Advertisment

கேரளாவில் சிறுமி மரணம்: அமீபா நாக்லேரியா ஃபோலேரி நோய் என்றால் என்ன?

ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்பது அமீபா நெக்லேரியா ஃபோலேரி-வால் ஏற்படும் ஒரு அரிய மூளை நோய் ஆகும். அரிய மற்றும் கொடிய நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

author-image
WebDesk
New Update
PAM amoeba.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நெக்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) அல்லது brain-eating amoeba-வால் ஏற்படும் அரிய நோயான ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்  (PAM)  நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து 5 வயது சிறுமி கடந்த திங்கள்கிழமை (மே 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

கடந்த காலங்களிலும், அரிதான மற்றும் ஆபத்தான இந்த நோய் பல உயிர்களைக் கொன்றுள்ளது. இந்த நோய்க்கு எந்த சூழ்நிலையில் ஒருவர் பாதிக்கப்படுவர் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகள் என்ன? என்பதை இங்கே பார்ப்போம். 

ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்றால் என்ன?

ப்ரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்பது ஒரு அரிய மூளை நோய் ஆகும், இது Naegleria fowleri மூலம் ஏற்படுகிறது. இது சுதந்திரமாக வாழும் அமீபா அல்லது ஒரு செல் உயிரி ஆகும். 

Naegleria fowleri உலகெங்கிலும் உள்ள சூடான நன்னீர் மற்றும் மண்ணில் வாழ்கிறது, மேலும் அது மூக்கு வழியாக உடலில் நுழையும் போது மக்களை பாதிக்கிறது. 115°F (46°C)  அதிக வெப்பநிலையில் அது வளர்கிறது. அதே நேரம் வெப்பமான சூழலில் இது குறுகிய காலம் மட்டுமே உயிர்வாழும். 

ஏரிகள், ஆறுகள், நீச்சல் குளங்கள், ஸ்பிளாஸ் பேட்ஸ், சர்ப் பூங்காக்கள் அல்லது மோசமாக பராமரிக்கப்படும், குறைந்த குளோரினேட் செய்யப்பட்ட பிற பொழுதுபோக்கு இடங்களில் சூடான நன்னீரில் அமீபா இருக்கும். 

இந்த நோய் எப்படி பாதிக்கும்? அறிகுறிகள் என்ன? 

Naegleria fowleri  மூக்கு வழியாக உடலில் நுழைகிறது, பொதுவாக நீரில் நீந்தும் போது இது நடக்கிறது. பின்னர் அது மூளை வரை சென்று, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

சமீபத்தில் கோழிக்கோடு சிறுமி வழக்கில், உள்ளூர் ஆற்றில் குளித்த போது சிறுமிக்கு நோய் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மே 1-ம் தேதி, அவர் மற்றும் 4 குழந்தைகள்  ஆற்றில் குளித்துள்ளனர். இந்நிலையில்,  மற்றவர்களுக்கு அறிகுறிகள் இல்லை. மேலும் சோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக வந்தன. 

சுகாதாரமற்ற நீரைக் குடிப்பதால் இந்த நோய் பாதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இது தொற்று நோய் இல்லை என்பதாகும். 

நோய் அறிகுறிகள் என்ன?

ஆரம்ப கட்டத்தில், தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அறிகுறிகளாகும். பின்னர், கடினமான கழுத்து இருப்பது போலும் குழப்பமான மன நிலை,  வலிப்பு, மாயத்தோற்றம் மற்றும் கோமா நிலைக்கு செல்லும். 

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (CDC) கூறுகையில், "PAM நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் அறிகுறிகள் தொடங்கிய 1 முதல் 18 நாட்களில் உயிரிழக்கின்றனர்.  இது பொதுவாக 5 நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது”.

நோய்க்கான சிகிச்சை 

இந்த நோய்க்கான எந்த பயனுள்ள சிகிச்சையையும் விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.  தற்போது, ​​மருத்துவர்கள் ஆம்போடெரிசின் பி, அசித்ரோமைசின், ஃப்ளூகோனசோல், ரிஃபாம்பின், மில்டெஃபோசின் மற்றும் டெக்ஸாமெதாசோன் உள்ளிட்ட மருந்துகளின் கலவையுடன் சிகிச்சை அளிக்கின்றனர்.

கடந்தகால பாதிப்பு விவரம் 

இந்தியாவில் இதுவரை 20 PAM வழக்குகள் பதிவாகியுள்ளன. கோழிக்கோடு வழக்கு கேரளாவில் 7-வதாகும். 

ஜூலை 2023-ல், ஆலப்புழாவில் 15 வயது சிறுவன் நோய் பாதிக்கப்பட்டு உயிரிந்தார். கேரளாவில் முதல் வழக்கு 2016-ல் ஆலப்புழாவில் பதிவாகியது. ஒருவேளை இங்கு அதிக எண்ணிக்கையிலான நீர்நிலைகள் இருப்பதால் நோய் பாதிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களிலும் தொற்று பாதிப்பு  பதிவாகியுள்ளன.

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/everyday-explainers/naegleria-fowleri-brain-eating-amoeba-9342534/

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

   

   

   

  Advertisment

  Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

  Follow us:
  Advertisment