ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இழந்து இரு பிரிவாக பிரிந்து இரு யூனியர் பிரதேசங்களாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அதன் கொடியின் அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிகப்பு கொடியில் ஒரு கலப்பையும், மூன்று கோடுகளும் இடம் பெற்றிருக்கும். இனி அது பயன்பாட்டில் இருக்காது. இரு புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் கொடி இனி மூவர்ண கொடி மட்டுமே.
ஜம்மு காஷ்மீர் 1956ல் ஒரு தனி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது, அதன் கீழ் அதன் சொந்தக் கொடியை பறக்க அனுமதித்தது. இந்திய யூனியனுடனான அதன் இணைப்பு இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு மூலம் ஏற்படுத்தப்பட்டது.
1952 ஆம் ஆண்டில், ஷேக் அப்துல்லா மற்றும் பிரதமர் ஜவஹர்லால் நேரு சார்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்திய யூனியன் இடையே கையெழுத்திடப்பட்ட டெல்லி ஒப்பந்தத்தில் கூறப்படுவது என்னவெனில், "இந்திய அரசின் கொடியை தவிர்த்து அந்த மாநிலத்திற்கு என சொந்தக் கொடி இருக்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது, ஆனால் அந்த மாநிலக் கொடி, இந்திய அரசின் கொடிக்கு போட்டியாளராக இருக்காது என்று மாநில அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அந்த மாநில கொடி சிகப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டது. ஜூலை 13, 1931ல் காஷ்மீர் போராட்டத்தில் ஏற்பட்ட இரத்தக்களரி நினைவாக அது உருவாக்கப்பட்டது. அந்த நாள் அதன்பிறகு தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த கோடியில் மூன்று கோடுகள் இருந்தன. அவர் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை குறிக்கின்றன. அந்த கலப்பை விவசாயியை குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இப்போது மத்திய அரசு 370 சட்டப்பிரிவில் திருத்தம் செய்திருப்பதால், இனி அந்த கோடியை காஷ்மீரில் தனி கொடியாக பயன்படுத்த முடியாது.