Advertisment

காபூல் விமான நிலையத்தின் அமைப்பு மற்றும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம்

Kabul airport blasts Afghanistan Taliban Infrastructure Tamil News விமான நிலையத்திற்குள் நுழைய ஆசைப்பட்டாலும் கேட்டை அணுக முடியாத சிலர், சாக்கடை கால்வாயில் வாயிலாகச் செல்ல முயன்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kabul airport blasts Afghanistan Taliban Infrastructure Tamil News

Kabul airport blasts Afghanistan Taliban Infrastructure Tamil News

Kabul airport blasts Afghanistan Taliban Infrastructure Tamil News : காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதலில், தற்போது தாலிபான் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையத்தின் பொதுமக்கள் பக்கம். இந்த விமான நிலையத்திலிருந்து வணிக விமானங்கள் இனி இயங்காது. காபூல், தாலிபான்களிடம் வீழ்ந்த மறுநாள் ஆகஸ்ட் 16 அன்று அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இரண்டாவது பிரிவு தொழில்நுட்ப பகுதி. இது அமெரிக்க ராணுவம் மற்றும் NATO படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதி மிகப் பெரியது. அனைத்து வெளியேற்ற விமானங்களும் விமான நிலையத்தின் இந்தப் பகுதியிலிருந்து இயக்கப்படுகின்றன.

அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தொழில்நுட்ப பகுதி மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது. விமான நிலையத்தின் இந்தப் பகுதிக்கான அணுகலை அமெரிக்கப் படைகள் கட்டுப்படுத்துகின்றன. அவை வடக்கு வாசல், கிழக்கு வாசல் மற்றும் அபே கேட்.

முதல் குண்டு வெடிப்பு இந்த மூன்று வாயில்களில் ஒன்றான அபே கேட்டில் நடைபெற்றது. இரண்டாவது குண்டுவெடிப்பு சிறிது தொலைவில் உள்ள பரோன் ஹோட்டலுக்கு அருகில் இருந்து பதிவாகியுள்ளது.

யாருமே சுவர்களில் ஏற முடியாதபடி, உயரமான சுவர்கள் மற்றும் கம்பிகள் அமைக்கப்பட்ட ஒரு விவரிக்க முடியாத பகுதி அது.

ஆகஸ்ட் 17-ம் தேதி அன்று தூதர் உட்பட அங்குள்ள அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டபோது, இந்திய தூதர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய இந்த அபே கேட் பயன்படுத்தப்பட்டது.

வாயிலுக்கு வெளியே, ஏராளமான மக்கள் முகாமிட்டு, விமான நிலையத்திற்குள் நுழைய விரும்பினர். விமான நிலையத்திற்குள் நுழைய விரும்பும் வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்த வாயில் மிகவும் பயன்படும் வாயிலாக மாறியிருக்கலாம்.

விமான நிலையத்தின் இந்தப் பக்கத்தின் பிரதான சாலை மற்றும் சுவர்களைப் பிரிக்கும் திறந்த வடிகால், அபே கேட் அருகில் உள்ளது. விமான நிலையத்திற்குள் நுழைய ஆசைப்பட்டாலும் கேட்டை அணுக முடியாத சிலர், இந்த சாக்கடை கால்வாயில் வாயிலாகச் செல்ல முயன்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Taliban Take Kabul Bomb Blast
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment