scorecardresearch

ஜெ வின் போயஸ் கார்டன் வீட்டை அதிமுக அரசு கையகப்படுத்தியது ஏன்? சட்டப்பூர்வ வாரிசுகள் யார்?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தைப் போலவே, ஜெயலலிதாவின் வேதா நிலையமும் மாநில அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Jayalalithaa Poes Garden House, Jayalalithaa house Veda Nilayam, Jayalalithaa residence, Poes Garden residence, ஜெயலலிதா, ஜெயலலிதாவின் போயஸ் காரடன் வீடு, வேதா நிலையம், சென்னை உயர் நீதிமன்றம், தீபா, தீபக், வேதா நிலையத்தின் சட்டப்பூர்வ வாரிசு, சசிகலா, அதிமுக, Madras HC on Veda Nilayam, Indian ExpressJ Jayalalithaa’s residence, Veda Nilayam, in Chennai’s Poes Garden, Deppa, Deepak, legal heir of Veda Nilayam, Sasikala, AIADMK

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது. இந்த முடிவை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான அவருடைய அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தைப் போலவே, ஜெயலலிதாவின் வேதா நிலையமும் மாநில அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழ்நாடு அரசு ஏன் வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விரும்பியது?

வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்ற அதிமுக அரசின் யோசனை என்பது, மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவின் கைகளுக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்தில் உருவானது. சசிகலாவின் விசுவாசிகளாக இருந்து எதிர் முகாமாக மாறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவரது அணியினரும், சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பார் என்று அச்சப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுமுடக்கத்தில் இருந்தபோது, அதிமுக அரசாங்கத்தின் அவசரத் திட்டங்களில் ஒன்றாக இந்த திட்டம் மே 2020ல் ஒரு அவசரச் சட்டத்துடன் தொடங்கியது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான அவருடைய மறைந்த சகோதரரின் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரை கேட்காததால் வேதா இல்லம் அரசு கையகப்படுத்தியது சட்ட ரீதியாக எதிர்க்கப்பட்டது.

ஜெயலலிதா வீட்டின் சொத்துக்களை அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையிலான புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளையின் கீழ் மாற்றுவது அரசின் திட்டமாக இருந்தது. வேதா நிலையத்தை கையகப்படுத்துவதற்காக மாநில அரசு ஜூலை 25ம் தேதி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூ.67.9 கோடி டெபாசிட் செய்தது. அதில் ரூ.36.9 கோடி ஐடி மற்றும் சொத்து வரி பாக்கியாக செலுத்தப்பட இருந்தது. இது ஜெயலலிதா வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை என்று கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 2021ல் இந்த வீட்டை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றுவதைத் தடுக்கவில்லை. ஆனால், அந்த வீட்டை அரசு பொது மக்களின் பார்வைக்காக திறப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பித்தது.

வேதா நிலையத்தின் அசையும் அசையா சொத்துக்கள்

நடிகையாக இருந்த ஜெயலலிதாவின் தாயார், முதலில் மூன்று மாடி வீடாக வாங்கிய சொத்தில் இரண்டு மாமரம், ஒரு பலா மரம், ஐந்து தென்னை, வாழை மரங்கள் உள்ளன. வீட்டின் உள்ளே 10,438 ஆடைகள் மற்றும் துணிகள், 8,376 புத்தகங்கள், 38 ஏ.சி.க்கள், 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, பொருட்கள், 11 தொலைக்காட்சிகள், 10 குளிர்சாதன பெட்டிகள், 29 தொலைபேசிகள் மற்றும் மொபைல் போன்கள், 394 நினைவுப் பரிசுகள், 65 சூட்கேஸ்கள், 108 அழகுசாதன பொருட்கள் மற்றும் 6 கடிகாரங்கள் உள்ளன.

ஜெயலலிதாவின் மறைந்த அண்ணன் ஜெயக்குமாரின் மூத்த மகள் தீபா(44) 1995ல் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அத்தையிடம் (ஜெயலலிதா) இருந்து ஒதுங்கி இருந்தார். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் செல்வாக்கு அதிகரித்ததால், பிராமணரல்லாத சசிகலாவின் மருமகன் வி.என்.சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்த ஜெயலலிதாவின் முடிவு ஆகியவை அவர்களை ஒதுக்கி வைப்பதற்கான காரணங்களாக அமைந்தன.

ஜெயலலிதாவுக்கும் அவரது மறைந்த அண்ணன் குடும்பத்துக்கும் இடையே இடைவெளி இருந்த நிலையில், 2013ல் தீபாவின் தாய் இறந்தபோது அவர் வரவில்லை.

தீபா, ஜெயலலிதாவை கடைசியாக 2002ல் சந்தித்தார், அவரது தம்பி தீபக் போயஸ் கார்டன் மற்றும் சசிகலா குடும்பத்தினருடன், குறிப்பாக சசிகலாவின் கணவர் மறைந்த நடராஜனுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வீட்டை அரசுடைமையாக்கும் நடவடிக்கையை ரத்து செய்து, தீபா மற்றும் தீபக்கிற்கு சொத்தை திருப்பி அளித்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் இருந்து வேதா நிலையத்தை வாங்க சசிகலா விரைவில் களமிறங்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட கருத்து வேறுபாடு காரணமாக 2011ல் போயஸ் கார்டனை விட்டு வெளிஅனுப்பப்பட்ட ஒரு குறுகிய காலத்தை தவிர, 1980களின் நடுப்பகுதியில் இருந்து சசிகலா ஜெயலலிதாவுடன் வாழ்ந்த இடம் அது.

ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்படுவதற்கு முன்பே சசிகலா 1980களில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கடைசியில் ஜெயலலிதாவுடன் வாழ குடும்ப வாழ்க்கையையே கைவிட்டார். சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் குழந்தைகள் இல்லை. 1990களுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழவில்லை.

இதில், சசிகலாவின் அண்ணன் மகன், அவருடைய குடும்பத்தில் மற்றவர்களைவிட அரசியல் புத்திசாலித்தனம் கொண்ட ஒரே நபர் டிடிவி தினகரன் உட்பட சசிகலாவின் பல குடும்ப உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக இருந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

ஜெயலலிதாவுடன் நட்புறவில் இருந்த சசிகலவின் மற்றொரு குடும்ப உறுப்பினர் சசிகலாவின் மறைந்த சகோதரரின் மனைவி இளவரசி மட்டுமே, இவர் ஜெயலலிதா முதல் குற்றவாளியாக இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர். இளவரசியின் குழந்தைகளும் தங்கள் குழந்தைப் பருவத்தை வேதா நிலையத்திலேயே கழித்தனர்.

பொதுமக்களின் பணம் வீணாவது தடுப்பு

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே பிரமாண்டமான நினைவிட வளாகம் உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை அந்த உத்தரவை ரத்து செய்து, அவரது பெயரில் மேலும் ஒரு நினைவிடம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பியது. வேதா நிலையத்தை அரசுடைமையாக்குவதற்கு மாநில அரசு சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்த தொகை ரூ.67.9 கோடி நீதிமன்ற உத்தரவின் மூலம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Jayalalithaa poes garden house veda nilayam madras hc case legal heir sasikala aiadmk