New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/Z1904.jpg)
isros vikram lander is lost but this hardly matters - இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை இழந்துவிட்டோம் - ஆனால், மிஷன் இன்னும் முடியவில்லை
விண்வெளியில் இயங்கக்கூடிய ஒரு பொருள் செயல் இழப்பதும், மீண்டும் சிக்னல்களைப் பெறுவதும் இயல்பான ஒன்று தான்.
isros vikram lander is lost but this hardly matters - இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை இழந்துவிட்டோம் - ஆனால், மிஷன் இன்னும் முடியவில்லை
ISRO is trying to reconnect with Chandrayaan-2’s Vikram Lander : இஸ்ரோ, நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் 2-ஐ அனுப்பியது. அதன் லேண்டர் சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரையிறங்கிய போது சிக்னல்கள் முற்றிலுமாக தடைபெற்று அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் லேண்டர் தரையிறங்கிய இடத்தை ஆராய்ந்து, துல்லிய லோகேசனை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொண்டது ஆர்பிட்டர். ஆர்பிட்டர் அனுப்பிய தெர்மல் வகை புகைப்படம் கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிந்து கொண்டது, ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தான் லேண்டர் தரையிறங்கியுள்ளது. பூமியைப் பார்த்த வண்ணமோ அல்லது ஆர்பிட்டர் பயணிக்கும் பாதையை பார்த்த வண்ணமோ அது லேண்டாகாமல் ஒரு புறமாக சாய்ந்து இருக்கிறது. மேலும் அது உடைந்து நொறுங்கவில்லை என்பது தான் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
நேரம் சென்று கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து லேண்டருன் தொடர்பு கொள்ள முயற்சிகள் நடைபெற்ற வண்ணமே தான் இருக்கிறது. தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் லேண்டரும், ரோவரும் வெறும் 14 நாட்களுக்குள் இயங்கும் வகையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 21ம் தேதிக்குள் இந்த தொடர்பை மீட்டெடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
இந்த லேண்டரும் ரோவரும் சந்திரனின் ஒரு பகல் பொழுதினை ஆராய மட்டுமே உருவாக்கப்பட்டது. (ஒரு லூனார் நாள் - புவியின் 14 நாட்கள்). 14 நாட்களுக்குப் பிறகு நிலவில் இரவு படரத் துவங்கிவிடும். ஏற்கனவே தென் துருவத்தில் லேண்டர் தரையிறக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இங்கு நிலவும் தட்பவெட்ப நிலை யாராலும் யோசிக்க இயலாதது. மைனஸ் 200 டிகிரி என்ற தட்பவெட்பம் நிலவும். இந்த குளிரில் இயங்குவதற்கு ஏற்ற வகையில் லேண்டரும் ரோவரும் உருவாக்கப்படவில்லை. 14 நாட்களுக்குள் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றால், இந்த திட்டம் தோல்வி என்ற முடிவை நாம் எட்டிவிட வேண்டியது தான்.
மேலும் படிக்க : சந்திரயான் 2 திட்டம் தோல்வியா? இஸ்ரோவின் கருத்து என்ன?
நகரும் பொருட்களுடனான தகவல் தொடர்பினை எலெக்ட்ரோ மேகனடிக் அலைக்கற்றைகள் மூலமாக ஏற்படுத்திக் கொள்ளலாம். விண்வெளி ஆராய்ச்சி என்று வரும் போது மைக்ரோ அலைக்கற்றைகள் மற்றும் ரேடியோ அலைகள் மூலம், இயங்கும் பொருளில் தொலைத் தொடர்பினை உருவாக்கிட இயலும். லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பு வரை அவ்வாறே சிக்னல் பெறப்பட்டது. ஆனால் நிலவில் ஹார்ட்லேண்டிங் மூலம் தரையிறங்கி இருப்பதால், கம்யூனிகேசன் ஏரியாவில் பவர் கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது முற்றிலும் (ஒரு பகுதியாகவோ) சேதாரம் ஏற்பட்டிருக்கலாம். அந்த பகுதிகள் முறையாக செயல்பட்டால் மட்டுமே தொலைத்தொடர்பினை உருவாக்கிட இயலும். விக்ரம் இஸ்ரோ மற்றும் ஆர்பிட்டருடன் தொடர்பு கொள்ளும் வகையில் மட்டும் உருவாக்கப்பட்டதால் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு இருந்து அனுப்பப்படும் சிக்னல்களை ஒரு கருவியேனும் ரிசிவ் செய்து அதற்கு ரியாக்ட் செய்யாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
லேண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் ஆண்டென்னா. அது தங்கு தடையில்லாமல் இயங்கும் வகையில் நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் மிக விரிந்த பரப்பளவில் வரும் சிக்னல்களை பெற்றுக் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் ரெஸ்பாண்ட் செய்ய இயலும். பொதுவாகவே 180 டிகிரி விரிந்த பரப்பளவில் தமக்கான சிக்னல்களை பெற முயற்சி செய்யும் ஆண்டெனாக்கள். ஆனால் ஆண்டென்னா அங்காவது மாட்டியிருந்தால் பெறப்படும் சிக்னல்களுக்கான பாசிபிலிட்டிகள் மிகவும் குறைவு. விண்வெளியில் இயங்கக்கூடிய ஒரு பொருள் செயல் இழப்பதும், மீண்டும் சிக்னல்களைப் பெறுவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் விண்ணில் இருக்கும் பொருட்கள் சேதமடையாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.