பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டும் கேரளா... வேண்டாம் என வெறுத்து ஒதுக்கும் சிக்கிம்!

2015-16 ஆண்டுகளில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1047 பெண் குழந்தைகள் என்று பாலின விகிதம் நிலவி வருகிறது.

Kerala tops at Sex ratio at birth : தேசிய குடும்ப நலம் மற்றும் சுகாதார கணக்கெடுப்பு (National Family Health Surveys (NFHS)) ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை இந்தியாவில் எடுக்கப்படும். ஒரு மாநிலத்தில் பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு ஏற்றவாறு எத்தனை பெண் குழந்தைகள் பிறக்கின்றார்கள் என்ற பாலின விகிதத்தை ஆய்வு செய்வது அதில் ஒரு முக்கிய அங்கமாகும். 2005-2006 ஆண்டுகளில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற விகிதம் இருந்தது.

Kerala tops at Sex ratio at birth : முன்னிலை வகிக்கும் மாநிலங்கள்

இது மொத்த இந்தியாவின் சராசரியாகும். 2015-2016 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 914ல் துவங்கி 919 வரை உயர்ந்துள்ளது. பஞ்சாப் அதிக அளவு உயர்ந்திருந்தாலும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 860 பெண் குழந்தைகள் (2015-2016) என்ற எண்ணிக்கையில் தான் பாலின விகிதம் உள்ளது. சிக்கிம் மாநிலம் தன்னுடைய வளர்ச்சியை அகல பாதாளத்திற்கு கீழ் நோக்கி கொண்டு சென்றுள்ளது. 175 புள்ளிகள் குறைந்ததோடு மட்டுமல்லாமல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 809 பெண் குழந்தைகள் என்ற பிறப்பு விகிதத்தையும் பெற்றுள்ளது.  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் விவாதங்களின் மத்தியில் இந்த புள்ளி விபரங்களை அறிவித்துள்ளது ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

பஞ்சாபை தொடர்ந்து அதிக புள்ளிகளை பெற்றுள்ளது கேரளா. 2005-06 கால கட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 925 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 122 புள்ளிகள் அதிகரித்து 2015-16 ஆண்டுகளில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1047 பெண் குழந்தைகள் என்று பாலின விகிதம் நிலவி வருகிறது. கேரளா, தாத்ரா நாகர் ஹவேலி, மேகாலயா, சத்தீஸ்கர், திரிபுரா, கோவா, தமிழ்நாடு என்று இந்த பாலின விகிதம் ஓரளவிற்கு சமநிலையை அடைந்தும், கொஞ்சம் அதிகரித்தும் காணப்படுகிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close