Liz Mathew , Abantika Ghosh
கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கோவிட்-19ஐ அம்மாநில அரசு கையாண்டது குறித்து உலகளாவிய செய்தியை அளித்துள்ளார். கேரளா எவ்வாறு கோவிட்-19 தொற்று எண்ணிக்கையை குறைத்தது. இதில் அம்மாநிலம் மெலும் என்னமாதிரியான சவால்களை எதிர்நோக்குகிறது என்பது ஜூம் வழியாக நாடு தழுவிய பார்வையாளர்களுடன் அமைச்சர் கே.கே.ஷைலஜா விவாதித்த கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் வலுவான உள்ளாட்சி அமைப்பு மற்றும் சுகாதார அமைப்புகள் பற்றி கூறுங்கள்:
கேரளாவில் நாங்கள் பஞ்சாயத்து ராஜ்ஜை ஜனநாயக வழியில் செயல்படுத்தினோம். எங்களுடைய உள்ளாட்சி அரசு முழு அதிகாரத்துடன் செயல்பட்டன. பண விநியோகமும் அதே போல செயல்பட்டன. எங்களுடைய ஆரம்ப சுகாதார நிலையங்கள் இப்போது பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளூர் அளவிலான பஞ்சாயத்துகள் கீழ் உள்ளன. அவர்கள் நன்கு திட்டமிட்டுள்ளனர்; ஆரம்ப சுகாதார மையங்களில் சுகாதாரத் துறையின் உதவியுடன் பல புதிய திட்டங்களை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். அது இப்போது சுகாதாரத் துறையின் கீழ் உள்ளது. ஆனால், அந்த இடத்தில் உள்ளாட்சி அமைப்பு அதிகாரத்தின் கீழ் அங்கே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கிறது.
https://www.facebook.com/indianexpress/videos/250327079582989/
கொரோனா தொடர்பு தடமறிதளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது பற்றி கூறுங்கள்...
ஆமாம், மிக முக்கியமான விஷயம் தயார்நிலையை திட்டமிடுவதுதான் என்று நான் நினைக்கிறேன். சீனாவில் வுஹானில் சில நாவல் வைரஸ் பரவுகிறது என்று கேள்விப்பட்டபோது, வைரஸ் நிச்சயமாக கேரளாவுக்கு வரும் என்று எதிர்பார்த்தோம். ஏனெனில் பல மலையாளிகள் வுஹானில் இருக்கிறார்கள், நாங்கள் ஜனவரி மாதத்திலேயே எங்கள் திட்டத்தைத் தொடங்கினோம். ஜனவரி 18-ம் தேதி வுஹானில் ஒரு திறன்மிக்க வைரஸ் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். அந்த நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் இதை ஒரு தொற்றுநோய் என்று அறிவிக்கவில்லை. ஆனால், நாங்கள் இந்த நாவல் வைரஸ் பற்றி கேள்விப்பட்டபோது, சார்ஸ் குடும்பத்திலிருந்து ஒரு புதிய வகையான வைரஸ் என்றும் அது கொரோனா குடும்பம் என்றும் நாங்கள் அதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம். எனது சுகாதார செயலாளரும் எனது குழுவும் நானும் ஒரு சந்திப்பு நடத்தி இந்த புதிய வகையான வைரஸைப் பற்றி விவாதித்து நாங்கள் எங்கள் திட்டத்தை தொடங்கினோம். ஜனவரி 24-ம் தேதி எங்களுடைய விரைவான நடவடிக்கை குழுவுக்கு ஒரு நல்ல கூட்டம் நடந்தது. நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டு அறையை மாநில அளவில் திறந்தோம், மேலும் 14 மாவட்டங்களுக்கும், மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் (டி.எம்.ஓ) தகவல் தெரிவித்தோம். அவர்கள் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகளைத் தொடங்கினர். ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறையிலும் நிபுணர் குழுக்களைச் சேர்த்தோம். ஒவ்வொரு கூடுதல் டி.எச்.எஸ் மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கடமைகள் உள்ளன. தொடர்புத் தடமறிதலுக்கு ஒருவர் பொறுப்பு, தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் மற்றும் கோவிட் மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு மற்றொருவர் பொறுப்பு, மேலும் ஒருவருக்கு தளவாடங்கள் சேகரிப்பு, மனநலத்தை ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது.
நாங்கள் எதிர்பார்த்தபடி, கொரோனா வைரஸ் வுஹானில் இருந்து கேரளாவுக்கு வந்தது. ஜனவரி 30ம் தேதி எங்களுக்கு முதல் கொரோனா பாஸிட்டிவ் நோயாளி கிடைத்தார். பிப்ரவரி முதல் வாரத்தில் எங்களுக்கு வேறு இரண்டு கொரோனா நோயாளிகள் கிடைத்தனர். ஆனால், நாங்கள் மாதிரிகளை பரிசோதித்தபோது, 3 மாணவர்களும் மருத்துவமனையில் எங்கள் தனிமை வார்டில் இருந்தனர். அவர்களிடம் இருந்து எந்தவொரு தொடர்பும் ஏற்படவில்லை. இந்த வைரஸ் பரவுவதும் அங்கிருந்து ஏற்படவில்லை என்பதால் அது எங்கள் வெற்றியாக அமைந்தது. அதன் பிறகு, பிப்ரவரி இறுதியில், மீண்டும் பிற நாடுகளிலிருந்து மக்கள் வருகிறார்கள். அந்த நேரத்தில் இந்த வைரஸ் உலகம் முழுவதும் இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, எல்லா இடங்களிலும் பரவியது. மக்கள் இந்த நாடுகளிலிருந்து கேரளாவுக்கு திரும்பி வரத் தொடங்கினர். ஆனால், எங்கள் கண்காணிப்புக் குழு விமான நிலையத்தில் இருந்தது. நாங்கள் எங்கள் குழுவினரை அங்கிருந்து திரும்பப்பெறவில்லை. அவர்கள், திரும்பி வரும் அனைவரையும் ஆய்வு செய்தனர். எங்கள் யுக்தி தொடர்பு தடமறிதல், தனிமைப்படுத்தல், சோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை என்று அமைந்தது.
கடந்த மாதம் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனால், சமீபத்தில் அதிகரித்திருப்பது குறித்து:
ஆம், நிச்சயமாக, ஆனால் நாங்கள் அதை முன்பே எதிர்பார்த்தோம். மார்ச்-ஏப்ரல் பொதுமுடக்கத்தின்போது… பயணம் நிறுத்தப்பட்டது. வெளிநாட்டிலிருந்தோ அல்லது இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தோ யாரும் வரவில்லை, அந்த நேரத்தில் மற்ற நாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்களிடையே எங்களுக்கு சில தொற்று நோயாளிகள் கிடைத்தனர். மேலும், நாங்கள் அந்த தொற்று நோயாளிகளை கையாண்டோம்... ஆனால் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டபோது நிலைமை மாறியது. விமானப் பயணம் மீண்டும் தொடங்கப்பட்டது. வெளிநாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. மக்கள் மீண்டும் மற்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் திரும்பி வரத் தொடங்கினர். தெளிவாக நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்கும் நாங்கள் திட்டமிட்டோம்… நிச்சயமாக இரண்டாவது அலை இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.
திரும்பி வந்த மக்களிடையே பலருக்கு கொரோனா தொற்றுகள் இருதன. அவர்களை நாங்கள் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் அவர்களை விமான நிலையத்திலேயே கண்டுபிடித்து வருகிறோம். விமான நிலையம் மட்டுமல்ல, அவர்கள் கடல் வழியாக கப்பலிலும் வருகிறார்கள். இதனால், நாங்கள் துறைமுகத்தில் ஒரு நல்ல தடமறியும் குழுவை வைத்திருக்கிறோம். மேலும், சாலை வழியாக வருபவர்களை பரிசோதிக்க சோதனைச் சாவடிகளில் எங்கள் தொடர்புத் தடமறியும் பரிசோதனை குழு உள்ளன. ரயில் நிலையங்களிலும், 15-20 மேசைகளில் குழுக்கள் உள்ளன. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த முறை வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர். பல பேருக்கு பரிசோதனையில் கொரோனா பாஸிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது. மேலும், சென்னை, மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எங்களுக்கு மகாராஷ்டிரா மும்பையில் இருந்து வந்தவர்களுக்கு அதிகமான கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதற்கு அடுத்து, சென்னை மற்றும் குஜராத்தில் இருந்து வந்தவர்கள் இருந்தனர். அவர்கள் கொரோனா தொற்று நோயாளிகள் மட்டுமல்ல, சில பேர் தொற்றுப் பரவல் மையத்திலிருந்து வந்தவர்கள் சிலர் பரிதாபகரமான நிலையில் இருந்தனர். தனிமைப்படுத்தலுக்குச் செல்லவில்லை, ஆனால் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் நுழைந்தபோது, அந்த நேரத்தில் அவர் இறந்தார். திரும்பி வரும் மக்களின் நிலை அதுதான். அதனால்தான் எங்களுக்கு கொரோனா தொற்று பாஸிட்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மேலும் இறப்புகளும் அதிகரித்து வருகின்றன.
அதிக எண்ணிக்கையில் மக்கள் திரும்புவதால் சுகாதார அமைப்புகள் மீது சுமை அதிகரிக்கிறதா?
ஆம், இந்த வகையான கடுமையான சூழ்நிலையை கையாள நாங்கள் திட்டமிட்டோம். நிச்சயமாக இது சவாலானது, ஆனால் எங்களிடம் பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி போன்றவை உள்ளன. பிளான் ஏ இல், ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்கு மூன்று கோவிட் மருத்துவமனைகள் உள்ளன. மேலும் <ஒவ்வொரு> மருத்துவமனையிலும் கோவிட் நோயாளிகளுக்கு 1,500 க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். பிளான் பி யில் எங்களுக்கு அதிகமான மருத்துவமனைகள் உள்ளன. நாங்கள் மருத்துவமனைகளை கோவிட் மருத்துவமனைகளாக மாற்றுகிறோம். 5,000 - 10,000 வரை படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் இந்த சூழ்நிலைகளில் நாம் கையாள முடியும். எங்கள் திட்டம் சி இல், கோவிட் நோயாளிகளுக்கு சில ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் சில ஆடிட்டோரியங்களை ஏற்பாடு செய்கிறோம்; அது எங்கள் பரிசீலனையில் உள்ளது, மேலும், எங்களிடம் மிகச் சிறந்த நிறுவனங்களின் பட்டியல் உள்ளது. மேலும், அரசுத் துறையில் மட்டுமல்ல, தனியார் துறையிலும் மனித வளங்களை பட்டியலிட்டு வருகிறோம். எங்களிடம் மருத்துவ வளங்களின் மிகச் சிறந்த பட்டியல் உள்ளது, பல கொரோனா பாஸிட்டிவ் தொற்று ஏற்பட்டால் நிலைமையைக் கையாள அவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்.
இது எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் 1.5 லட்சம் பேர் வந்தால், 5,000 அல்லது அந்த அளவுக்கு கொரோனா பாஸிட்டிவ் எண்ணிக்கை இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்… கேரளாவுக்கு திரும்பி வர 6 லட்சம் பேர் எங்கள் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். அதிலிருந்து நாங்கள் நல்ல எண்ணிக்கையில் கொரோனா பாஸிட்டிவ் எண்ணிக்கையைப் பெறுவோம். அது ஒரு பிரச்சினை அல்ல. பிரச்சனை என்னவென்றால், தொற்று உள்ள நபர்கள் எங்கள் தனிமைப்படுத்தப்பட்ட கொள்கைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால், அவர்களிடம் இருந்து தொடர்பு ஏற்படும். மனிதனுக்கு மனிதன் பரவுதல் ஏற்படும். ஒருவர் இந்த வைரஸை நான்கு பேருக்கு பரப்ப முடிந்தால், அங்கிருந்து அது 40 ஆகிவிடும். அங்கிருந்து அது 1,000 அல்லது 600 ஆக மாறும் அல்லது எந்த எண்ணாகவும் மாறும். அது ஒரு முன்னேற்றம் போல அல்லது அணு சங்கிலி எதிர்வினை போல செல்லும்; அது வளரும்.
சமூகப் பரவல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?
சமூகப் பரவல் ஏற்படாது என்று நாங்கள் கூற முடியாது. ஆனால், இப்போது கேரளாவில் சமூகப் பரவல் இல்லை. ஏனென்றால் நாங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். தொடர்புகளுக்கு வெளியில் இருந்து அல்லது “இறக்குமதி” வழக்குகளுக்கு வெளியே ஒரு வழக்கைப் பெற்றால், அது நிகழ்ந்த இடத்திலிருந்து தொடர்புகளை நாங்கள் முழுமையாகக் கண்டுபிடித்து வருகிறோம், மேலும் நாங்கள் செண்டினல் கண்காணிப்பு சோதனைகளையும் செய்கிறோம். நாங்கள் ஏற்கனவே 15,000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு சோதனைகளை நடத்தியுள்ளோம். அவற்றில் எங்களுக்கு சில கொரோனா பாஸிட்டிவ் வழக்குகள் கிடைத்தன. மேலும், இவற்றில் கொரோனா தொற்று வழக்குகள் அல்லது சில தொடர்புகள், பயண வரலாறு போன்றவற்றுடன் தொடர்பு இருப்பதைக் கண்டோம். அதனால்தான், நாங்கள் சொல்கிறோம் சமூக பரவல் ஏற்படவில்லை. மேலும், நாங்கள் நிமோனியா காய்ச்சல் வழக்குகளையும் சோதித்து வருகிறோம். மேலும், நிமோனியா வழக்குகள் இந்த நேரத்தில் குறைந்துவிட்டன. சமுதாயத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சில வளர்ந்த மாதிரிகளை நாங்கள் சேகரிக்கிறோம். ஒரே நேரத்தில் 3,000 மாதிரிகளை சேகரிக்கிறோம். அதிலிருந்து எங்களுக்கு அதிகமான நேர்மறையான வழக்குகள் கிடைக்கவில்லை. வைரஸ் சமூகப் பரவலுக்குள் நுழையவில்லை என்பதை இது காட்டுகிறது. ஆனால், நாளை, தனிமைப்படுத்தல் தோல்வியுற்றால், அப்படி நடக்காது, ஆனால் ஒருவேளை நடந்தால் சமூக பரவல் நிச்சயமாக நிகழும்.
கேரளா போதுமான அளவு சோதனை செய்கிறதா என்பது குறித்து கூறுங்கள்...
ஆம், சோதனை மிக முக்கியமானது. ஆனால் “சோதனை, சோதனை, சோதனை தவிர வேறு ஒன்றும் இல்லை” என்ற வாசகத்தை நாங்கள் பின்பற்றவில்லை. நாங்கள் ஒரு யுக்தி வழியில் சோதிக்கிறோம். எங்கள் மிக முக்கியமான விஷயம் முதலில் கண்டுபிடிப்பது மற்றும் அறிகுறி உள்ளவர்களை முதலில் சோதிப்பது. பயண வரலாறு அல்லது சில தொடர்பு வரலாற்றைக் கொண்டவர்களைக் கண்டறிந்து அவர்களை முறையாக தனிமைப்படுத்துகிறோம். தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால், நாங்கள் நோயாளியை மருத்துவமனைக்கு மாற்றுகிறோம். மீண்டும் நாங்கள் மாதிரிகளை எடுத்து பரிசோதிக்கிறோம். ஆனால் தனிமைப்படுத்தல் அறிவியல் பூர்வமானது என்பதற்காக நாம் மிகவும் முழுமையாக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் உதவியுடன், ஆஷா தொழிலாளர்களின் உதவியுடன், நாங்கள் அவர்களின் வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வீட்டுக்கே செல்கிறோம். அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலில் உள்ளாரா என்பதை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், நாங்கள் அவர்கள் ஏதேனும் அறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்களா என்று பார்த்து வருகிறோம். ஒரே நேரத்தில், நாங்கள் எங்கள் ஆம்புலன்ஸை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி, அந்த நபரை எங்கள் மருத்துவமனைக்கு மாற்றி, மாதிரிகள் எடுத்து பரிசோதனை சோதனை செய்கிறோம்.
அதுதான் எங்கள் சோதனை முறை. நாங்கள் அதைத் தொடர்கிறோம். மெதுவாக சோதனைகளை கொஞ்சம் அதிகரிக்கிறோம். கொரோனா தொற்று மையப் பகுதியிலிருந்து புதிய நபர்கள் வரும்போது, மிக உயர்ந்த தொடர்புகள் மற்றும் இரண்டாம்நிலை தொடர்புகளிடையே சோதனைகளை அதிகரிக்க வேண்டும். ரேண்டம் பரிசோதனையும் நடத்தப்படுகிறது. செண்டினல் கண்காணிப்பு சோதனை உள்ளது. இப்போது நாங்கள் எங்கள் சோதனையை அதிகரித்து வருகிறோம். ஆனால், அனைவரையும் பரிசோதனை செய்வது தேவையில்லை. அது எங்கள் சோதனை கருவிகளை தீர்ந்து போகச் செய்யும். அதன்பிறகு நாம் அழ வேண்டியிருக்கும். ஏனென்றால், அந்த நேரத்தில் சரியான நிகழ்வுகளைத் தொட முடியாது. சில நாடுகளில் அது நடந்தது. இத்தாலி மற்றும் அமெரிக்காவில், அவர்கள் முதல் பகுதியில் அனைத்து சோதனை கருவிகளையும் பயன்படுத்தினர் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் சோதனை செய்வதற்கான சரியான யுக்தி அவர்களிடம் இல்லை, “சோதனை, சோதனை, சோதனை” என்ற ஒரே வாசகம் மட்டுமே. அது ஒரு நல்ல முறையாக இருக்க முடியாது. எங்கள் யுக்தியின்படி நாங்கள் சோதிக்கிறோம். இது ஒரு அறிவியல் யுக்தி என்று நாங்கள் நினைக்கிறோம்.
பார்வையாளர்கள் கேள்வி:
கோவிட்டை எதிர்த்துப் போராடும் மற்றவர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
நோயாளிகள் அல்லது வைரஸ் தொற்று உள்ளவர்களை முறையாகக் கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல், சோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவற்றை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இதில் மிக முகியமான விஷயம் தொடர்பு சங்கிலியை உடைத்தல் ஆகும். மேலும், மக்களுக்கு சில சுகாதார நடத்தைகள், சில பழக்கங்கள், தொடர்பை உடைக்க சில பொறுப்புகள் இருக்க வேண்டும்; மக்கள் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற நம் சுகாதார அமைப்பின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதுதான் நீண்ட காலத்துக்கு நாம் செய்ய வேண்டியது. இந்த வைரஸ் எவ்வளவு காலம் இங்கே உள்ளதோ அந்தக் காலம் வரை நாம் சில நடத்தை மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதுதான் ஒரே சரியான முறை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு உள்ளது; நம்முடைய உடல்நலம் நம்முடைய பொறுப்பு. அதுதான் இங்கே கோஷம்: “எனது உடல்நலம் எனது பொறுப்பு.”
ஒரு தடுப்பூசி அல்லது மருந்து இல்லாதது குறித்த கவலை உள்ளதா?
ஆமாம், அனைவருக்கும் இந்த விரக்திகளும் கவலைகளும் உள்ளன. ஏனென்றால், நாங்கள் ஒரு தடுப்பூசிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். செய்தித்தாள்கள், ஊடகங்கள் மற்றும் லான்செட் பத்திரிகைகள் போன்றவற்றில் வரும் எல்லாவற்றையும் ஒவ்வொரு நாளும் படித்து வருகிறோம். உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஏதேனும் ஒரு நல்ல செய்தி இருக்கிறதா, எத்தனை சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கவனித்து வருகிறோம். ஒரு அறிவியல் ஆசிரியராக, ஒரு நாள் அவர்கள் இந்த கொடிய வைரஸுக்கு எதிராக ஒரு நல்ல தடுப்பூசியைக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.