கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷ் எங்கே?

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெட்டகத்தில் 30 கிலோகிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெட்டகத்தில் 30 கிலோகிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கேரளா அரசியலில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்துவது வழக்கமான ஒன்றாக கருதப்பட்டாலும், தற்போதைய பறிமுதல் பல கோணங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. கடத்தப்பட்ட தங்கம்  அனைத்தும் இராஜதந்திர சரக்கு பெட்டகத்தில் இருந்து   காணப்பட்டது. வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு வரும் சரக்கு பெட்டகங்கள் வழக்கமான சுங்கத்துறை சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, மோசடிக்கு பின்னால் உள்ளவர்கள்  உயர் மட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடனான தொடர்புகள் குறித்த சந்தேகத்தையும் அதிகரித்துள்ளன.

செவ்வாயன்று, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் முதல்வரின் செயலர் பதவியில் இருந்து நீக்கப்படட்டர்.  கடத்தல் மோசடியின் முக்கிய நபராக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷின் நெருங்கிய தொடர்பில் இருந்ததையடுத்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. தற்போது, தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா சுரேஷ்    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் நிர்வாக செயலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் துபாயில் இருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அடைந்த, வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கான சரக்கு பெட்டகத்தில்  தங்கம்  கண்டறியப்பட்டது. சட்டப்படி, இந்த சரக்குகளை வழக்கமான சுங்கத் துறையின்  பரிசோதனைக்கு உட்படுத்தாமல், கூடிய விரைவில் அனுமதியை வழங்க வேண்டும். ஷார்ஜாவைச் சேர்ந்த அல் சத்தார் ஸ்பைசஸ் எனும் நிறுவனத்திடமிருந்து அனுப்பப்பட்ட இந்த சரக்கு பெட்டியில் குளியலறை உபகரணங்கள், நூடுல்ஸ், பிஸ்கட், பேரீச்சை போன்ற பொருட்கள் இருப்பதாக  பட்டியலிடப்பட்டிருந்தன. இருப்பினும், இதில் தங்கம் மறைத்து வைத்திருந்த தகவல்கள் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தது.

சுங்க அதிகாரிகள் சரக்கு பெட்டகத்தை வெளியிடவில்லை. எந்தவொரு இராஜதந்திர சரக்குகளையும் ஆய்வு செய்வதற்கான கீழ், ஐக்கிய அரபு எமிரேட் தூதரக அதிகாரிகள் முன்னிலையில் சரக்கு பெட்டகத்தை திறந்தனர்.

யார் இந்த ஸ்வப்னா சுரேஷ் ?

ஏழு மாதங்களுக்கு முன்பு வரை திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணியாற்றினார். சுங்கத்துறை அதிகாரிகள் சரக்கு பெட்டகத்தை திறக்க முடிவு செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக இவர் தலைமறைவாகிவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது .

தனது தந்தையின் வியாபாராம் தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் துபாயில் சில் நாடகள் வசித்திருந்தார். 2013 ஆம் ஆண்டில், திருவனந்தபுரத்தில் AISTAS எனும் விமான நிலைய சேவை நிறுவனத்தில் மனிதவள நிர்வாகியாக சேர்ந்தார். விமான  நிறுவனத்தின் மற்றொரு மூத்த நிர்வாகியுடன் கூட்டு சேர்ந்து,  விமான நிலைய ஊழியருக்கு எதிராக தவறான பாலியல் வல்லுறுவு புகாரை கொடுத்திருந்தார் என்பது பின்னாட்களில்  தெரிய வந்தது.

ஒரு குறிப்பிட்ட நபருக்கு எதிராக, பல போலி பெயர்களில் 17  பொய்யான பாலியல் வல்லுறவு புகார்களை கொடுத்தார்.  இந்த,சதித்திட்டம் குறித்து தீவிர விசாரணை நடைபெற வேண்டும் என்று அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார். இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இருப்பினும், அதிகாரிகள் மட்டத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக விசாரணை தடம் புரண்டது.

எமிரேட்ஸ் மற்றும் அரேபியா கலாச்சாரங்களில் ஸ்வப்னா சுரேஷ் நன்கு பரிட்சையாமாக இருந்ததால், 2016 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டபோது அதில் பணியமர்த்தப்பட்டார். ஐக்கிய எமிரேட்ஸ் நாடுகளில் கேரளாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் கேரள அரசு நல்லுறவைப் பேணி வருவதால், தூதரக அலுவலகத்தில் உள்ளூர் மட்ட அளவிலான ஊழியர்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

அதிகாரத்துவம் மற்றும் அரசியல் வட்டாரங்களில்  ஸ்வப்னா மெல்ல மெல்ல நகர்ந்தார். சில சமயங்களில் தன்னை வெளிநாட்டு தூதரக அதிகாரியாகவும் வெளிப்படுத்தினர். 2017 ஆம் ஆண்டில், ஷார்ஜா ஆட்சியாளர் கேரளாவுக்கு நான்கு நாள் பயணம் புரிந்த போது, பிரமுகர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு பல உத்தியோகபூர்வ விழாக்களில் கலந்து கொண்டார்.

ஒரு வருடத்திற்கு முன்பு, கிரிமினல் குற்ற வழக்கு தொடர்பாக தூதரக அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இருப்பினும், தனது செல்வாக்கு காரணமாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் ஐ.டி செயலாளர் எம்.சிவசங்கர் தலைமையின் கீழ் இயங்கும் கேரள மாநில தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில்  (கே.எஸ்.ஐ.டி.ஐ.எல்) வணிக மேம்பாட்டு மேலாளராக பணியமர்த்தப்பட்டார். சிவசங்கர், அப்போது கேரளா முதல்வரின் செயலர் பதவியில்  இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்கக்கடத்தல் குறித்த சர்ச்சைக்குப் பின், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பரஸ் நிறுவனத்தின் மூலம், ஸ்வப்னா சுரேஷின் பெயரை கே.எஸ்.ஐ.டி.ஐ.எல் மேலாளர் பதவிக்கு சிவசங்கர் பரிந்துரைத்ததாக தெரியவந்தது. கே.எஸ்.ஐ.டி.ஐ.எல் நிறுவன அதிகாரிகள், இந்த வேலைக்கு ஸ்வப்னா சுரேஷ் தகுதி பெற்றவர் எனக் கூறிவந்தாலும், அவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வைக் கூட முடிக்க வில்லை என்று வெளிநாட்டில் வாழும் அவரின் தம்பி ஊடகங்களுக்கு  தெரிவித்தார். எனவே, 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஸ்வப்னா சுரேஷுக்கு முக்கிய பதவி எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

விசாரணை: 

இந்த சம்பவத்தின் பின்னணியில், மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் கடத்தல் கும்பல் ஒன்றை   சந்தேகிப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். “கடத்தல் மோசடி அனைத்தும் ஒரே பின்னனியில் தான் நடக்கின்றது. பல்வேறு நபர்கள் மூலம் தங்கத்தை வெவ்வேறு வடிவங்களில் தங்கத்தை கடத்துவதற்கான விசித்திரமான வழிகளையும் அவர்கள்  பயன்படுத்துகின்றனர்”என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamit.me/ietami

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala gold smuggling case swapna suresh absconding woman who is swapna suresh

Next Story
டெல்லியில் இருந்து ஆறுதலான தகவல் – புதிய பாதிப்புகளை விட அதிகமாகும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கைcoronavirus, coronavirus news, covid 19, தமிழகத்தில் கொரோனா, இந்தியாவில் கொரோனா, india covid 19 cases, coronavirus india update, coronavirus cases today update, coronavirus cases, delhi corona news, delhi coronavirus news, gujarat coronavirus, maharashtra coronavirus, mumbai coronavirus, tamil nadu coronavirus cases, chennai coronavirus cases, tamil nadu haryana coronavirus cases,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com