வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் நாகா அமைதி உடன்பாடு ஏற்படுத்துவோம் என்று மத்திய அரசு வாக்குறிதி அளித்திருந்தத்து. இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில் இந்த உடன்பாடு ஏற்படுமா ? எற்படவில்லை என்றால் என்ன காரணம் ? போன்ற கேள்விகளுக்கான பதிலை இங்கே காணலாம்.
நாகா அமைதி உடன்படிக்கை என்றால் என்ன ?
இந்த அமைதி உடன்படிக்கைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, முதலில் நாகா மக்கள் ஒற்றை அடையாளத்தைக் கொண்ட ஒரே வகையான பழங்குடியினர் இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நாகா என்பது ஒரு இனம். பலதரப்பட்ட நாகா மக்கள் நாகாலாந்திலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர் ( மியான்மர் நாட்டிலும் கூட) . நாகா மக்களின் ஒரு முக்கிய கோரிக்கையாக இருப்பது அனைத்து நாகா மக்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய நாகாலாந்து. அந்த பெரிய நாகாலாந்திற்கு என்று தனியான ஒரு கொடி, அரசியலமைப்பு, தன்னிச்சையான நிர்வாகம்.
1826 ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு அசாமை தன் கட்டுபாட்டிற்க்குள் கொண்டு வந்தபோது, நாகா மலைக்குன்றுகள் என்ற ஒன்றை உருவாக்கியது (நாகா ஹில்ஸ் மாவட்டம்- நாகா மக்கள் வாழும் இடம் ) . நாகா மலைக்குன்றுகளை அசாம் நிர்வாகத்தோடு இணைத்தபோதே நாகா மக்களின் தனிநாடு போராட்டம் ஆரம்பித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1963 ம் ஆண்டு நாகாலாந்து என்று தனி மாநிலம் உருவாக்கிய பின்பும் அந்த போராட்டம் முடிந்த பாடில்லை .
பெரிய நாகாலாந்து வரலாற்று ரீதியில்:
1929 ம் ஆண்டும் சைமன்க் குழு இந்தியாவிற்கு வந்த போதே, "எங்களை, எங்கள் வாழ்கையோடு விட்டுவிடுங்கள், எங்கள் வாழ்கையை நாங்களே தீர்மானித்துக் கொள்கிறோம்" என்று அப்போதே இந்த மக்கள் போராடினர்.
ஏ. இசட் பிஸோவால் உருவாக்கப்பட்ட நாகா தேசிய கவுன்சிலை ஆகஸ்ட் 14, 1947 அன்று நாகா தன்னிச்சையாக சுதந்திரத்தை அடைந்துவிட்டதாக பகிரங்கமாக அறிவித்தார். 1951ம் ஆண்டு இந்தியாவோடு சேரலாமா ? அல்லது தன்னிச்சை நாடாக இருக்கலாமா? என்று கருத்துக் கணிப்பு எடுத்ததாகவும், அதில் பெரும் பான்மையானவர்கள் தன்னிச்சையான நாகா அரசை ஆதரிக்கின்றனர் என்ற தகவலையும் கூறியது.
இந்த நாகா தேசிய கவுன்சில் 50, 60 களில் இந்திய ராணுவத்தோடு ஆயுதத் தாக்குதலை நடத்தினர். 1975ம் ஆண்டு இந்த நாகா தேசிய கவுன்சில், நாகாலாந்தின் தேசிய சோசலிச கவுன்சில் (ஐ-எம் ), நாகாலாந்தின் தேசிய சோசலிச கவுன்சில் (கப்லாங்) என்ற இரண்டு குழுக்களாக பிரிந்தன.
அமைதி உடன்படிக்கை கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தன?
1975 : ஷிலாங் மாவட்டத்தில் நாகா தேசிய கவுன்சில் இந்தியா அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த செயல்முறையை ஒத்துக் கொள்ளாத கப்லாங் தனியாக நாகாலாந்தின் தேசிய சோசலிச கவுன்சில் (என்எஸ்சிஎன்) என்ற அமைப்பைத் தொடங்கின்னர். 1988ம் ஆண்டு இந்த என்எஸ்சிஎன் அமைப்புக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இசக் மற்றும் முய்வா என்எஸ்சிஎன் ஐ-எம் என்ற கிளர்ச்சிக் குழுவை உருவாக்கினார்.
1997 : என்எஸ்சிஎன் (ஐ-ம்) இந்தியாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். என்எஸ்சிஎன் (ஐ-ம்) உறுப்பினர்களை இந்தியா ராணுவம் தாக்கக் கூடாது, இந்திய ராணுவத்திற்கு என்எஸ்சிஎன் (ஐ-ம்) தாக்காது என்பதே அந்த ஒப்பந்தத்தின் அடிப்படி சாரம்சமாகும்.
2015: இந்த ஆண்டு ஆகஸ்டில், மத்திய அரசு என்.எஸ்.சி.என் (ஐ-எம்) உடன் நாகாலாந்தின் நிரந்தர அமைதி கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் "பழமையான கிளர்ச்சியை" தீர்ப்பதற்கான "வரலாற்று ஒப்பந்தம்" என்று விவரித்தார்.
தற்போதைய நிலையில் , முய்வா நாகா கிளர்ச்சியின் மூத்த தலைவராக இருக்கிறார். இசக் 2016 ல் இறந்தார். என்.எஸ்.சி.என் ( கே) தலைவர் கப்லாங் 2018 இல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 , நிரந்தர அமைதி கட்டமைப்பு ஒப்பந்தத்தில் என்ன இருந்தது?
அந்த ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் இன்னும் பகிரங்கமாக வெளிபடுத்தவில்லை. இருந்தாலும் , அரசாங்கம் ஒரு செய்திக்குறிப்பில் கூறும் போது “நாகர்களின் தனித்துவமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் நிலைப்பாடு இந்திய அரசு அங்கீகரித்துள்ளதாகவும், அதே போன்று என்.எஸ்.சி.என் கிளர்ச்சிக் குழுவும் இந்திய அரசியல் அமைப்பையும் நிர்வாகத்தையும் புரிந்து கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்
மறுபுறம், என்.எஸ்.சி.என் (ஐ.எம்) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "தற்போது இருக்கும் நாகாலாந்து மாநிலம் நாகா மக்களின் வாழ்வை, அடையாளத்தை பிரதிநித்துவப் படுத்தவில்லை"என்று கூறியுள்ளது.
பெரிய நாகாலாந்து பிராந்திய கோரிக்கை தற்போது எவ்வாறு உள்ளது?
2018 ம் ஆண்டில் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், " பெரிய நாகலாந்து என்ற பெயரில் இந்தியாவின் மற்ற மாநிலங்களின் (அசாம், மணிப்பூர் ) எல்லையை மாற்றாமல், அருணாச்சல் மற்றும் மணிப்பூரில் இருக்கும் நாகா பிராந்திய சபைகளைகளுக்கு தன்னாட்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , நாகலாந்தில் தற்போது அமலில் இருக்கும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 நீக்கப்படும்" என்று இருந்தது.
மற்ற சிக்கல்கள் என்ன?
நாகாக்கு என்ற தனிக் கொடி, தனி அரசியளமைப்பு என்ற என்.எஸ்.சி.என் (ஐ.எம்) கோரிக்கை பெரும் முட்டுக் கட்டையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கோரிக்கை நாகா கிளர்ச்சிக் குழு விட்டுக் கொடுக்கவில்லை என்றால் ஒட்டு மொத்த அமைதி உடன்படிக்கையும் கேள்விக்குறியாகும் நிலையிலே உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.