Advertisment

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்த முடிவு… குற்றச்சாட்டுகள் என்ன?

2010ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் தளத்தில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தரவுத்தளங்களில் இருந்த ஈராக் போர் பதிவுகள் சுமார் 4,00,000 ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக, அசாஞ்சே அமெரிக்காவால் தேடப்பட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்த முடிவு… குற்றச்சாட்டுகள் என்ன?

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்காவிற்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நீண்ட காலமாக இங்கிலாந்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில், முக்கிய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்த விவாகாரத்தில் அமெரிக்காவால் கோரப்படும் அசாஞ்சே, நாடு கடத்துவதற்கான உத்தரவில் பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் பிரிதி படேல் கையெழுத்திட வேண்டும். அசாஞ்சேநேரடியாக மேல்முறையீடு செய்ய நான்கு வாரங்கள் உள்ளன. ப்ரீத்தி படேல் உத்தரவுக்கு பிறகு, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்திற்கு தனது வழக்கை எடுத்துச் செல்லும் உரிமை அசாஞ்சேவுக்கு உள்ளது.

Advertisment

விக்கிலீக்ஸ் நிறுவனர் மீதான வழக்கு என்ன? அதன் விசாரணை ஏன் இவ்வளவு காலம் இழுத்தடிக்கப்பட்டதற்கான காரணத்தை இங்கே காணலாம்.

அசாஞ்சே ஏன் அமெரிக்காவில் தேடப்படுகிறார்?

ஏப்ரல் 5, 2010 அன்று, wikileaks.org என்ற இணையதளம் 39 நிமிட வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில், 2007 இல் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஈராக் கிளர்ச்சியின் போது, இரண்டு US AH-64 Apache ஹெலிகாப்டர்களின் துப்பாக்கிப் பார்வைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. ஹெலிகாப்டர் குழுவினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களையும், இரண்டு ராய்ட்டர்ஸ் போர் நிருபர்களையும் சுட்டுக்கொன்றது ஒளிப்பரப்பட்டது.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக, ராய்ட்டர்ஸ், அமெரிக்க தகவல் சுதந்திரச் சட்டம் மூலம், அதன் நிருபர்கள் கொல்லப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த வீடியோவை அணுக முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு முதல் விக்கிலீக்ஸ், ஈராக் போர் பதிவுகள் என அழைக்கப்படும் கிட்டத்தட்ட 4,00,000 ஆவணங்களை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தரவுத்தளங்களில் இருந்து புலனாய்வு ஆய்வாளர் பிராட்லி மானிங் உதவி மூலம் அணுகு தெரியவந்துள்ளது. மேனிங் இந்தக் கோப்புகளை CD-இல் காப்பி செய்து, விக்கிலீக்ஸ் டிராப்பாக்ஸில் பதிவேற்றினார்.

விக்கிலீக்ஸ் உடனடியாக பல ஊடக அமைப்புகளால் வெளியிடப்பட்ட போர் பதிவுகளை வெளியிட்டது. ம் ஈராக்கில் அதிகரித்த இறப்பு எண்ணிக்கையைத் தவிர ஆக்கிரமிப்புப் படைகளின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியது.

விக்கிலீக்ஸ் போர்டல் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களால் பராமரிக்கப்பட்டு வந்தாலும், அந்த தளம் அதன் நிறுவனரும் இயக்குனருமான ஜூலியன் அசாஞ்சேவால் பகிரங்கமாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. டிசம்பர் 2018 இல், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களால் செய்யப்பட்ட 16,000 க்கும் மேற்பட்ட கொள்முதல் கோரிக்கைகள் அடங்கிய தரவுத்தளத்தையும் வெளியிட்டது.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?

பராக் ஒபாமா நிர்வாகம் மானிங் கசிவுகள் பற்றிய விசாரணையைத் தொடங்கியது. உளவுச் சட்டத்தை மீறியதற்காக மானிங் ராணுவ நீதிமன்றத்தால் ஜூலை 2013 இல் தண்டிக்கப்பட்டார்.ஜனவரி 2017 இல் அவரது தண்டனை மாற்றப்படுவதற்கு முன்னர் கடுமையான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இருப்பினும், நிர்வாகத்தால் அசாஞ்சே மற்றும் விக்கிலீக்ஸ் மீது குற்றவியல் குற்றச்சாட்டை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

ஏப்ரல் 2017 இல் சீல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருந்த விக்கிலீக்ஸில் ரகசிய ஆவணங்கள், தகவல்தொடர்புகளை அணுக பாதுகாப்புத் துறை நெட்வொர்க்கின் பாஸ்வேர்டு பிரேக் செய்தி மேனிங் முயற்சித்தாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியதையடுத்து விஷயங்கள் மாறின.

பின்னர், டிரம்ப் நிர்வாகம் 1917 இன் உளவுச் சட்டத்தை மீறியதாக அசாஞ்சே மீது குற்றம் சாட்டியது. அவர் வர்ஜீனியாவின் கிழக்கு மாவட்டத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் 17 புதிய வழக்குகளில் குற்றச்சாட்டப்பட்டார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக 170 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இங்கிலாந்தில் விசாரணை

அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

2019-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு வாபஸ் பெற்றது. ஈக்வடார் அதிகாரிகளுடன் அசாஞ்சேயின் தகராறில் ஈடுபட்டதை தொடர்ந்து, ஜாமீன் மீறல்களுக்காக 50 வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

பின்னர், ஜனவரி 2021இல் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வனேசா பரைட்சர், அமெரிக்கா சிறைக்கு அசாஞ்சே நாடு கடத்தப்பட்டதால் அவரது மனநிலை காரணமாக தற்கொலை செய்ய வாய்ப்பிருப்பதாக தெரவித்தது. மேலும், அசாஞ்சே விமான ஆபத்து என மதிப்பிடப்பட்டதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது

டிசம்பர் 10, 2021 அன்று, அசாஞ்சே சிறையில் அடைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஜோ பைடன் நிர்வாகத்தின் உத்தரவாதங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அமெரிக்காவிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அவரை மிக உயர்ந்த பாதுகாப்பு சிறையில் அடைக்க்கூடாது. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது சொந்த நாடான ஆஸ்திரேலியா சிறையில் அடைக்க விரும்பினால், அனுமதி வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்தது.

அசாஞ்சே பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். ஆனால் மார்ச் 14 அன்று, மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இறுதியாக, இந்த வாரம் லண்டன் நீதிமன்றம் நாடு கடத்த உத்தரவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment