Tamil News : டிசம்பர் 14-ம் தேதி, நடிகர் ஹிரித்திக் ரோஷன் “அடையாளம் தெரியாத நபர்களுக்கு” எதிராக ஆள்மாறாட்டம் குறித்த புகார் மும்பை காவல்துறையின் சைபர் கலத்திலிருந்து குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (சிஐயு) மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லாதது குறித்து நடிகரின் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி மும்பை போலீஸ் ஆணையருக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஹிருத்திக் ரோஷனின் புகாருக்கும் கங்கனா ரனாவத்துக்கும் என்ன சம்பந்தம்?
2016-ம் ஆண்டில், ஹிரித்திக் ரோஷன் சக நடிகையான கங்கனா ரனாவத்துடன் ஏற்பட்ட தீவிர வாதத்தைத் தொடர்ந்து ஆள்மாறாட்டம் புகார் அளித்திருந்தார். இந்த வாதங்கள் எல்லாம் 'க்ரிஷ் 3'(2013) திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியபோது தொடங்கியது. கங்கனா ரனவுத் ஓர் நேர்காணலின் போது தனது "வேடிக்கையான முன்னாள் காதலன்" என்று ஹிரித்திக் ரோஷனை குறிப்பிட்ட பின்னர் அவர் இந்த சட்டப்பூர்வ அறிவிப்பை முன்வைத்தார்.
கங்கனா ரனாவத் உடனான முந்தைய காதல் உறவு பற்றி மறுப்புத் தெரிவித்து முதலில் ட்விட்டரில் ஹ்ரித்திக் பதிலளித்தார். மேலும், அவர் d (sic) போப்போடு அஃபயர் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் நக்கலாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஹிரித்திக் ரோஷன் தனது முன்னாள் இணை நடிகர் தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கக் கோரி சட்ட அறிவிப்புடன் இதைத் தொடர்ந்தார். ஆனால், கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 2014-ம் ஆண்டில் இருவரும் காதல் உறவில் இருந்ததாகக் கூறினர். அதோடு அவர் ஹிரித்திக் ரோஷனுக்கு எதிர் நோட்டீஸும் அனுப்பினார். அதில் அவருடைய அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் அல்லது கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஹிரித்திக் ரோஷனின் ஆள்மாறாட்டம் புகார் ஏன்?
ஹிரித்திக் ரோஷனின் சட்ட அறிவிப்பு கங்கனா ரனாவத்தை மன துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. கங்கனா, 1,439 மின்னஞ்சல்களை ஹ்ரித்திக்கு அனுப்பியதாகவும், அதற்கு அவர் ஒருபோதும் பதிலளிக்கவில்லை என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கங்கனா ரனாவத் யாருடன் தொடர்பு கொண்டிருந்தாரோ அவர் ஹிரித்திக் ரோஷன் போல நடித்து மோசடி செய்பவர் என்று அது பரிந்துரைத்தது.
அவருடனான கடிதப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மின்னஞ்சல் ஐடி தனக்கு ஹிரித்திக் ரோஷனால் வழங்கப்பட்டதாகக் கூறி, கங்கனா ரனாவத் இந்த ஆலோசனையை மறுத்தார். ஹிரித்திக் ரோஷனுக்கும் அவருடைய மனைவி சுசேன் கானுக்கும் இடையிலான விவாகரத்து நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த மின்னஞ்சல் தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் ட்விட்டரில் வார்த்தைகளின் போர் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் கங்கனா ரனாவத் ஆஸ்பெர்கர் நோய்க்குறியால் அவதிப்பட்டதால் விஷயங்களை "கற்பனை செய்து கொண்டிருக்கிறார்" என்று ஹிரித்திக் ரோஷன் குற்றம் சாட்டினார். அவருடைய கருத்து அதிகமான விமர்சனத்திற்கு வழிவகுத்தது. குறிப்பாக ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களைப் புண்படுத்தியது.
ஹிரித்திக் ரோஷன் இறுதியாக மும்பை காவல்துறையின் சைபர் செல் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 419 (ஆள்மாறாட்டம்) மற்றும் பிரிவு 66 (சி) - அடையாள திருட்டு - மற்றும் பிரிவு 66 (டி) - கணினி வளத்தைப் பயன்படுத்தி ஆளுமை மூலம் மோசடி - தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்தார். மின்னஞ்சல் ஐடி அமெரிக்காவைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டு, 2017-ம் ஆண்டில் NIL அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால், காவல்துறையினரின் விசாரணையில் அதிகம் கண்டுபிடிக்க முடியவில்லை.
கங்கனா ரனாவத் சமீபத்திய வளர்ச்சிக்கு எவ்வாறு பதிலளித்தார்?
இந்த வழக்கு சி.ஐ.யுவிற்கு மாற்றப்பட்ட செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹ்ரித்திக் ரோஷன் ஒரு பழைய பிரச்சினையைத் தோண்டியதாகக் குற்றம் சாட்டி கங்கனா ரனாவத் ஒரு ட்வீட்டை வெளியிட்டார். அதில், “நீங்கள் எவ்வளவு காலம் ஒரு சிறிய அஃபயருக்காக அழுவீர்கள். நாங்கள் பிரிந்து, அவர் மனைவியை விவாகரத்து செய்து பல வருடங்கள் ஆனாலும், தொடர்ந்து வாழ்வில் முன்னே செல்ல மறுக்கிறார், எந்தவொரு பெண்ணையும் காதலிக்க மறுக்கிறார், என் தனிப்பட்ட வாழ்க்கையில் சில நம்பிக்கையைக் காண நான் தைரியம் சேகரிக்கும் போது, அவர் அதே விஷயங்களை வைத்து மீண்டும் நாடகத்தைத் தொடங்குகிறார்” என்று குறிப்பிட்டிருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.