இந்த நிறுவனத்தின் கருத்துக்கள் இருந்தபோதிலும், ஜான்சன் & ஜான்சனின் பேபி பவுடர் அல்லது பிற டால்க் அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பை புற்றுநோய் அல்லது மீசோதெலியோமாவை உருவாகியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பகாசூர மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன்ஸ் நிறுவனம், அதன் டால்கம் பவுடரால் புற்றுநோயை உண்டாக்கியதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்த ஆயிரக்கணக்கானோருக்கு 8.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த வாரம் வழங்க ஒப்புக்கொண்டது. நீதிமன்றத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத இந்தச் சலுகை, நிறுவனம் முன்பு வழங்கிய 2 பில்லியன் டாலர் நிவாரணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
ஜான்சன் & ஜான்சன்ஸ் ஏன் இந்த இழப்பீட்டை வழங்கியது?
டால்க் பவுடராக பயன்படுத்தப்படும் பேபி பவுடர் போன்ற, தயாரிப்புகளுக்காக இந்நிறுவனத்திற்கு எதிராக 38,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சலுகை, இந்தத் தயாரிப்புகளுக்கு எதிரான அனைத்து தற்போதைய மற்றும் எதிர்கால வழக்குகளையும் தீர்க்கும். முன்மொழியப்பட்ட 8.9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு தொகை ஜான்சன் & ஜான்சன் எல்.டி.எல் நிர்வாகத்தின் துணை நிறுவனம் மூலம் 25 ஆண்டுகளில் செலுத்தப்படும். இந்த நிறுவனம் 2021-ல் உருவாக்கப்பட்டது. பின்னர், தாய் நிறுவனத்தை டால்க் தொடர்பான வழக்குகளில் இருந்து பாதுகாக்க திவால்நிலைக்கு சென்றுவிட்டதாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தம் இறுதியானதாக இருக்க வேண்டுமானால், அதை நீதிமன்றம் ஏற்க வேண்டும். அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கிய முந்தைய நிதிநெருக்கடி நிலையில் உள்ளது என தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இழப்பீட்டு சலுகைகள் இருந்தபோதிலும், இந்நிறுவனம் அதன் தயாரிப்புகள் பாதுகாப்பானது மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தவில்லை என்று கூறி வருகிறது.
2020-ல் அமெரிக்காவில் டால்க் பவுடர் அடிப்படையிலான தயாரிப்புகளை நிறுத்துவதாக அந்நிறுவனம் கூறியது. மேலும், 2023 முதல் உலக அளவில் சோள மாவுச்சத்து அடிப்படையிலான தயாரிப்புக்கு நகரும் என்று கூறியது. எவ்வாறாயினும், இந்த முடிவை அறிவித்த நிறுவனம், அதன் தயாரிப்புகளின் பாதுகாப்பு விவரங்களை பராமரித்தது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் கூறியதாவது, “உலகளாவிய நிர்வாக மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, அனைத்து சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் நிறுவமம் நிர்வாக நிறுவனமாக மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். எங்களின் அழகுசாதன டால்க்கின் பாதுகாப்பு குறித்த எங்களின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது… உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் பல பத்தாண்டுகளாக சுதந்திரமான அறிவியல் பகுப்பாய்வின் பின்னணியில் உறுதியாக நிற்கிறோம்.
டால்க் பவுடர் என்றால் என்ன? டால்க் <புற்றுநோயை உண்டாக்குமா?
டால்க் அல்லது டால்கம் ஒரு மென்மையான, இயற்கையாக ஊர்வாக்கப்படும் கனிமப் பொருள் ஆகும். இது தூல் வடிவில் பவுடராக பல்வேறு அழகுசாதனப் பொருட்களில் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கும், பிசுபிசுப்பைத் தடுப்பதற்கும் அல்லது இதமான உணர்வை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
டால்க் மற்றும் கருப்பை அல்லது நுரையீரல் புற்றுநோய்க்கு இடையே உள்ள தொடர்பு உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பல மருத்துவர்கள் மற்றும் பல அமைப்புகள் ஏஜென்சிகள் பவுடரை முகர்ந்து உள்ளிழுப்பது, பிறப்புறுப்பு பகுதியில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மற்றும் டால்க் இல்லாத மாற்றுகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஆலோசனை கூறுகின்றனர்.
இருப்பினும், கண்டறியப்பட்ட புற்றுநோயான அஸ்பெஸ்டாஸுடன் டால்க் பவுடரின் தொடர்ப்பு மிகவும் முக்கியமானது. அஸ்பெஸ்டாஸ் என்பது இயற்கையான மற்றொரு கனிமப் பொருள். இது பொதுவாக டால்க் சுரங்கங்களுக்கு அருகில் காணப்படுகிறது. “அஸ்பெஸ்டாஸுடன் டால்க் நச்சாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, டால்க் சுரங்கத் தளங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து, தாதுவை போதுமான அளவு பரிசோதிக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம்” என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது.
உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்களுக்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் அஸ்பெஸ்டாஸை குழு 1-ல் வகைப்படுத்துகிறது - இது மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களை வகைப்படுத்துவது ஆகும். அஸ்பெஸ்டாஸ் வெளிப்பாடு நுரையீரல் புற்றுநோய், நுரையீரலின் புறணி, குரல்வளை (குரல் பெட்டி) மற்றும் கருப்பை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, உலகில் சுமார் 125 மில்லியன் மக்கள் பணியிடத்தில் ஆஸ்பெஸ்டாஸுக்கு ஆளாகிறார்கள். கிட்டத்தட்ட பாதி தொழில்சார் புற்றுநோய்கள் அஸ்பெஸ்டாஸ் உடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இந்த நிறுவனத்தின் கருத்துக்கள் இருந்தபோதிலும், ஜான்சன் & ஜான்சனின் பேபி பவுடர் அல்லது பிற டால்க் அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பை புற்றுநோய் அல்லது மீசோதெலியோமாவை உருவாகியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பேபி பவுடர் புற்றுநோய் உடன் தொடர்புள்ளதா?
மீசோதெலியோமா என்பது ஒரு தீவிரமான கொடிய புற்றுநோய். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. புற்றுநோய் பொதுவாக நுரையீரலைச் சுற்றியுள்ள திசுக்களை பாதிக்கிறது. ஆனால், சில நேரங்களில் வயிறு, இதயம் மற்றும் விந்தணுக்களிலும் காணப்படுகிறது. நேஷனல் ஹெல்த் சர்வீஸ் குறிப்பிட்டுள்ளபடி, இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2,700 பேரை இந்த புற்றுநோய் பாதிக்கிறது. பெரும்பாலும் 75 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை பாதிக்கிறது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளில், வழக்கு தொடர்ந்தவர்கள் பிறப்புறுப்புப் பகுதியிலும் சானிட்டரி நாப்கின்களிலும் நீண்டகாலமாகப் பயன்படுத்தியதால் கருப்பைப் புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். பிறப்புறுப்பு பகுதியில் டால்கம் பவுடரை அடிக்கடி பயன்படுத்துவது குறித்து பல ஆய்வுகள் உள்ளன. சிலவற்றில் கருப்பை புற்றுநோயின் ஆபத்து அதிகரிப்பு இல்லை. சிலவற்றில் சற்று உயர்ந்த ஆபத்தை கண்டறிந்துள்ளன.
இருப்பினும், காஸ்மெடிக்-கிரேடு டால்க் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் நஞ்சாதல் இல்லை என்று தொழில்துறையினர் கூறுகிறார்கள். “சுரங்கங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளில் உள்ள மக்களை அஸ்பெஸ்டாஸ் நிறைந்த டால்க்கிலிருந்து பாதுகாக்கும் விதிமுறைகள் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் பொருந்தாது - பேபி பவுடர் டால்க் சில சமயங்களில் டால்க்கின் அதே சுரங்கங்களில் இருந்து வந்தாலும் கூட. தொழில்துறை பயன்பாட்டிற்காக விற்கப்பட்டது,” என்று 2018 ராய்ட்டர்ஸ் விசாரணையில் அந்நிறுவனம் அஸ்பெஸ்டாஸ் நஞ்சாதல் பற்றி கூறியது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு தெரியுமா?
ராய்ட்டர்ஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் 2018-ம் ஆண்டு நீதிமன்றத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய குறிப்புகள், உள்ளக அறிக்கைகள் மற்றும் ரகசிய ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், இந்த நிறுவனம் அதன் டால்க்கில் சில சமயங்களில் அஸ்பெஸ்டாஸ் கண்டறியப்பட்டதை அறிந்திருந்தது.
டிசம்பர் 1972 மற்றும் அக்டோபர் 1972 க்கு இடையில் டால்க்கின் எந்த மாதிரியிலும் அஸ்பெஸ்டாஸ் கண்டறியப்படவில்லை என்று 1976-ம் ஆண்டில் இந்த நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் உறுதியளித்ததாக ராய்ட்டர்ஸ் விசாரணை அறிக்கை கூறியது. ஆனால், 1972-க்கு இடையில் மூன்று வெவ்வேறு ஆய்வகங்கள் மூலம் குறைந்தது மூன்று சோதனைகள் செய்யப்பட்டன என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்தின. 1975-ல் அதன் டால்க்கில் அஸ்பெஸ்டாஸ் இருந்தது தெரியவந்ததாக ஒரு மாதிரியில் அதிக அளவில் பதிவாகியுள்ளது” என்று ராய்ட்டர்ஸ் கூறியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.