scorecardresearch

காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை; நிறைய கவலைகளும் சில பதில்களும்

Explained: In militant attacks, long Poonch ops, concerns and very few answers: காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் நடவடிக்கை வெள்ளிக்கிழமை வெற்றியின்றி பன்னிரண்டாவது நாளை நிறைவு செய்தது; ராணுவம் கவலை

காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை; நிறைய கவலைகளும் சில பதில்களும்

காஷ்மீரில் பொதுமக்களின் கொலைகள் மற்றும் ஜம்முவின் பூஞ்ச் ​​பகுதியில் கடந்த வாரம் ஒன்பது வீரர்களைக் கொன்ற தீவிரவாதிகளைத் தேடுதல் ஆகிய இரண்டு முக்கிய சூழ்நிலைகளுடன் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் போராடி வருகின்றன.

பூஞ்ச்-ன் ​​உயரமான பகுதியான பட்டா துரியனில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கை வெள்ளிக்கிழமை வெற்றியின்றி பன்னிரண்டாவது நாளை நிறைவு செய்தது. தீவிரவாதிகளின் எண்ணிக்கை அல்லது அவர்கள் ஒரே குழுவினரா அல்லது பல குழுக்களைச் சேர்ந்தவர்களா எனற தெளிவு இன்னும் இல்லை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

தீவிரவாதிகளில் ஒருவர் கூட இதுவரை பார்க்கப்படவில்லை. துப்பாக்கிச்சூடு சண்டையில் வீரர்கள் உயிர் இழந்ததில் இருந்து தெரிய வருவது என்னவென்றால், அவர்கள் நன்கு ஆயுதம் ஏந்தியவர்களாகவும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும் தோன்றுகிறார்கள், அவர்கள் பூஞ்ச் ​​அல்லது காஷ்மீரில் இருந்து பீர் பஞ்சால் எல்லையைத் தாண்டியவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதாக தெரிகிறது.

ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி “இந்த நேரத்தில் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது” என்றார்.

கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள் சுமார் 12 கிமீ தொலைவிற்குட்பட்ட பகுதிகளில் ராணுவ பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. தேடலில் “தொழில்நுட்பம்” பயன்படுத்தப்படுவதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு & காஷ்மீரில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி, அங்கு நிலப்பரப்பு கடினமானது, அடர்த்தியான மரங்கள் இருப்பதால் குறைந்த தெரிவுநிலையுடன் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

“இது கண்ணாமூச்சி விளையாட்டைப் போன்றது. தேடும் நபரை விட, மறைந்திருப்பவர்களிடம் தான் நன்மை இருக்கிறது” என 2010 முதல் 2012 வரை ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட XV கார்ப்ஸின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் (ஓய்வு) கூறினார்.

வெள்ளிக்கிழமை, தேடுதல் நடவடிக்கையில் இரண்டு சிறிய பெட்டிகள் கிடைத்தன, அவை ஐஇடிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இரண்டும் அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டதாக ராணுவ PRO லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறினார்.

அடர்ந்த பைன் காடுகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் அல்லது மறைவிடங்களை கண்டறிவதற்காக ட்ரோன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் இன்னும் காட்டில் இருக்கிறார்களா அல்லது தப்பிச் சென்றார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த சனிக்கிழமை முதல் தீவிரவாதிகளுடன் “தொடர்பு” இல்லை மற்றும் துப்பாக்கி சண்டை இல்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் கேட்கப்பட்ட கடுமையான துப்பாக்கிச் சூடு எந்த பதிலும் கிடைக்காத தேடல் குழுக்களின் “ஊக” தீ. இப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கைக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகியும், ராணுவம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. அக்டோபர் 11 அன்று பூஞ்சின் சூரன்கோட் வட்டாரத்தில் உள்ள சாமர் காட்டில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்; அக்டோபர் 14 அன்று மேலும் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் ஏப்ரல்-மே 2003 ஹில்காகா சம்பவத்தில் இருந்து கடந்த இரண்டு தசாப்தங்களில் பெரும்பாலும் தீவிரவாதம் இல்லாத ஒரு பகுதியில் இது நடந்திருப்பதுதான் கவலையான விஷயம் என்பது இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே இந்த வார தொடக்கத்தில் பூஞ்ச் ​​மற்றும் ரஜோரிக்கு சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ததில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலுள்ள முன்னோக்கியப் பகுதிகள் மற்றும் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் பிற பகுதிகளில் தளபதி ஆய்வு செய்தார்.

2014-16 வரை வடக்கு ராணுவ தளபதியாக பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் தீபேந்திர சிங் ஹூடா (ஓய்வு), தீவிரவாதிகள் அப்பகுதியில் இருப்பது “உண்மையில் கவலையளிக்கிறது” என்றார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சமீபத்திய தீவிரவாதம் ஜம்முவில் உள்ள முன்னாள் ஹாட் பெட்களுக்கு பரவாமல் இருப்பதற்கு ஒரு காரணம் உள்ளூர் ஆதரவு இல்லாததுதான் என்றார். “என் மனதில், இந்த குழு இரண்டு மாதங்களுக்கு மேலாக உள்ளது என்பது உண்மையானால், அதுதான் உண்மையான கவலை. அப்படியானால், உள்ளூர் மக்களின் அணுகுமுறையில் மாற்றம் உள்ளதா என்பதுதான் கேள்வி. என லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா கூறினார்.

தீவிரவாதிகள் இவ்வளவு காலம் அவர்களைக் கண்டறிவதைத் தவிர்க்க முடிந்தது என்பது நமக்கு சிவப்பு (எச்சரிக்கை) கொடியையும் உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில், இரண்டு வீடியோக்கள் வெளிவந்தன, அதில் ஒருவன் காஷ்மீரியில் பேசுகிறான், அவனும் சக தீவிரவாதியும் அக்டோபர் 11 அன்று எப்படி வீரர்களைக் கொன்றோம் என்பதை விவரிக்கிறான். மற்றொன்று ஒரு நீண்ட குறுஞ்செய்தி. அது சரியான ஆங்கிலத்திலும் மற்றும் பின்னணியில் இசை ஒலித்தவாறும், அவர்களை கண்டுபிடிக்க ராணுவத்திற்கு சவால் விடுத்துள்ளது.

பள்ளத்தாக்கில், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய எவரையும் காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை. கொல்லப்பட்டவர்களில் இரண்டு பண்டிட்டுகள், ஒரு சீக்கியர், நான்கு உள்ளூர் அல்லாத புலம்பெயர்ந்த தினசரி ஊதியம் பெறுபவர்கள் மற்றும் இரண்டு காஷ்மீரி முஸ்லிம்கள் அடங்குவர்.

இந்த கொலைகளுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற நிழல் குழு பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில நாட்களாக, 700 க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் தடுப்புக் காவலில் எடுத்துள்ளனர். மேலும் விசாரணை காலதாமதமான நிலையில், தடை நடவடிக்கை பள்ளத்தாக்கில் கோபமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளன. பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி அதை “கூட்டு தண்டனை” என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் ஒன்றிணைந்ததால், ஜே&கே இல் பாதுகாப்பு சூழ்நிலைகள் வெளிப்படையாகத் தோன்றிய நிலையில் இருந்து நெருக்கடி நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜூலை வரை எல்லை தாண்டிய ஊடுருவல்கள் இல்லை.

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த புரிந்துணர்வை பிப்ரவரி 24-ம் தேதி புதுப்பித்ததே இதற்கு காரணம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர், ஏனெனில் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடானது, பெரும்பாலும் ஊடுருவும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் ஜூலை முதல் பல ஊடுருவல் முயற்சிகள் நடந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை முதல் செப்டம்பர் இறுதி வரை, 10-15 தீவிரவாதிகள் எல்லை தாண்டியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனரல் நாரவனே சமீபத்திய இந்தியா டுடே கான்க்ளேவில், புதுப்பிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ஜூலை வரை நீடித்தாலும், “ஜூலை மாத இறுதியில் இருந்து, இந்த சம்பவங்கள் ஆங்காங்கே மீண்டும் தொடங்கியுள்ளன. 2003ல் ஒரு வித்தியாசமான சம்பவத்துடன் தொடங்கி, போர்நிறுத்தம் இல்லாத அளவுக்கு உயர்ந்தது, அது இப்போது மீண்டும் 2003 மாதிரியைப் பின்பற்றுகிறது.

கடந்த மாதத்தில், “நாங்கள் மீண்டும் ஊடுருவல் முயற்சிகளை பார்க்கிறோம்” என்று அவர் கூறினார், மேலும் “இரண்டு அல்லது மூன்று” முயற்சிகளை முறியடித்துள்ளோம். அதையும் மீறி, “முறையான போர்நிறுத்த மீறல் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன, அதாவது, வடக்கு காஷ்மீரில் உள்ள ஷம்ஷாபரி மலைத்தொடர் பகுதியில், ஒரு போஸ்ட் மற்றொரு போஸ்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது”, என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 18 அன்று உரி பகுதியில் ஊடுருவல் முயற்சிக்குப் பிறகு, ராணுவம் அந்தப் பகுதியில் ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கையை நடத்தியது, மேலும் அது மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதாகவும், லஷ்கர்-இ-தொய்பாவின் 19 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்துவிட்டதாகவும் கூறியது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது “தற்செயல் நிகழ்வு அல்ல” என்று பல பாதுகாப்பு அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

தலிபான்களின் வெற்றிக்குப் பிறகு பள்ளத்தாக்கில், மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது “கவலைக்குரிய விஷயம்” என்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி ஒப்புக்கொண்டார்.

தீவிரவாத குழுக்களில் ஆட்சேர்ப்பு ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சுமார் 100 காஷ்மீரி இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அவர்களில் பலர் “ஹைப்பிரிட்” அல்லது பகுதி நேர தீவிரவாதிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பிட்ட பணிகளுக்காக அவர்கள் நியமிக்கப்படலாம். அண்மைக்காலமாக நடந்த கொலைகளில் பெரும்பாலானவை எளிதில் மறைத்து வைக்கும் துப்பாக்கிகளால் நடத்தப்பட்டவை.

குல்காமில் பீகாரைச் சேர்ந்த இரு தினக்கூலித் தொழிலாளர்கள் அக்டோபர் 18ஆம் தேதி கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இருந்த லஷ்கர் தளபதி ஒருவர் அக்டோபர் 20 அன்று ஷோபியானில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜி விஜய் குமார் கூறினார்.

ஆனால் கொலைகள் நிறுத்தப்படும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. அக்டோபர் 16 அன்று, ஸ்ரீநகரில் உள்ள ஐந்து பயங்கரவாதிகளில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் “நடுநிலைப்படுத்தப்படுவதற்கு” நெருக்கமாக இருப்பதாகவும் விஜய் குமார் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீகாரைச் சேர்ந்த ஒரு தெரு வியாபாரி ஸ்ரீநகரில் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். உ.பி.யைச் சேர்ந்த ஒரு தச்சர் புல்வாமாவில் கொல்லப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Jk killing militant attacks poonch operation