/tamil-ie/media/media_files/uploads/2020/11/biden-1200.jpg)
America Presidency election 2020 Joe Biden and Trump
Biden Cannot Undo Trump's Era Tamil News: 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், இன்னும் ஓர் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கவில்லை. இது அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஓர் முக்கியத் தருணம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வாக்காளர் எண்ணிக்கையை அமெரிக்கா கண்டுள்ளது மற்றும் இரு வேட்பாளர்களும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த பந்தயத்தில் யார் வென்றாலும், ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியினராலோ அல்லது குடியரசுக் கட்சியினராலோ இனி அமெரிக்கா வரையறுக்கப்படாது. ட்ரம்ப் அமெரிக்கர்களால் மட்டுமே வரையறுக்கப்படும்” என்று முன்னாள் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே குறிப்பிடுகிறார்.
தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுதேர்தலில் வெற்றி பெற்றால், அது 2016-ம் ஆண்டு அவர் தேர்வு செய்யப்பட்டது ஓர் மாறுபாட்டிற்கு என்ற ஊகத்தை நிறுத்திவிடும் அல்லது அமெரிக்க மக்களின் ஒரு பகுதியிலுள்ள குறையைச் சுட்டிக்காட்டும். ஒருவேளை ட்ரம்ப் தோற்றால், இந்த முறை ட்ரம்ப்பிற்கு ஆதரித்து வாக்களித்த அனைத்து அமெரிக்கர்களில் கிட்டத்தட்டப் பாதிப் பேரை புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மறக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியுமா? எந்த வழியிலும், அமெரிக்கா நாளை அல்லது மறுநாள் ஒரு புதிய யுகத்திற்குத் தயாராகியிருக்கும்.
ஜோ பிடன் வென்றால், அமெரிக்கா மீண்டும் கண்ணியத்துடன் ஈடுபடுவதோடு, டிரான்ஸ்-அட்லாண்டிக் கூட்டணியில் தொடங்கி நட்பு நாடுகள் மற்றும் மற்ற பங்குதாரர்களுடனான அதன் உறவுகளில் பரஸ்பர மரியாதையை மீட்டெடுக்கும். உண்மையாகப் பணியாற்றும் மாநில மற்றும் பாதுகாப்புத் துறைகள் மற்றும் நிறுவப்பட்ட ஜனாதிபதி செயல்முறைகள் மூலம் கொள்கையை ஒருங்கிணைத்தல் போன்ற செயல்களின் மூலம் புதிய நிர்வாகம் முன்பு போலவே தோற்றமளிக்கத் தொடங்கலாம். இருப்பினும், அதில் பல சந்தேகங்கள் உள்ளன.
"இந்த ஒளியியலுக்கு அப்பால், புதிய அரசியல் தளமாக இருக்கும் ட்ரம்ப் அமெரிக்கர்கள், ஜனாதிபதி யார் என்பதைப் பொருட்படுத்தாமல் அமெரிக்கக் கொள்கையை வடிவமைப்பார்கள்" என்றும் கோகலே கூறுகிறார்.
“கடந்த கால நிர்வாகங்களின் குடியேற்றம், அவுட்சோர்சிங் மற்றும் தாராளமான வர்த்தக கொள்கைகளால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க மக்கள் நம்புகின்றனர். டிரம்ப் அமெரிக்கா, அதிகப்படியான புலம் பெயர்ந்தவர்கள் சட்டரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ அமெரிக்காவில் குடியேறுவதை விரும்பவில்லை. ட்ரம்ப் அமெரிக்கா தங்கள் சொந்த செலவில் வேலைகளை அவுட்சோர்சிங் செய்வதை ஆதரிக்காது. சிறிய அமெரிக்க வணிகங்களை, வணிகத்திலிருந்து வெளியேற்றுவதற்கு மலிவான இறக்குமதியை அனுமதிக்காத வர்த்தகத்தில் நியாயமான ஒப்பந்தத்தை ட்ரம்ப் அமெரிக்கா விரும்புகிறது” என்று மேலும் கோகலே எழுதுகிறார்.
பிடன் நிர்வாகத்தால் கூட, திறந்த எல்லைகள் மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் நாட்களுக்கு அமெரிக்காவைத் திரும்பப் பெற முடியாது. இது பயணத் தடையை நிறுத்தக்கூடுமே தவிரக் குடியேற்றக் கொள்கையை மாற்றியமைக்க முடியாது. சில வகை வேலை-விசாக்களை தளர்த்தக்கூடும், ஆனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு விருப்பமான ஆப்ஷனாக அவுட்சோர்சிங் இருந்த காலத்திற்குத் திரும்ப முடியாது. இது உலக வர்த்தக அமைப்புடன் மீண்டும் ஈடுபடக்கூடும். ஆனால், 'மேக் இன் அமெரிக்கா' என்ற பெயரில் ட்ரம்ப் எழுப்பியுள்ள வர்த்தக தடைகளை உடைக்க முடியாது. மற்றவர்களுக்கு மிகவும் புண்படுத்தும் தந்திரங்களை நீக்கினால், பிடனின் சொந்த வர்த்தக நிகழ்ச்சி நிரல் ட்ரம்ப்பைப் போலவேதான் இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.