கடுமையான கால்நடை பாதுகாப்பை நடைமுறைப்படுத்தும் மாநிலமாக கர்நாடக பாஜக அரசு உருவெடுத்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் இந்த மசோதா சட்டமன்ற மேலவையில் நிறைவேற்றப்படவில்லை. கடந்த புதன்கிழமை, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மசோதாவின் விதிகளை அமல்படுத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வர இருப்பதாக அம்மாநில அரசு கூறியது.
இந்த மசோதாவின் குறிப்பிடத்தக்க அம்சம் ‘கால்நடைகள்’ என்பதன் வரையறை. 13 வயதுக்கு உட்பட்ட பசு மாடுகள், காளைகள், எருதுகள் போன்றவைகளோடு எருமைகளும் கால்நடைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, இது பசுவதை சட்டம் என்பதை தாண்டி கால்நடை பாதுகாப்பு மசோதாவாக அமைகிறது.
பொதுவாக,மற்ற மாநிலங்களில் ஐரோப்பிய இன எருதாக (ஆபிரிக்க மற்றும் ஆசிய மாடுகளுக்கு ஒத்தது) கருதப்படும் போஸ் டாரஸ் (Bos taurus) மற்றும் இண்டிகஸ் எனும் விஞ்ஞானப் பெயரைக்கொண்ட காங்கேயம் காளை (ஆங்கிலத்தில் zebu) ஆகிய பிரிவுகளுக்கு மற்றும் சட்டம் இயற்றப்படும். இண்டிகஸ் வகைப் பிரிவில் தான் பசுக்கள், காளைகள், எருதுகள் ஆகிய கால்நடைகள் உள்ளன. ஆனால், எருமைகள் புபாலஸ் புபாலிஸ் என்ற தனி இனத்தைச் சேர்ந்தவை.
கர்நாடகாவுக்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸின் முந்தைய பாஜக அரசு, மிகக் கடுமையான பசுவதை தடை சட்டத்தை இயற்றியது. 2015 வருட மகாராஷ்டிரா விலங்கு பாதுகாப்பு திருத்தம் சட்டத்தின் கீழ், காளை மற்றும் எருதுகளை வதை செய்தால் 5 ஆண்டு கால சிறை தண்டனை என்று சட்டத்தை திருத்தம் செய்தது. சட்டத் திருத்ததிற்கு முன்பாக, பசுவை வதை செய்வோருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை என்றளவில் இருந்தது.
எனவே, எடியூரப்பா அரசின் கால்நடை மசோதா மகாராஷ்டிராவை விட கடுமையாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முதன்முறையாக, எருமைகளை வதை செய்தாலோ, வதை செய்வதற்காக எருமைகளை வழங்கினாலோ, தெளிவாகத் தெரிந்துணரப்படக் கூடிய குற்றவகைப்பாடாகக் கருதப்படும் என்றும் (பிடி ஆணையின்றி கைது), குறைந்தபட்சம் 3 ஆண்டு காலம் முதல் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் கூட எருமை வதைகளை சட்டவிரோதமாக கருதுவதில்லை.
13 வயதுக்கு அப்பால் உள்ள கால்நடைகளையும், எருமைகளையும் வதை செய்ய அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு முற்றிலும் பலனளிக்காது என்று நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.
பொதுவாக நல்ல முறையில் பராமரிக்கப்படும் கலப்பின மாடுகள் 18 மாத வயதில் (1 1/2 வயதில்) பருவமடைந்து கருவூட்டலுக்கு தயாராகுகிறது. 9-10 மாத கற்பகாலத்திற்குப் பிறகு தனது முதல் கன்றை பிரசவிக்கிறது. தனது, 27 (அ) 28 மாத வயதில் பால் உற்பத்தியை செய்யத் தொடங்குகிறது. அடுத்தடுத்த கன்று இடைவெளி 400-450 நாட்கள் (13-14 மாதங்கள்) . இயற்கையாகவே, பால் உற்பத்தி குறையும் காரணத்தினால், விவசாயிகள் வழக்கமாக 5 (அ) 6 க்கும் அதிகமான கன்றுக்குட்டியை ஈண்ட பசுவை வைத்திருக்க மாட்டார்கள். அதாவது, கிட்டத்தட்ட 7 முதல் 8 வருடங்களுக்கு மேல் ஒரு பசுவை பராமரிப்பது மிகவும் சிக்கலான காரியமாகும்.
பசு மாட்டைப் போன்று, 9 -10 ஆண்டுகளுக்குப் பிறகு எருமை மாட்டின் உற்பத்தித் திறன் மிகவும் குறைந்து காணப்படும். எருமை பொதுவாக 3.5 - 4 ஆண்டுகளில் தான் தனது முதல் கன்றை பெறுகிறது. அடுத்தடுத்த கன்று இடைவெளி 450 - 500 நாட்கள் ஆகும்.
எனவே, கால்நடையின் உற்பத்தித் திறன் குறைந்த பின்பும், 13 ஆண்டுகள் வரை அதை வலுக்காட்டாயமாக பராமரிப்பது விவாசாயிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தராது.
மேலும், விலங்கினக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, அனைத்து கால்நடைகளை இறைச்சிக்காகவும், பலியிடுவதற்கும் வதைக்க அனுமதி உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் தான் அதிக கால்நடைகள் உள்ளன. கால்நடை பராமரிப்பில் உத்தரபிரேதேச மாநிலத்தை விட மேற்கு வங்க மாநிலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன.
2012 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு மத்தியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜாராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் கால்நடைகள் குறைந்து கொண்டு தான் வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.