அரசியலமைப்புச் சபையில் கணிசமான விவாதங்களுக்குப் பிறகு பதவிப் பிரமாண உறுதிமொழி ஏற்பு வரிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒரு கட்டத்தில், ஐக்கிய மாகாணங்களின் உறுப்பினர் மகாவீர் தியாகி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை நோக்கி, ‘உறுதிமொழி ஏற்பு இலக்கணம் கடவுளின் வழியில் இருக்கக் கூடாது’ என்று முழங்கினார்.
காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் உறுதிமொழியேற்பும் செய்துவைத்ததையடுத்து, சித்தராமையா கர்நாடகாவின் புதிய முதல்வராக சனிக்கிழமை (மே 20) பதவியேற்றார். முதலமைச்சருடன், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் பல கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, அசோக் கெலாட், ஷரத் பவார், ஃபரூக் அப்துல்லா, எம்.கே. ஸ்டாலின் போன்ற தலைவர்கள் கலந்து கொண்ட இந்த பதவியேற்பு விழா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், உண்மையில் பதவியேற்பு விழா என்றால் என்ன, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எடுக்கும் உறுதிமொழி என்ன?
பதவியேற்பு விழா என்றால் என்ன?
பதவியேற்பு விழா என்பது குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிற அமைச்சர்கள் முறைப்படி பதவியேற்பது ஆகும். பதவி ஏற்கும் நபர் அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருப்பதாகவும், தங்கள் கடமைகளை உண்மையாக நிறைவேற்றுவதாகவும் சத்தியம் செய்கிறார்.
அரசாங்கத்தின் வெவ்வேறு நிலைகளில், பதவிப் பிரமாணம் வெவ்வேறு நபர்களால் செய்து வைக்கப்படுகிறது. மாநிலங்களின் சட்டசபைகளீல் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு, ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
குடியரசுத் தலைவர் முர்முவுக்கு தலைமை நீதிபதி ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவிப்பிரமாண உறுதிமொழி ஏற்பவர்கள் கடவுளின் பெயரில் சத்தியம் செய்யலாம் அல்லது வெறுமனே உறுதிமொழி ஏற்கலாம்.
இந்த விழா, ஒரு குறிப்பிட்ட பதவியை யாரோ ஒருவர் வகிக்கப் போகிறார் என்பதை முறையாகக் குறிப்பதைத் தவிர, இந்தியாவின் அரசியல் அதிகார கட்டமைப்பை உருவாக்கும் அடுக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், நமது அரசியலில் அரசியலமைப்பின் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது.
பதவியேற்பவர்கள் சரியாக என்ன உறுதிமொழி ஏற்கிறார்கள்?
ஒவ்வொரு பதவிக்கும் உரிய பதவிப்பிரமாண வார்த்தைகள் இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவரின் பதவிப் பிரமாணம், அரசியலமைப்பின் 60-வது பிரிவில், “நான், ஏ.பி., கடவுளின் பெயரால்/ மனசாட்சிப்படி உறுதி மொழி ஏற்கிறேன். இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியை (அல்லது குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளை) உண்மையாக நிறைவேற்றுவேன் என்று மனப்பூர்வமாக உறுதியளிக்கிறேன். மேலும், என்னால், இயன்றவரை அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், இந்திய மக்களின் சேவை மற்றும் நல்வாழ்வுக்காக என்னை அர்ப்பணிப்பேன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடவுளின் பெயரால் பதவியேற்றார்.
அரசியலமைப்பின் மூன்றாவது அட்டவணை மற்ற பதவிகளுக்கான பிரமாணங்களை விவரிக்கிறது. இந்த அமைச்சர்களும் ரகசிய காப்பு உறுதி மொழி ஏற்றுக்கொள்கிறார்கள்.
“மத்திய அமைச்சருக்கான பதவிப் பிரமாணப் படிவம்:- நான், ஏ.பி., கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்கிறேன் / மனசாட்சிப்படி உறுதிமொழி ஏற்கிறேன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நான் உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்திருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன். நான் மத்திய அமைச்சராக எனது கடமைகளை உண்மையாகவும் மனசாட்சியுடனும் நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்படி அனைத்து வகையான மக்களுக்கும் அச்சமோ தயவோ, பாசமோ இல்லாமல், விருப்பு வெறுப்பு இல்லாமல் பணியாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
மத்திய அமைச்சருக்கான ரகசிய காப்புப் உறுதிமொழி படிவம்: “நான், ஏ.பி., கடவுளின் பெயரால் உறுதி ஏற்கிறேன் / மனசாட்சிப்படி உறுதிமொழி ஏற்கிறேன் / நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்த ஒரு நபருக்கோ அல்லது நபர்களுக்கோ, கொண்டுவரப்படும் எந்த விஷயத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். அத்தகைய அமைச்சராக எனது கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றுவதற்குத் தேவைப்படுவதைத் தவிர, எனது பரிசீலனை அல்லது மத்திய அமைச்சராக நான் அறியப்படுவேன்” என்று இந்த அட்டவணை கூறுகிறது.
மாநில அளவில் பதவி வகிப்பவர்களுக்கு, “நான், ஏ.பி., கடவுளின் பெயரால் / மனசாட்சிப்படி உறுதி மொழி ஏற்கிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நான் உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்திருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்தவும்,] மாநிலத்தின் அமைச்சராக எனது கடமைகளை உண்மையுடனும் மனசாட்சியுடனும் நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்படி அனைத்து வகையான மக்களுக்கும் தயவு, பாசம், விருப்பு, வெறுப்போ இல்லாமல் அச்சமின்றி பணியாற்றுவேன் செய்வேன்.” என்று உறுதி ஏற்கிறார்கள்.
மாநில அமைச்சருக்கான ரகசிய காப்புப் பிரமாணப் படிவம்:- “நான், ஏ.பி., கடவுளின் பெயரால் / மனசாட்சிப்படி உறுதி மொழி ஏற்கிறேன். நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்த ஒரு நபருக்கோ அல்லது நபர்களுக்கோ, கொண்டுவரப்படும் எந்த விஷயத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். அத்தகைய அமைச்சராக எனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவேன்” என்று உறுதியேற்கிறார்.
கர்நாடகாவில் சனிக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில், யமகன்மார்டி எம்.எல்.ஏ சதீஷ் ஜார்கிஹோலி புத்தர் மற்றும் பசவண்ணாவின் பெயரிலும், சாம்ராஜ்பேட்டை எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான் அல்லா மற்றும் அவரது தாயார் பெயரிலும் பதவியேற்றனர்.
பதவிப்பிரமாண வார்த்தைகளை கொண்டு வந்தது யார்?
அரசியலமைப்புச் சபையில் கணிசமான விவாதங்களுக்குப் பிறகு பதவிப்பிரமாண உறுதியேற்பு வார்த்தைகள் முடிவு செய்யப்பட்டன. ஒரு மதச்சார்பற்ற அரசின் உறுப்பினர்கள் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்க வேண்டுமா என்பது பற்றிய கடுமையான விவாதங்களில் ஒன்றாக இருந்தது. கடவுள் பதவிப்பிரமாணத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகும், கடவுளின் பெயரில் கௌரவமாக உறுதிப்படுத்துவதற்கு முன் அல்லது பின் வர வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஒரு தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரிடம் கடவுளின் வழியில் பதவிப் பிரமாண உறுதிமொழி ஏற்பு இருக்கக் கூடாது இடிமுழக்கமிட்டார்.

இந்த விவகாரம் ஆகஸ்ட் 26, 1949 அன்று விவாதமாக எழுந்தது. ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினரான மகாவீர் தியாகி, “கடவுளின் பெயரில் சத்தியம் செய்கிறேன்” என்ற வார்த்தை மனசாட்சிப்படி உறுதி ஏற்கிறேன் என்பதற்கு மேல் இருக்கும் அளவுக்கு பதவிப்பிரமாண உறுதிமொழி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். மனசாட்சிப்படி என்பதை கீழாக வைத்து டாக்டர் அம்பேத்கர் வரிசையை மாற்றியுள்ளார்.
“டாக்டர் அம்பேத்கர் ஒரு சிறிய தந்திரத்துடன் முன்வந்திருப்பதற்கு இப்போது நான் வருந்துகிறேன் – இது ஒரு பள்ளி மாணவனின் தந்திரம், அவர் என்னை மன்னிப்பார் என்றால், அவர் என்ன செய்திருக்கிறார் என்றால், அவர் மனசாட்சிப்படி உறுதி ஏற்கிறேன் என்ற வார்த்தைகளை கீழே கொண்டு வந்து, கடவுளைக் மேலே கொண்டு வந்திருக்கிறார். இது ஒரு தந்திரமாக இருந்தால், நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன். ஆனால், இப்போது, சுதந்திரத்திற்குப் பிறகு, கடவுள் கீழே சென்றுவிட்டார் என்ற எண்ணம் மக்களுக்கு வராமல் இருப்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று தியாகி கூறினார்.
இதற்கு, பாபாசாகேப் அம்பேத்கர் பதிலளித்தார், “ஐயா, இந்த விஷயத்தில் நாங்கள் பின்பற்றிய நிலையான கொள்கை எதுவும் எங்களிடம் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இயற்றப்பட்ட 49-வது கட்டுரையில், கடவுள், மேலே வைக்கப்பட்டு, மனசாட்சிப்படி என்ற வரி கீழே உறுதிமொழியாக வைக்கப்பட்டிருக்கிறது… இந்தக் கட்டுரையில், நாங்கள் திருத்தங்களைச் செய்துள்ளோம், நாங்கள் முதன்மைப் பிரிவின் வார்த்தைகளைப் பின்பற்றியுள்ளோம். உறுதி அளி அல்லது சத்தியம் செய் என்று செயல்படுகிறது. முதன்மை உட்பிரிவின் மொழியாக இருப்பதால், தர்க்கரீதியான வரிசை என்னவென்றால், சத்தியம் மேலே வைக்கப்பட்டு, உறுதிமொழி கீழே வைக்கப்பட்டது. இது முற்றிலும் தர்க்கரீதியான விஷயம்.” என்று கூறினார்.
அவர் மேலும் கூறினார், “இப்போது, முதலில் சத்தியப் பிரமாணமும் பின்னர் உறுதிமொழியும் செய்வது விரும்பத்தக்கது என்று நாங்கள் நினைத்ததற்குக் காரணம், இந்த நாட்டில், எந்த வகையிலும், இந்து, எந்தவொரு நீதிமன்றத்திலும் அவர் அழைக்கப்படும்போது சாட்சியம் அளிக்க, பொதுவாக ஒரு உறுதிமொழி மூலம் தொடங்குகிறது. கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமே சத்தியம் செய்கிறார்கள். இந்துக்கள் கடவுள் பெயரை உச்சரிக்க விரும்புவதில்லை. எனவே, இதுபோன்ற ஒரு விஷயத்தில், பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகள் மற்றும் நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன், அதன் விளைவாக உறுதிமொழி மற்றும் உறுதிமொழியின் நிலைப்பாட்டைக் கூறி இந்த குறிப்பிட்ட முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இருப்பினும், தியாகி திருப்தியடையவில்லை. மேலும், பதவிப்பிரமாண உறுதிமொழி ஏற்பு இலக்கணம் கடவுளின் வழியில் இருக்கக்கூடாது என்று பதிலடி கொடுத்தார்.
அப்போது ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், “இந்த விவகாரத்தில் விவாதம் தேவையில்லை. நீங்கள் அதில் சிறப்பாக வாக்களித்தீர்கள். இது அதிக விவாதத்திற்கு இடம் உள்ள கேள்வி அல்ல. டாக்டர் அம்பேத்கர் கூறியது போல், இந்த விஷயத்தில் அவருக்கு எந்த ஒரு குறிப்பிட்ட உணர்வும் இல்லை” என்று கூறினார்.
தற்போதைய வடிவத்தில் உள்ள பதவிப்பிரமாணத்தில், “கடவுளின் பெயரில் சத்தியம் செய்கிறேன்” என்பது கோட்டுக்கு மேலேயும் மனசாட்சிப்படி உறுதியளிக்கிறேன்” என்பது கோட்டுக்கு கீழேயும் வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”