Advertisment

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்; திட்ட விவரம், விமர்சனங்கள்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில், முன்மொழியப்பட்ட நினைவுச் சின்னத்தின் அருகே பவளப்பாறைகள், கடல் புல், ஆலிவ் ரிட்லி ஆமைகள் போன்ற கடல் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu, Pen Monument, DMK, கலைஞர் கருனாநிதி, பேனா நினைவுச் சின்னம், திமுக கருணாநிதி, M Karunanidhi, Muthamizh Arignar Dr Kalaignar Pen Monument, Tamil Indian Express, controversy

மறைந்த தி.மு.க தலைவர் மு. கருணாநிதிக்கு கடலுக்குள் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு சில எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், மீனவர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வாழ்வாதாரம் சேதம் ஆகிய காரணங்களால் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என்று மிரட்டல் விடுத்தார்.

Advertisment

மெரினாவில் தமிழக அரசு முன்மொழியப்பட்ட ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்’

கடற்கரை கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களின் (CRZ) IA, II மற்றும் IVA இன் கீழ் வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அறிவிப்பு, 2011 (மார்ச் 22, 2016 வரை திருத்தப்பட்டது) பிரிவு 4(ii)(j) இன் கீழ் அனுமதி தேவை.

வங்காள விரிகுடா கடற்கரையில் இருந்து 360மீ தொலைவில் கடலுக்குள் 81 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘பேனா நினைவுச்சின்னம்’ கடந்த ஆண்டு அரசால் முன்மொழியப்பட்டது. அது நிறைவடைந்ததும் சென்னையின் அடையாளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நினைவுச் சின்னம் தமிழ் கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையின் பிரதிநிதித்துவமாக திட்டமிடப்பட்டுள்ளது. இது தமிழ் பாரம்பரியக் கூறுகளுடன் பிராந்திய கருக்கள், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புகளை இணைக்கும்.

நினைவுச் சின்னம்

1969 முதல் 2018 வரை திமுகவின் தலைவராகவும், 1969 முதல் 2011 வரை 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து தமிழ்நாடு மற்றும் திராவிட அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் மூலம் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கலைஞர் மு. கருணாநிதி தமிழ் இலக்கியப் பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர், புனைகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட எழுத்தாளர் என செயல்பட்டிருக்கிறார்.

அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி, தமிழின் இயல் இசை நாடகம் ஆகியவற்றிற்கு அவர் அளித்த பல பங்களிப்புகளை பேனா வடிவில் உள்ள நினைவுச்சின்னம் பிரதிபலிக்கிறது.

கலைஞர் கருணாநிதி தமிழர்களின் இதயங்களை ஆண்டார். தனது பேனா மூலம் செல்வாக்கு மிக்க வெகுஜனத் தலைவராக வளர்ந்தார். பேனா அவருடைய மிகப்பெரிய திறமை மற்றும் வலிமையின் சின்னம்.

இந்த நினைவுச் சின்னத்தின் வடிவமைப்பு, தமிழ்நாட்டில் மிகவும் துல்லியமாக கையால் செய்யப்பட்ட பாரம்பரிய கர்நாடக இசைக் கருவியான வீணையை அடிப்படையாகக் கொண்டது என்று ஆவணம் கூறுகிறது. தும்பா என்பது பேனா பீடத்தையும், கழுத்துப் பகுதி நீண்ட பாலங்களையும், இசைத் துளை ஒரு பேனா சிலையையும், ஆப்பு பாலத்தின் மீது அமர்ந்திருக்கும் இழுவிசை விதானத்தையும் குறிக்கப் பயன்படுகிறது.

இந்த திட்டத்தின் ஆவணத்தின்படி, பாலத்தின் நெடுவரிசைகளுக்கு இடையிலான தூரத்தைக் குறிக்க பிரடைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சரங்கள் மேரு அல்லது குதிரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

நினைவு பீடத்தில் உள்ள இயற்கை தோட்டத்திற்கான வடிவமைப்பு சிக்கு கோலத்தால் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இதில் புள்ளிகள், வட்டங்களைப் பயன்படுத்தி வடிவியல் வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. நினைவிடத்திற்கு உள்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்ட கிரானைட் பயன்படுத்தப்படும் என்று திட்ட ஆவணம் கூறுகிறது.

பாலத்தை அணுகும் வழி

கருணாநிதி தன்னை ஒப்பிட்டு உருவகப்படுத்திய கட்டுமரம் என்பதில் இருந்து கடலில் நினைவுச்சின்னம் என்ற கருத்து உருவானது. 42 மீட்டர் உயரமும், 2.60 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த நினைவுச்சின்னம், தற்போது மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலிருந்து பின்னல் கம்பி பாலம் மூலம் செல்லலாம்.

650 மீட்டர் பாலத்தின் இருநூற்று தொண்ணூறு மீட்டர் நிலத்திற்கு மேலே இருக்கும் (மெரினா கடற்கரை), மீதமுள்ள பகுதி தண்ணீருக்கு மேல் இருக்கும். பாலத்தின் சுவர்கள் அலை வடிவத்தில் இருக்கும்.

மழைக்காலத்திலும் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் வகையில் பாலத்தின் தளம் கரடுமுரடான அரை பாலிஷ் செய்யப்பட்ட கிரானைட் போன்ற வழுக்காத பொருட்களால் அமைக்கப்படும்.

மற்ற முன்மொழியப்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் பொது அடையாளம் காணும் அமைப்பு, முக்கிய இடங்களில் அவசரகால வெளியேற்றங்கள், உயிர் காக்கும் படகுகள், முதியோர் மற்றும் சிறப்புத் தேவைகள் பார்வையாளர்களுக்கு உதவியாக தளத்தில் குறைந்தது இரண்டு வாகனங்கள் மற்றும் நுழைவாயிலில் வானிலை தகவல் மற்றும் எச்சரிக்கைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

எதிர்ப்புகளும் சவால்களும்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில், தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்ட நினைவுச் சின்னத்தின் அருகே பவளப்பாறைகள், கடல் புல், ஆலிவ் ரிட்லி ஆமைகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கடல் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இல்லை என்று கூறியுள்ளது.

நீர் மற்றும் வண்டல் தரம் உகந்ததாக இருப்பது கண்டறியப்பட்டது. பிளாஸ்டிக் பைகள், காகித அட்டைகள் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை மேற்பரப்பில் மிதக்கவில்லை. மேலும்,கடலின் அடிப்பகுதி சுத்தமாக இருக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த திட்ட ஆவணத்தின்படி, மீன்பிடி நடவடிக்கைகளில் குறுக்கிடாத வகையில் குவியல்களின் மீது கட்டமைப்புகள் கட்டப்படும் - மீன்பிடி படகுகளை இயக்குவதற்கு பாலாங்களின் தூண்களுக்கு இடையே போதுமான இடைவெளி இருக்கும் என்று திட்ட ஆவணம் கூறுகிறது.

இருப்பினும், கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் நீரில் ஆழமான இடத்தில் மட்டுமே மீன்கள் காணப்படுகிறது. முன்மொழியப்பட்ட நினைவுச் சின்னத்தின் 500 மீட்டர் சுற்றளவில் மீன்பிடி படகுகள் எதுவும் காணப்படவில்லை என்று திட்ட ஆவணம் கூறுகிறது.

சென்னைக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் பேனா நினைவுச்சின்னம் யோசனை, மும்பையில் அரபிக்கடலில் 15.96 ஹெக்டேர் தீவில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி 212 மீட்டர் சிலை அமைக்க உள்ளதை போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மன்னர் சிவாஜியின் பிரமாண்ட நினைவிடம் என்.சி.பி-காங்கிரஸால் 2004 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால், 2014-15-ல் சிவசேனா-பாஜக அரசாங்கத்தின் கீழ் மட்டுமே எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 24, 2016- ல் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

2018 அக்டோபரில் ரூ. 2,890 கோடி மதிப்பிலான நினைவுச் சின்னத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இருப்பினும், பல சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மீனவர்களின் பிரதிநிதிகள் இந்த திட்டத்திற்கு சவால் விடுத்ததையடுத்து, 2019 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தால் பணி நிறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்த்தின் அறிக்கை, பேனா நினைவுச்சின்னம் மக்களின் மனங்களில் அவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்றும், சுற்றுலா, கல்வி, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு மதிப்பு சேர்க்கும் என்றும், ஒரு நாள், ஒரு சர்வதேச இடமாக பார்வையாளர்களை ஈர்க்கும் அளவில் மெரினா கடற்கரையை உருவாக்கும் என்றும் கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kalaignar Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment