Advertisment

உண்மைத் தன்மை சரிபார்ப்புப் பிரிவை உருவாக்கும் கர்நாடகா: காங். அரசின் திட்டத்துக்கு ஆட்சேபனை எழுவது ஏன்?

எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 27-ம் தேதி அறிக்கையில், இத்தகைய உண்மைத் தன்மை சரிபார்ப்புப் பிரிவு, எதிர்ப்புக் குரல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் கைகளில் ஒரு கருவியாக மாறக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karnataka, fact check, fake news, fact checking unit, Priyank Kharge, Editors Guild of India, உண்மைத் தன்மை சரிபார்ப்பு பிரிவு, கர்நாடகா காங்கிரஸ் அரசின் திட்டத்துக்கு ஆட்சேபனை எழுவது ஏன், Karnataka congress govt to create fact-checking unit raise controversy, freedom, dissent, propaganda, social media, Tamil indian express, express explained

கர்நாடக முதல்வர் சித்தராமையா

எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 27-ம் தேதி அறிக்கையில், இத்தகைய உண்மைத் தன்மை சரிபார்ப்புப் பிரிவு, எதிர்ப்புக் குரல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் கைகளில் ஒரு கருவியாக மாறக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளது.

Advertisment

சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைத் தடுக்க உண்மைத் தன்மை சரிபார்ப்புப் பிரிவை உருவாக்க கர்நாடக அரசு எடுத்த முடிவு, பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான இந்த நடவடிக்கை பற்றின் கவலைகளை எழுப்பியுள்ளனர். போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் கொடூரமானதாக இருக்கக் கூடாது என்றும், நியாயமாகவும், சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் இருக்க வேண்டும் என்று இந்திய எடிட்டர்ஸ் கில்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

'போலி செய்தி குழுக்களை சமாளிக்க வேண்டிய அவசியம்

கர்நாடகாவில் 224 இடங்களைக் கொண்ட மாநில சட்டசபையில் 135 இடங்களில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சமூக ஊடக சேனல்கள் மூலம் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதாக காங்கிரஸ் அரசு கூறியுள்ளது.

போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளைத் தடுப்பதற்கான காங்கிரஸ் உத்தியின் ஒரு பகுதியாக இந்த முன்மொழிவு கருதப்படுகிறது. இது கடந்த காலங்களில் அதன் அரசாங்கத்தை குறிவைக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியது, குறிப்பாக சந்தேகத்திற்கிடமான மரணங்களின் நிகழ்வுகளில் பயன்படுத்தியதை கருத்தில் கொண்டு உருவாக்க முனைகிறது.

ஆகஸ்ட் 21 அன்று, கர்நாடக மாநிலத்திற்கு சைபர் செக்யூரிட்டி காவல்துறையை உருவாக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ‘போலி செய்தி குழுக்களை’ சமாளிக்க உண்மைத் தன்மை சரிபார்ப்பு பிரிவுகளை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

“ஜனநாயகம் பலவீனமடைவதற்கும் சமூகத்தில் எதிர்நிலை ஆக்கம் செய்வதைத் தடுப்பதற்கும் போலிச் செய்திகளைத் தடுப்பது அவசியம் என்று முதல்வர் கருதினார்,” என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி செய்திகளை பரப்புவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரவும், பொய்யான செய்திகளை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. உண்மைத் தன்மை சரிபார்ப்புப் பிரிவுகள் போலிச் செய்திகளைப் பரப்பும் குழுக்களைக் கண்டறிந்து, அத்தகைய செய்திகளைப் பரப்புவதைத் தடுக்கும். இந்த பிரிவு மேற்பார்வைக் குழு, உண்மை கண்டறியும் குழுக்கள் மற்றும் பகுப்பாய்வுக் குழுக்களைக் கொண்டிருக்கும் என்று முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கை கூறியுள்ளது.

இந்த கூட்டத்தின் போது, மாநில உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, போலி செய்திகள் - அதன் ஆரம்ப நிலையில் இருந்தாலும் - உலகளாவிய அச்சுறுத்தலாக மாறும் என்பதால் உடனடியாக இந்த பிரிவை உருவாக்க பரிந்துரைத்தார். உண்மைத் தன்மை சரிபார்ப்புப் பிரிவை உருவாக்குவதற்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்க ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.

உண்மைத் தன்மை சரிபார்ப்பு பிரிவு உருவாக்கம்

ஆகஸ்ட் 26-ம் தேதி பெங்களூரு காவல்துறை ஆணையர் பி தயானந்தா, பெங்களூரு நகரத்திற்கு மூன்று வெவ்வேறு நிலைகளில் காவல்துறையின் சமூக ஊடக கண்காணிப்பு பிரிவுகளை அமைப்பதாக அறிவித்தார்.

“சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் நடக்கும் போது, பல சமயங்களில் சம்பவங்களுக்கு காரணம் சமூக ஊடக பதிவுகள், சில ஆத்திரமூட்டும் பதிவுகள், சில வெறுப்பு பதிவுகள், இந்த பதிவுகள் மக்களை தூண்டிவிட்டு கிளர்ச்சியடையச் செய்வது மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமைகளுக்கு பொறுப்பாகும்” என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா தெரிவித்தார்.

“போலி பதிவுகள் மற்றும் போலி செய்திகள் வைரலாகும் நிகழ்வுகள் இருந்தால், நாங்கள் உண்மைத் தன்மையைச் சரிபார்த்து, உண்மைகளின் அடிப்படையில் சரியான தகவல்களை வழங்குவோம். காவல் நிலைய அளவிலும், டி.சி.பி அலுவலக அளவிலும், சி.ஓ.பி அலுவலக அளவிலும் குழுக்கள் இருக்கும்” என்று போலீஸ் கமிஷனர் கூறினார்.

ஆத்திரமூட்டும் மற்றும் போலி பதிவுகளை அடையாளம் காணவும், உண்மையை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்தும் சில பணியாளர்கள் காவல் நிலைய அளவில் பயிற்சி பெற்றுள்ளனர் என்று கூறினார்.

“இப்போது அனைத்து காவல் நிலையங்களிலும் சில தொழில்நுட்ப தகுதி வாய்ந்த பணியாளர்கள் கண்காணிப்பு மற்றும் அத்தகைய பதிவுகளைக் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். தவறான தகவல்கள் மற்றும் ஆத்திரமூட்டும் செய்திகள் பரப்பப்பட்டால், காவல்நிலைய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் அளவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா கூறினார்.

“டி.சி.பி அலுவலகங்களில் பிரிவு அளவில் சமூக ஊடக நடவடிக்கைகளை கண்காணிக்க சிறிய குழுக்கள் உருவாக்கப்படும். காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு பெரிய குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் நாங்கள் சமூக ஊடகங்களை கண்காணிப்போம்” என்று அவர் கூறினார்.

ஏற்கெனவே உண்மைத் தன்மை சரிபார்ப்பு சேவையை நடத்தி வரும் கர்நாடக காவல்துறை

சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கக்கூடிய பிரச்சனைக்குரிய செய்திகளை நீக்க, கர்நாடக காவல்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் இணையதளத்தில் உண்மைத் தன்மை சரிபார்ப்பு சேவையை நடத்தி வருகிறது. சமீப ஆண்டுகளில், பகைமையை ஊக்குவித்ததற்காகவும், மத உணர்வுகளை சீர்குலைத்ததற்காகவும், முன்பு தேசத்துரோகத்திற்காகவும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை பல நிகழ்வுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மேற்கு பெங்களூரில் 19 வயது இளைஞன் இறந்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் கொலைக்குக் காரணம், பாதிக்கப்பட்டவரால் உருது மொழியில் பேச முடியாததுதான் என்று கூறினர். அப்போதைய பெங்களூரு போலீஸ் கமிஷனர், இந்த சம்பவம் ஒரு விபத்தைத் தொடர்ந்து நடந்தது என்று சுட்டிக்காட்டினார். அப்போதைய கர்நாடக பா.ஜ.க உள்துறை அமைச்சர் ஆரக ஞானேந்திரா ஆரம்பத்தில் காவல்துறையின் கருத்துக்கு முரணாக இருந்தார்.

கர்நாடக காவல்துறை இணையதளம் வழங்கிய உண்மைத் தன்மை சரிபார்ப்பு சேவை சமூக ஊடகங்களிலும், சில உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களிலும் கொலைக்கான காரணத்தை நிரூபிக்காத செய்திகளை வெளியிட்டதை அடுத்து, உள்துறை அமைச்சர் கொலைக்கான நோக்கம் குறித்த தனது அறிக்கைகளையும் திரும்பப் பெற்றார்.

எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்த கவலைகள்

எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா, ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக அரசின் முடிவின் சில அம்சங்கள் குறித்து கவலை தெரிவித்தது.

“உத்தேசமான உண்மைத் தன்மை சரிபார்ப்புப் பிரிவின் நோக்கம் மற்றும் அதிகாரங்கள் மற்றும் அது செயல்படும் ஆளும் அமைப்பு முறையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்” என்று அந்த அறிக்கை கர்நாடக அரசை வலியுறுத்தியது.

“குறிப்பாக ஆன்லைன் இடத்தில் தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளின் சிக்கல் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டாலும், அத்தகைய உள்ளடக்கத்தை சரிபார்க்கும் முயற்சிகள் அரசாங்கத்தின் ஒரே வரம்பில் இல்லாத சுயாதீன அமைப்புகளால் செய்யப்பட வேண்டும். அத்தகைய கண்காணிப்பு வலையமைப்பு, முன்னறிவிப்பு, மேல்முறையீடு செய்வதற்கான உரிமை மற்றும் நீதித்துறை மேற்பார்வை உள்ளிட்ட இயற்கை நீதியின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

“பத்திரிக்கையாளர்கள், ஊடக அமைப்புகள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் உரிய ஆலோசனை மற்றும் ஈடுபாட்டுடன் இதுபோன்ற பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும். இதனால், பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்படக்கூடாது” என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கூறியது.

கர்நாடக தகவல் தொழில்நுட்பம்/பிடி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே, உண்மைத் தன்மை சரிபார்ப்பு பிரிவு பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்காது என்றும், சார்பு இல்லாத அரசியலற்ற நிலைப்பாட்டை நிலைநிறுத்தும் என்றும், பொது நடைமுறைகளை வெளிப்படையாக விளக்கும் என்றும் கூறினார்.

“போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதில் நமக்கு உதவ பட்டியலிடப்படும் சுயாதீன அமைப்புகளை நிறுவும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது… உறுதியளிக்கவும், நாங்கள் இயற்கை நீதியின் கொள்கைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றுவோம். இந்த பிரிவை நிறுவுவது எந்த வகையிலும் பத்திரிகை சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கும் முயற்சி அல்ல என்பதை தெளிவுபடுதுகிறோம்” என்று பிரியங்க் கார்கே கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment