பாகிஸ்தான் நீதித்துறையில் வரலாற்று சிறப்புமிக்க தருணமாக, லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுகொண்டார்.
1956இல் நிறுவப்பட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பெண் ஒருவர் பதவி பிரமாணம் செய்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.
தலைமை நீதிபதி மாலிக்கின் நியமனம் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டாலும், ஒரு பெண் இந்த நிலையை அடைய எடுத்த காலத்தை சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் தகவலின்படி, பெண்கள் ஒட்டுமொத்த நீதிபதிகளில் 17 சதவீதமும், உயர் நீதிமன்றங்களில் 4.4 சதவீதமும் உள்ளனர்.
இந்த தரவை இந்தியாவுடன் ஒப்பிடுகையில், 1950இல் நிறுவப்பட்ட உச்ச நீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதிகளில் 4 பேர் பெண்கள் ஆவர். அதில், மூவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நியமனம் செய்யப்பட்டவர்கள். நீதிபதி பிவி நாகாரத்னா இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக 2027இல் பொறுப்பேற்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி, கடந்த 1989இல் நியமிக்கப்பட்டார். இந்த நியமனமானது, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் பெண்மணியான சாண்ட்ரா டே ஓ’கானர் நியமனமாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது குறிப்பிடத்தக்கது.
1981 இல், ஓ’கானர் அதிபர் ரொனால்ட் ரீகனால் உச்ச நீதிமன்றத்தின் இணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதி ஆயிஷா மாலிக்கின் பதவியேற்பு பிரமாணது, பல மாத விவாதத்திற்கு பிறகு நடைபெற்றுள்ளது. ஏனென்றால், நீதிபதி ஆயிஷா சீனியாரிட்டி அடிப்படையில் 4-வது இடத்தில் இருந்தார். இது தகுதியின் அடிப்படையில் மாலிக்கின் நியமனத்தை ஆதரிப்பவர்களுக்கும், சீனியாரிட்டியின் அடிப்படையில் அதை எதிர்த்தவர்களுக்கும் இடையே பிளவை உருவாக்கியது.
இருப்பினும், பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில், நீதிபதி ஆயிஷாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நியமனம் குறித்து பேசிய ஆணையத்தின் தலைவரான செனட்டர் ஃபரூக் ஹெச். நேக், நீதிபதிகள் நியமனத்திற்கு சீனியாரிட்டி கொள்கையை ஆணையம் இன்னும் நம்புகிறது. இருப்பினும், நீதிபதி மாலிக்கிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஒரு பெண் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என கூறியதாக பாகிஸ்தான் செய்தித்தாள் டான் தகவல் தெரிவித்துள்ளது.
நீதித்துறையில் அதிகளவிலான பெண்கள் இடம்பெற்ற வழக்குகள்
நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது சமத்துவத்தை முன்னிறுத்துவதற்கு மட்டுமல்ல, பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு வருவதால், பாலின கண்ணோட்டம் என்ற லேயரையும் சேர்ப்பதால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி வனேசா ரூயிஸ் 2017 இல் வாதிட்ட போது, பெண் நீதிபதிகளின் நீதித்துறையில் இடம்பெற்றால், சில சட்டங்கள் பாலின நிலைப்பாடுகளின் அடிப்படையில் எப்படி இருக்கலாம் அல்லது சில சட்டங்கள் ஆண்கள் அல்லது பெண்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை எடைபோட உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பாலின கண்ணோட்டமும் முக்கியமானவை ஆகும் என தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டில், நீதிபதி மாலிக் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கினார். அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “இரண்டு விரல் சோதனை” சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவித்தார். மாலிக் தனது 30 பக்க தீர்ப்பில், இரண்டு விரல் பரிசோதனை மற்றும் கருவளையம் சோதனை ஆகியவை பாகிஸ்தான் அரசியலமைப்பின் 9 மற்றும் 14 வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட கண்ணியத்தை புண்படுத்தும் நோக்கில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil