ஜோ பைடனால் அறிவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி: யார் இந்த கமலா ஹாரிஸ்?

அதிபர்  தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு வரை பெர்னி சாண்டர்ஸ் 'அனைவருக்கும் மருத்துவம்' (Medicare for All)  மசோதாவை ஆதரித்தார். 

By: Updated: August 12, 2020, 07:27:58 PM

By : New York Times
Written by Maggie Astor and Sydney Ember

துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் கலிஃபோர்னியா செனெட் பதவி வகிக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரீஸ் பெயரை பரிந்துரை செய்துள்ளார் ஜோ பிடன். இந்த கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் முதல் கறுப்பின பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கமலா ஹாரீஸ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். இருப்பினும், டிசம்பரில் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

வழக்கறிஞர் பின்னணி:   

2004 முதல் 2011 வரை சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராகவும், 2011 முதல் 2017 வரை கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாகவும் இருந்த வழக்கறிஞர் பின்னணியை, தனது அதிபர் பிரச்சாரத்தின் போது முக்கிய கருப்பொருளாக அமைத்தார். இந்த பின்னணி, வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக விவாதிக்கப்படும். ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு காரணமாக கருதப்படும் இனவெறிக்கு எதிராகவும், காவல்துறையின் மிருகத்தனத்திற்கு எதிராகவும் அங்கு ஒருமித்த குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

ஹாரிஸ் தன்னை ஒரு “முற்போக்கு வழக்கறிஞர்” என்று குறிப்பிடுகிறார். குற்றங்களை கடுமையாக கையாள வேண்டும் என்று உணர்த்தும் அதே வேளையில், குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள ஆழ்ந்த ஏற்றத்தாழ்வுகளும் களையப் பட வேண்டும் என்று வாதிடுகிறார். நிர்வாக களத்திற்குள் உள் இருந்து கொண்டு சமூக மாற்றங்களை உருவாக்க வழக்கறிஞர் பணிக்கு வந்ததாக கூறும் இவரது கருத்துக்கள், மக்கள் முன் தன்னை அதிபர் வேட்பாளராக நிலை நிறுத்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

இருப்பினும், வழக்கறிஞர் பனியின் போது அவருடைய செயல்பாடுகள்  பல விமர்சனங்களுக்கும் உட்படுத்தப்பட்டது, குறிப்பாக இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்கள் பல கட்ட விமர்சனங்களை முன்வைக்கின்றன.

அட்டர்னி ஜெனரலாக இருந்த போது,பொதுமக்களைக் கொன்ற காவல்துறை அதிகாரிகள்  மீது அரிதாகவே வழக்குத் தொடர்ந்தார்  கறுப்பினத்தைச் சேர்ந்த கெவின் கூப்பரின் டி.என்.ஏ., பரிசோதனையை சாட்சியாக ஏற்க மறுத்ததன் மூலம், அவரின் தூக்குத் தண்டனையை உறுதிபடுத்தியது போன்ற குற்றச்சாடுகள் இவர் மீது பரவலாக முன்வைக்கப்படுகிறது.

தூக்குத் தண்டனை எதிர்ப்பாளியான ஹாரிஸ், 2004 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கோர மறுத்துவிட்டார். இந்த, நடவடிக்கை மிகப்பெரிய எதிர் வினையை அமெரிக்காவில் உருவாக்கியது.  ஒரு சிறந்த குற்றவியல் நீதி முறைமை அமைவதற்கான தனது உறுதிப்பாட்டில் நிலையாக இருப்பதாகவும்  ஹமலா ஹாரிஸ் தெரிவித்தார். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மரண தண்டனை அமெரிக்கா அரசியலமைப்பிற்கு முரணானது என்று கலிபோர்னியா நீதிபதி  அளித்த தீர்ப்பை  எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். ஒரு மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் என்ற முறையில் தான் அவ்வாறு செய்ய கடமைப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தனது அதிபர் பிரச்சாரத்தின்போது அவர் வெளியிட்ட, குற்றவியல் நீதி சீர்திருத்த  திட்டத்தில், தொழில்முறை (அட்டர்னி ஜெனரல்) வாழ்க்கையின் போது அவர் எதிர்த்த பல முற்போக்கான கொள்கைகள் இருந்தன.

கமலா ஹாரிஸின் செனட் வாழ்க்கை: 

2016 இல் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாரிஸ், பத்தாண்டுகளுக்கு மேல் அந்த சபையில் பணியாற்றிய முதல் கருப்பின பெண் என பெயர் பெற்றார் . கலிஃபோர்னியாவின் ஜூனியர் செனட்டராக இருந்த காலத்தில், பிரெட் கவனாக், அட்டர்னி ஜெனரல் ஜெஃப் அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ்  போன்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் நியமனங்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

சமீபத்திய ஆண்டுகளில், இடதுசாரி  ஜனநாயகக் கட்சியோடு  தன்னை மேலும் இணைத்துக் கொள்ள முயன்றார். அதிபர்  தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு வரை பெர்னி சாண்டர்ஸ் ‘அனைவருக்கும் மருத்துவம்’ (Medicare for All)  மசோதாவை ஆதரித்தார்.  ஒரு மணி நேர குறைந்தபட்ச ஊதியத்தை $ 15 ஆக உயர்த்துவதற்கும், நாட்டின் ஜாமீன் முறையை திருத்துவதற்கும் அவர் ஆதரவளித்துள்ளார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலைக்குப் பிறகு, ஹாரிஸ் இன நீதிச் சட்டத்தின் குரல் ஆதரவாளராக இருந்து வருகிறார். காவல் துறையை  மாற்றியமைப்பதற்கான முன்மொழிவுக்கும் ஆதரவளித்தார்.

ஜோ பிடன்- கமலா ஹாரிஸ் உறவு :

கமலா ஹாரிஸ், ஜோ பிடன் இருவருக்கும் இடையே கசப்பான அரசியல் உறவு நிறைந்துள்ளது என பல அரசியல் விமரசர்கள் நினைத்திருக்கலாம். ஏனெனில், ஹாரிஸ்  தனது தேர்தல் பிரசாரத்தின்  ஜோ பைடன் போது வலிமையான தாக்குதலை முன் வைத்தார். குறிப்பாக, பொதுப் பள்ளிகளை ஒருங்கிணைக்கும்  ஒரு வழிமுறையாக பள்ளி வாகனத்தை பயன்படுத்தும் முயற்சியை முந்தைய காலங்களில் பைடன் எதிர்ப்பு தெரிவித்ததை மேடைகளில் நினைவு கூர்ந்தார்.

பிரிவினைவாத செனட்டர்களுடன் பைடன் நட்பாக பணிபுரிந்தார் என்ற செய்தியைக் கேட்பது ‘வேதனையளிக்கிறது’. “கலிபோர்னியாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, பொதுப் பள்ளிகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு பகுதியாக இருந்தாள்.  அவள் ஒவ்வொரு நாளும் பேருந்தின் மூலம் பள்ளிக்கு அழைத்து  செல்லப்பட்டாள் , அந்த சிறுமி நான்தான். ” என்று ஹாரிஸ் தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களை களைய பைடன் பிராச்சராக் குழு, செவ்வாயன்று ஹாரிஸைப் பற்றிய ஒரு ஆவணத்தை  வெளியிட்டது.  அதில் இருவருக்கும் இடையேயான ‘நட்புறவு’ குறித்தும் விவரிக்கப்பட்டது.   அட்டர்னி ஜெனரலாக அவர் பணியாற்றினார் என்பதைக் குறிப்பிட்டார். டெலாவேர் மாகாணத்தின்  அட்டர்னி ஜெனரலாக பைடனின் மகன் பியூ இருந்தார் என்றும், கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் இருந்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

வாக்காளர்களின் பார்வை: 

தனது அதிபர் பிரச்சாரத்தின்போது, ​​ஹாரிஸ் மிதமான ஜனநாயகவாதிகளிடம் குறிப்பாக முறையிட்டார். தலைமைத்துவத்தில் தங்கள் எண்ணங்களை பிரதிபலிப்பைக்  காண ஆர்வமுள்ள குறிப்பாக கறுப்பின மற்றும் நகர்புற பெண்  வாக்காளர்களிடம்  ஜோ பைடனை வலுப்படுத்த முடியும்.

ஆனால், சாண்டர்ஸின் ஆதரவாளர்கள் உட்பட முற்போக்கான இடதுசாரிகள் பெரும்பாலும் ஹாரிஸின் தேர்வில் ஏமாற்றமடைவார்கள். கமலா ஹாரிஸ், புரட்சிகர திட்டங்களை விட படிபடிப்படியான, தேய்ந்துபோன சமூக மாற்றத்திற்கு மிகவும் ஆதரவாக உள்ளார் என்பது அவர்களின் கருத்து.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Explained who is kamala harris joe bidens vice president choice

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X