டூ வே கம்யூனிகேசனில் நாம் அங்கிருந்து டேட்டாக்களை பெற்றுக் கொள்ள இயலும். லேண்டர் நாம் நினைத்து போலவே வெர்ட்டிக்கிளாகவே தரையிறங்கியுள்ளது. அதன் நான்கு புறமும் சில கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை நிலவின் நான்கு பக்கத்தையும் ஆய்ந்து தகவல்களை அனுப்பும். அந்த சிக்னல்கள் நமக்கு கிடைத்தாலும் சந்திரயான் 100% வெற்றி தான். அந்த நான்கு புறமும் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளில் ஒன்று நாசாவால் உருவாக்கப்பட்ட Laser Retroreflector Array - ஆகும். கண்ணாடிகளில் உருவாக்கப்பட்ட இந்த கருவியின் முழு கட்டுப்பாடும் க்ரௌண்ட் ஸ்டேசனில் உள்ளது. இவை நிலவில் இருந்து வரும் சிக்னல்களை ரிஃப்லக்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரோவின் வளர்ச்சியில் இது மாபெரும் தோல்வியா?
விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற ஆராய்ச்சி மையங்கள் போன்றே இஸ்ரோவும் சில இழப்புகளை சந்தித்துள்ளது. ஆனாலும் கற்றுக் கொள்ள நிறையவே கொடுத்துள்ளது. 2008ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 1ம் கூட பாதி வெற்றி தான். இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி பணியை மேற்கொள்ளா அனுப்பினோம். ஆனால் 9 மாதங்களிலேயே செயல் இழந்தது. வெப்பத்தை கடத்தாமல் வைக்கும் ஷீல்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, சுற்றுவட்டப்பாதையில் அது பொருத்தப்பட்ட்ட போதே சில கருவிகள் செயல் இழந்துவிட்டன. மே 2009, விண்ணில் ஏவப்பட்டு 8 மாதங்கள் கழித்து சுற்றுவட்டப்பாதையை 100 கி.மீ-ல் இருந்து 200 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும். ஆனால் அதுவும் நடைபெறவில்லை. தற்போது அனைத்து தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு வெறுமனே நிலவை வலம் வந்து கொண்டிருக்கிறது சந்திரயான் 1. ஆனாலும் அதற்கு கொடுக்கப்பட்ட பணியை அது மிகவும் சிறப்பாக செய்து நிலவில் நீர் இருப்பதை ஆதாரத்தோடு வெளியிட்டது என்பது மகிழ்ச்சிக்குரியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.