கேரளாவில் தங்கம் கடத்தல்காரர்கள் செயல்படும் முறை – முக்கிய புள்ளிகள் தப்பிப்பது எப்படி?

Kerala gold smuggling : கடத்தலுக்காக, இவர்கள் திரைநட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By: Updated: July 10, 2020, 09:57:03 PM

Shaju Philip

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவில் உள்ள அதன் தூதரகத்திற்கு 30 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் கடத்தப்பட்ட விவகாரத்தின் மூலம், கேரளாவிற்கு மத்திய கிழக்கு நாடுகளின் மூலம் இத்தகைய தங்கம் கடத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது புலனாகியுள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில், மத்திய புலனாய்வு முகமையின் உதவியை நாட மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

கேரளாவில் உள்ள நகைக்கடைகளில், இவ்வாறு டன் கணக்கில் கடத்திக்கொண்டு வரப்பட்டுள்ள தங்க நகைகளளே அலங்கரித்து வருவதாகவும், இத்தகைய கடத்தலின் மூலம், இறக்குமதி உள்ளிட்ட வரிகளின் ஏய்ப்பு ஏராளமான அளவில் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக, சுங்கத்துறை மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவினரால் சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து தங்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த சர்வதேச விவகாரத்தில் மூளையாக செயல்படுபவர்களை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினால் மட்டுமே, இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

கேரளாவில் தங்கம் கடத்தல் எந்தளவில் நடைபெறுகிறது?

சுங்கத்துறை அளித்துள்ள தகவலின்படி, 2019-20ம் ஆண்டில் மட்டுமே கேரளாவில் சுங்கத்துறை மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவால் 550 கிலோ அளவிற்கு கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இப்போதைக்கு இதுதான் நாட்டிலேயே அதிகபட்சமாக கைப்பற்றப்பட்டுள்ள கடத்தல் தங்கம் ஆகும். தற்போது பிடிபட்டுள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் என்பது, நாட்டில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் தங்கம் கடத்தலில் 15 சதவீதம் ஆகும். கேரளாவில் 2018-19ம் ஆண்டில், 401 கிலோ அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் தங்கத்திற்கு ஏன் அங்கு அவ்வளவு மதிப்பு?

இந்தியாவில் இன்றைய தங்கம் விலை மதிப்பில், ஒரு கிலோ அளவிற்கு கடத்தல் தங்கம் கொண்டு வந்தால், இறக்குமதி வரி நீங்கலாக, அவர்களுக்கு ரூ.5 லட்சம் லாபம் கிடைக்கிறது. இப்படி தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து கடத்தி வரும் தங்கமே, கேரளாவில் உள்ள நகைக்கடைகளை அலங்கரித்து வந்துள்ளன. இதன்மூலம் நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெருத்த லாபம் அடைகின்றனர்.

கடத்தல்காரர்கள் எத்தகைய வழிமுறையை கையாள்கின்றனர்?

தங்கம் கடத்தல்காரர்கள் எப்போதும் ஒரேமாதிரியான வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. அவர்கள் நேரத்திற்கு தக்கமாதிரி தங்களது வழிமுறைகளை தொடர்ந்து மாற்றிவருகின்றனர். தங்கம் கடத்தல் தொடர்பாக கைது செய்யபப்பட்டவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், அவர்களுக்கும்,வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கடத்தல்காரர்களிடம் தொடர்பு இருப்பதை அறிய முடியவில்லை.
ஒருவர் தங்கம் கடத்திவருகிறார் என்றால், அவரது போட்டோ உள்ளிட்ட தகவல்கள், ஏர்போர்ட்டில் உள்ள இங்குள்ளவர்களுக்கு முதலிலேயே தெரிவிக்கப்பட்டு விடுகிறது. அவர்கள் சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்ட இடத்திற்கு வரவைத்து, அங்கிருந்து தங்கத்தை பெற்றுக்கொண்டு நழுவிவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தி வந்தவரை நாம் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும், அவர்களிடமிருந்து முக்கிய குற்றவாளி குறித்த தகவல்கள் கிடைக்கபெறுவதில்லை. முக்கிய கடத்தல்காரர்கள் எப்போதும் ஒரே ஆளை, இந்த கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதில்லை. ஆட்களை மாற்றிக்கொண்டே உள்ளார்கள். யார் கொண்டு வருகிறார்கள் என்ற தகவலை, சம்பந்தப்பட்ட நபருக்கு அவர்கள் தெரிவித்து விடுவதால், அவர்கள் எளிதாக அவரிடமிருந்து தங்கத்தை வாங்கி நழுவி விடுகிறார்கள். ஒருவர் தங்கத்துடன் பிடிபட்டு விட்டால், அந்த கும்பல் உடனடியாக அந்த இடத்திலிருந்து சென்று விடுகிறது. இதன்மூலம், கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பாதுகாக்கப்பட்டு விடுகிறார்.
கடத்தலுக்காக, இவர்கள் திரைநட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தல்காரர்களை சுங்கத்துறையால் ஏன் பிடிக்க முடிவதில்லை?

இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்க ஒரு குறிப்பிட்ட அளவு வரை அனுமதி உண்டு. இதை, கடத்தல்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். ஒருவர் பிடிபட்டு அவரை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டால், அவர்கள் கொலை செய்யப்பட்டு விடுகின்றனர். அவர்கள் உயிரோடு இருக்கும்பட்சத்தில், அவர்கள் காத்மண்டு விமானநிலையத்திலேயே இறங்கி அங்கிருந்து இந்தியா – நேபாளத்திற்கு சாலை வழியாக வந்துவிடுகின்றனர்.

இந்தியா – நேபாள எல்லையில் அந்தளவிற்கு சோதனகள் செய்யப்படாததால், அவர்களுக்கு இந்த பாதை சாதகமாக அமைந்துள்ளது. இந்தியாவிற்குள் நுழையும் அவர்கள், ரயில் போக்குவரத்து அல்லது சாலை மார்க்கமாக கேரளாவை அடைந்துவிடுகின்றனர். இதன்மூலம், அவர்கள் சட்டத்திற்கு விரோதமாக வரி ஏய்ப்பு முறையில், கேரளாவிற்கு அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: How in Kerala gold smuggling rackets, the big sharks always escape

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Kerala gold smuggling ministry of home affairs diplomatic cargouae consulate middle east

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X