இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புதிய தலைவர் டாக்டர் எஸ் சோமநாத், விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (எஸ்எஸ்எல்வி) எனப்படும் இஸ்ரோவின் உள்நாட்டு புதிய ஏவுகணைகள் லான்ச் தாமாதமாகிவிட்டது. ஏப்ரல் 2022 இல் எஸ்எஸ்எல்வி-டி1 மைக்ரோ சாட் லான்ச் இருக்கும் என குறிப்பிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அண்மை காலமாக வளரும் நாடுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிடையே ஏற்பட்டிருக்கும் சிறிய செயற்கைக்கோள் தேவைக்காக, குறைந்த புவி சுற்றுப்பாதையில் செலுத்தப்படும் சிறிய செயற்கைக்கோள்கள் தான் எஸ்எஸ்எல்வி-இன் நோக்கமாகும்.
சிறிய செயற்கைக்கோள்களின் ஏவுதலானது, பெரிய செயற்கைக்கோள்களுக்கான ஏவுகணை ஒப்பந்தங்களை இஸ்ரோ இறுதி செய்வதை குறித்து சார்ந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்த சோமநாத் தான், SSLV-யின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு முழு காரணம் ஆகும். எஸ்எஸ்எல்வியின் முதல் லான்ச் ஜூலை 2019இல் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தோற்று மற்றும் பிற சிக்கல்கள் காரணமாக, ஏவுகணை லான்ச் தள்ளிவைக்கப்பட்டது.
எஸ்எஸ்எல்வி 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அதே நேரத்தில் பிஎஸ்எல்வியின் சோதனை முயற்சியில் 1000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவ முடிந்தது.
முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் 2019 இல் இஸ்ரோ தலைமையகத்தில் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, "இஸ்ரோவில் 110 டன் எடை கொண்ட மிகச்சிறிய வாகனம் எஸ்எஸ்எல்வி. மற்ற வாகனங்கள் ஒருங்கிணைக்க 70 நாள்கள் ஆகும் நிலையில், எஸ்எஸ்எல்விக்கு வெறும் 72 மணி நேரம் மட்டுமே ஒருங்கிணைக்க தேவைப்படும். இந்த பணியை 60 பேருக்குப் பதிலாக ஆறு பேர் மட்டுமே செய்ய வேண்டும்.
மிகக் குறுகிய காலத்தில் முழுப் பணியும் முடிவடையும். இதன் மொத்த செலவு ரூ30 கோடி மட்டுமே. இது, எதிர்காலத்தில் மிகவும் தேவையான வாகனம் மாறக்கூடும்.தேசிய தேவையை மட்டும் பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 முதல் 20 எஸ்எஸ்எல்விகள் தேவைப்படும்" என்றார்.
2019 ஆம் ஆண்டிலேயே US விண்வெளி ஏவுதள சேவைகளின் இடைத்தரகர் Spaceflight Inc. இடமிருந்து வணிகரீதியான முன்பதிவைப் எஸ்எஸ்எல்வி பெற்றது.
SSLV ராக்கெட்டின் இரண்டாவது வாகன லான்சை பயன்படுத்துவதற்காக ISRO வணிகப் பிரிவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆகஸ்ட் 8, 2019 அன்று Spaceflight நிறுவனம் அறிவித்தது.
இதுகுறித்து 2019 இல் பேசிய Spaceflight சிஇஓ கர்ட் பிளேக், "ஒரு நேரத்தில் பல மைக்ரோசாட்லைட்களை ஏவுவதற்கு SSLV மிகவும் பொருத்தமானது. மேலும், பல சுற்றுப்பாதை டிராப்-ஆஃப்களை ஆதரிக்கிறது. SSLV ஐ எங்களின் ஏவுகணை போர்ட்ஃபோலியோவில் சேர்ப்பதிலும் பல ஏவுதல்களை ஒன்றாக நிர்வகிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
SSLV இன் வளர்ச்சி மற்றும் உற்பத்தியானது விண்வெளித் துறை மற்றும் தனியார் தொழில்களுக்கு இடையே அதிக ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது விண்வெளி அமைச்சகத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்திய தொழில்துறையானது பிஎஸ்எல்வி தயாரிப்பதற்கான கூட்டமைப்பைக் கொண்டுள்ளது.அதன் சோதனை செய்யப்பட்டவுடன் எஸ்எஸ்எல்வியையும் தயாரிக்க ஒன்றிணைய வேண்டும் என்று இஸ்ரோ கடந்த காலத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் ஒரே நோக்கம், பல ஆண்டுகளாக இஸ்ரோவால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை இந்திய தொழில் கூட்டாளிகள் மூலம் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது தான். தற்போது ISRO திட்டங்களுக்கு 500 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்களிக்கின்றன.