Advertisment

கேரளாவில் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும் இறப்புகள் ஏன் அதிகமாக உள்ளது?

Kerala Why Covid 19 deaths remain high despite fall in caseload Tamil News கோவிட் -19 இறப்புகளுக்குப் பங்களிக்கும் காரணி, வயதானவர்கள் மற்றும் வீட்டில் தனிமையில் இருக்கும்போது நோயுற்றவர்களின் நிலை மோசமாவதாக இருக்கலாம் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Kerala Why Covid 19 deaths remain high despite fall in caseload Tamil News

Kerala Why Covid 19 deaths remain high despite fall in caseload Tamil News

Kerala Why Covid 19 deaths remain high despite fall in caseload Tamil News : ஆகஸ்ட் மாதத்தில் ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து, கேரளாவில் கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 90,000 எண்ணிக்கை குறைந்துள்ளன. ஒரு சமூகத்தில் நோய் பரவும் வேகத்தை நிர்ணயிக்கும் ஆர்-மதிப்பு, ஏழு மாதங்களுக்குப் பிறகு கேரளாவிலும் 1-க்கு கீழே குறைந்துள்ளது. இருப்பினும், மாநிலத்தில் கோவிட் -19 இறப்புகளில் விகிதாச்சார குறைப்பு இல்லை. தினசரி இறப்புகள் 100 முதல் 200 வரை தொடர்கின்றன. செப்டம்பர் 1 முதல் மொத்தம் 3,109 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 23,897-ஐ தொட்டது.

Advertisment

இறப்பு புள்ளிவிவரங்கள்

மாநில கோவிட் -19 டாஷ்போர்டில் உள்ள இறப்பு புள்ளிவிவரங்களின் பகுப்பாய்வு, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 74 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இறப்புகளில் 21 சதவிகிதம் 41 மற்றும் 59 வயதிற்குப்பட்டவர்கள். மேலும் இறந்தவர்களில் வெறும் நான்கு சதவீதம் பேர் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். இறப்பு எண்ணிக்கை மற்றும் மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை இரண்டிலும் திருவனந்தபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

மொத்த அதிகாரப்பூர்வ கோவிட் -19 இறப்புகளில் 80 சதவிகிதம் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோயின் பேரழிவு தரும் இரண்டாவது அலைகளின் நேரடி விளைவாகப் பார்க்கப்படுகிறது. முழுமையான எண்ணிக்கையில், இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20 வரை மொத்தம் 23,897 இறப்புகளில் 19,276 பதிவாகியுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்த மருத்துவ அறிக்கையில், செப்டம்பர் 12-18 காலகட்டத்தில், சராசரியாக செயலில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.96 லட்சமாக இருந்தபோது, ​​அவர்களில் 2% பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 1% ஐசியு படுக்கைகளுக்கு அணுகல் தேவை என்று சுகாதாரத் துறை கூறியது. இந்த காலகட்டத்தில் செயலில் உள்ள வழக்குகள் குறைக்கப்பட்டதால், ஐசியு, வென்டிலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கான தேவை முறையே 6%, 4% மற்றும் 7% குறைந்துள்ளது. இருப்பினும், செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்கிறது. செப்டம்பர் 7 -ல் அதாவது முதல் வாரம் முடிவடையும் போது 1,032 எண்ணிக்கையும் செப்டம்பர் 8-14 காலகட்டத்தில் 959 எண்ணிக்கையும் மற்றும் செப்டம்பர் 15-21 காலகட்டத்தில் 1,118-ம் பதிவாகியுள்ளன.

கேரளாவில் கோவிட் -19: பாதிப்பு குறைந்தாலும் ஏன் அதிக இறப்புகள்

கடந்த மூன்று வாரங்களில், எதிர்பார்த்தபடி இறப்புகள் குறையாமல் இருப்பதற்கு ஒரு காரணம் தொற்றுநோயின் நேர இடைவெளியாக இருக்கலாம் என்று கேரளாவில் தொற்றுநோயை மிக நெருக்கமாகப் பின்பற்றி வரும் உள் மருத்துவ நிபுணர் டாக்டர் அருண் என்எம் கூறினார். "பாதிப்புகளைக் குறைப்பதற்கும், இறப்பதற்கும் இடையில் பொதுவாக இரண்டு வார இடைவெளி இருக்கும்" என்று அவர் கூறினார்.

மற்றொரு காரணி, கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட எடுத்துக்கொள்ளாத கொமொர்பிடிடிஸ் நோயாளிகளில் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகளாக இருக்கலாம். "இதுபோன்ற பல பேரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றன. ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், நோயாளிகள் இன்னும் ஐசியு மற்றும் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

கூடுதலாக, மாநிலத்தில், குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டாவது அலையின் உச்சத்தில் கோவிட் -19 இறப்புகளை "குறைவாகக் கணக்கிட்டு" இருப்பதாக டாக்டர் அருண் கூறினார். மே மாதத்தில், அரசாங்கம் 3,507 இறப்புகளைப் பதிவு செய்தது. ஆனால், அந்த மாதத்தில் உண்மையான எண்ணிக்கை 10,000-க்கு அதிகமாக அருகில் இருக்கலாம் என்று டாக்டர் அருண் கூறினார். எண்கள் சரியாக அறிவிக்கப்பட்டிருந்தால், தற்போது காணப்படுவது போல் ஒரு ஏற்றம் இருக்காது என்று அவர் வாதிட்டார்.

உதாரணமாக, பத்தனம் திட்டா மாவட்டத்தில், வயது, இருப்பிடம் போன்ற தினசரி இறப்புகளின் விவரங்களை ஆட்சியர் வெளியிடுவார். அது குறைவாக எண்ணப்படுகிறது. ஆனால், ஜூன் 15-க்குப் பிறகு, இது (அண்டர்கவுண்டிங்) 15-20%-ஆகக் குறைந்திருக்கலாம். எனது மதிப்பீட்டின்படி, கேரளாவின் உண்மையான இறப்புகள் இப்போது 45,000-ஐ தொட்டிருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

திருச்சூரில் உள்ள ENT அறுவை சிகிச்சை நிபுணரும், இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மாநில செயலாளருமான டாக்டர் பி கோபிகுமார், கோவிட் -19 இறப்புகளுக்குப் பங்களிக்கும் காரணி, வயதானவர்கள் மற்றும் வீட்டில் தனிமையில் இருக்கும்போது நோயுற்றவர்களின் நிலை மோசமாவதாக இருக்கலாம் என்று கூறினார்.

"பாசிட்டிவ் சோதனைக்குப் பிறகு நிறையப் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில், மிகவும் வயதானவர்களுக்கு முதலில் அறிகுறிகள் இருக்காது, ஆனால், அவர்களின் நிலையில் விரைவான திருப்பம் ஏற்படலாம். அவர்களுக்கு அடிப்படை நிலைமைகள் இருந்தால், அது ஆபத்தானது. நம் மாநிலத்தில், மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நல்ல வழிமுறைகள் உள்ளன. ஆனால் சில நேரங்களில், தாமதங்கள் ஏற்படலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

இத்தகைய இறப்புகளின் பாதையை நன்கு புரிந்து கொள்ள, மருத்துவ தணிக்கை அவசியம் என்றார். கடந்த இரண்டு வாரங்களாக செயலில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதால், அடுத்த வாரத்திற்குள் இதேபோன்ற இறப்பு விகிதத்தைக் காணலாம்.

கேரளா தனது 18% வயதிற்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 90% பேருக்குத் தடுப்பூசி போட்டால், வைரஸ் பரவுவதை மேலும் தடுக்கும். இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாக மற்றும் ஆன்டிபாடிகள் உருவாகக் குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால், 90% மக்களில் தடுப்பூசியின் விளைவுகளை அக்டோபர் நடுப்பகுதியில் காணலாம் என்று டாக்டர் கோபிகுமார் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment