மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா இன்று ஏஐசிடிஇ அரங்கத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிலையில் உணவு விடுதிக் கட்டண உயர்வு, உடைக் கட்டுப்பாடு ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, ஜேஎன்யூ மாணவர்கள்…

By: Updated: November 11, 2019, 09:50:46 PM

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா இன்று ஏஐசிடிஇ அரங்கத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்நிலையில் உணவு விடுதிக் கட்டண உயர்வு, உடைக் கட்டுப்பாடு ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, ஜேஎன்யூ மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜே.என்.யூ மாணவர் சங்கம் (ஜே.என்.யு.எஸ்.யூ) அக்டோபர் 28 முதல் பல போராட்டங்களை நடத்தியது, குறிப்பாக கடுமையான கட்டண உயர்வுக்கு எதிராக.

கட்டணம் ஏன் அதிகரிக்கப்பட்டுள்ளது?

இந்த உயர்வுக்கான ஜே.என்.யூ நிர்வாகத்தின் காரணம் என்னவென்றால், கட்டணம் 19 ஆண்டுகளாக கட்டணம் திருத்தப்படவில்லை என்பது தான். இவ்வளவு கட்டண உயர்வு என்பது, இவ்வளவு காலமாக கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படாததன் விளைவாகும் என்று மாணவர்களின் டீன் உமேஷ் கதம் முன்பு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்திருந்தார்.

ஒரு அறிக்கையில், பல்கலைக்கழக பதிவாளர் தண்ணீர், மின்சாரம் மற்றும் சேவை கட்டணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ .10 கோடி கட்டணம் வசூலித்து வருவதாகவும், இது பல்கலைக்கழக மானிய ஆணையத்திலிருந்து (யுஜிசி) பெறப்பட்ட பொது நிதியில் இருந்து செலுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தொடங்கினால் இந்த பணத்தை “விடுதிகளின் மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பிற்கு” பயன்படுத்தலாம் என்று பதிவாளர் கூறினார். தற்போது, மாணவர்கள் இந்த கட்டணங்களை செலுத்துவதில்லை.

கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?

புதிய விடுதி கட்டணத்தின் கீழ், மாணவர்கள் மாதத்திற்கு ரூ .1,700 சேவை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் முன்பு இல்லை. ஒரு அறைக்கான வாடகை மாதத்திற்கு ரூ .20 லிருந்து ரூ .600 ஆகவும், இருவர் பகிர்ந்து கொள்ளும் அறைக்கு மாதத்திற்கு ரூ.10 லிருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

JNUSU எவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்தது?

முன்னாள் JNUSU பொதுச் செயலாளர் ராம நாகா, கட்டண உயர்வுக்கான முன்மொழிவு முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் தொழிற்சங்கம் அதைத் திரும்பப் பெறுவதில் வெற்றி பெற்றது. இருப்பினும், இந்த உயர்வு இந்த அளவில் இல்லை.

ஜே.என்.யு மாணவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிக கட்டண உயர்வை அவர்களால் செலுத்த முடியாது என்று JNUSU கூறுகிறது.

கடந்த வாரம், 18 விடுதிகளுக்குமான 5 பொறுப்பாளர்கள், புதிய விடுதி உத்தரவுகளை நிராகரித்து ராஜினாமா செய்தனர். ஆனால் அவர்கள் ஜே.என்.யு.எஸ்.யுவின் அழுத்தத்தின் கீழ் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Jnu fee hike students protest jnusu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X