1994-ம் ஆண்டில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு கிரீன்லாந்தில் ஒரு அகழ்வாராய்ச்சியின் போது நன்கு பாதுகாக்கப்பட்ட இரண்டு டைனோசர் மண்டை ஓடுகளைக் கண்டுபிடித்தனர். இந்த மாதிரிகளில் ஒரு டைனோசர் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த நன்கு அறியப்பட்ட நீண்ட கழுத்துடைய டைனோசரான பிளேட்டோசொரஸிலிருந்து வந்ததாக முதலில் கருதப்பட்டது.
இப்போது, போர்ச்சுகல், டென்மார்க் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, எலும்புகளை மைக்ரோ சிடி ஸ்கேன் செய்து, டிஜிட்டல் 3டி மாதிரிகளை உருவாக்க உதவினர். இதன் மூலம், இந்த கண்டுபிடிப்புகள் ஒரு புதிய இனத்தைச் சேர்ந்தவை என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கு அவர்கள் இஸ்ஸி சானெக் என்று பெயரிட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை டைவர்சிட்டி இதழில் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு கால்கள் கொண்ட இஸ்ஸி சானெக் சுமார் 214 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்தில் வாழ்ந்துள்ளது. இது ஒரு நடுத்தர அளவிலான, நீளமான கழுத்துள்ள தாவரவகை மற்றும் சௌரோபாட்களின் முன்னோடியாகும். இது இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரிய நில விலங்குகள் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய டைனோசரின் பெயர் கிரீன்லாந்தின் இன்யூட் மொழிக்கு மரியாதை செலுத்துகிறது. இதற்கு "coldbone" அதாவது எலும்பை ஊடுருவும் குளிர் என்று பொருள்படும் என்று மார்ட்டின் லூதர்-பல்கலைக்கழக ஹாலே-விட்டன்பெர்க் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கண்டுபிடிப்புகள் ஒரு தனித்துவமான கிரீன்லாண்டிக் டைனோசர் இனத்தின் முதல் சான்றாக கிடைத்துள்ளது. இரண்டு மண்டை ஓடுகளில் ஒன்று இளம் வயது டைனோசரிடமிருந்தும் கிட்டத்தட்ட வயது வந்த டைனோசரிடம் இருந்தும் வந்தவை. இந்த டைனோசர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்ற அனைத்து சாரோபோடோமார்ப்களிலிருந்து வேறுபட்டது. ஆனால், பிரேசிலில் காணப்படும் மேக்ரோகாலம் மற்றும் யுனைசரஸ் போன்ற டைனோசர்களுடன் கிட்டத்தட்ட 15 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று இந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"