சபரிமலையில் சொதப்பிய இடதுசாரி! சரித்திர வெற்றியை உறுதி செய்த கேரள காங்கிரஸ்

சபரிமலை விவகாரத்தில் பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தது இடதுசாரிகளின் தோல்விகளுக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்துள்ளது.

Shaju Philip

Kerala Lok Sabha Election 2019 Results : தேசிய அளவிலான பாஜகவின் மாபெரும் வெற்றியை விடுங்கள், கேரளாவில் ஒரு தொகுதியைக் கூட பாஜகவிற்கு விட்டு வைக்காமல் 20ல் 19 தொகுதிகளை காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றயுள்ளது. 2014ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடதுசாரி ஜனநாயக முன்னணி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

Kerala Lok Sabha Election 2019 Results : காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு காராணம் என்ன?

கடந்த தேர்தலிலும் சரி, இந்த தேர்தலிலும் சரி 1 இடங்களில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த முறை சிறுபான்மை மக்களின் ஆதரவை அதிகம் பெற்றுள்ளனர். குறிப்பாக கடந்த ஆட்சி காலத்தில் அதிக இன்னல்களை சந்தித்த இஸ்லாமியர்கள் காங்கிரஸாரை தேர்வு செய்திருக்கின்றனர்.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் கணிசமாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.  சபரிமலை விவகாரத்தில் பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தது இடதுசாரிகளின் தோல்விகளுக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க : திமுகவின் வியூகம் தவறிய ஒரே ஒரு தொகுதி ! காரணம் என்னவாக இருக்கும்?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைத் தொடர்ந்து, அதனை நடைமுறைப்படுத்த இடதுசாரிகள் முயற்சி செய்தனர். அதனை தடுக்கும் பொருட்டு ஆங்காங்கே பாஜகவினர் கலவரங்களில் ஈடுபட்டனர். ஆனால் சூழ்நிலைகளை நன்றாக உணர்ந்த காங்கிரஸ் பொறுமையாக காய்களை நகர்த்தியது. பாஜக பெரும்பான்மை பெரும் என்று நினைத்த பத்தினம்திட்டா தொகுதியிலும் கூட காங்கிரஸ் முன்னேறி வந்தது. வடக்கு கேரளத்தில் இடதுசாரிகளின் பாரம்பரிய தொகுதிகளாக இருந்த தொகுதிகளிலும் கூட இடதுசாரிகள் தோல்வியை தழுவியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close