/tamil-ie/media/media_files/uploads/2022/02/Kerala-Chief-Minister-Pinarayi-Vijayan.jpg)
Apurva Vishwanath , Shyamlal Yadav
Keralas proposal to limit Lokayuktas powers : கேரள அரசு கேரள லோக் ஆயுக்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழிவை அறிமுகம் செய்துள்ளது. இது எதிர்க்கட்சியினரிடம் இருந்து கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
முன்மொழியப்பட்ட மாற்றம் என்ன?
லோக் ஆயுக்தாவின் தீர்ப்பை ஏற்கவும் நிராகரிக்கவும் அரசுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் முன்மொழியப்பட்ட திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் படி ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. தற்போது இந்த சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் லோக் ஆயுக்தாவின் உத்தரவிட்டால் மக்கள் பணியாற்றும் ஒருவர் / அல்லது பொத்துறை ஊழியர் தன்னுடைய பணியில் இருந்து விலக வேண்டும்.
அரசின் அட்வகேட் ஜெனரல் கே.கோபாலகிருஷ்ண குருப், இந்தத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததே இந்த முன்மொழிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், இந்த நடவடிக்கை சிபிஐ(எம்) தலைவர் கே.டி.ஜலீல் தன்னுடைய உறவினர்களுக்கு உதவி செய்தார் என்ற லோக் ஆயுக்தாவின் முடிவை உச்ச நீதிமன்றம் தடை செய்ய மறுத்துவிட்டதன் விளைவாக இது பார்க்கப்படுகிறது. ஜலீல் உயர்க்கல்வித்துறை அமைச்சராக பினராயின் விஜயனின் முதல் ஆட்சியின் போது பணியாற்றினார். லோக் ஆயுக்தாவின் முடிவால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது லோக்ஆயுக்தா பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு ஒன்றையும், உயர்க்கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்துவுக்கு எதிரான வழக்கு ஒன்றையும் விசாரணை செய்து வருகிறது.
லோக் ஆயுக்தா சட்டம் உண்மையில் எவ்வாறு கருதப்பட்டது?
மத்திய லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013, ஜனவரி 1 2014ம் ஆண்டு “நோட்டிஃபை” செய்யப்பட்டது. ஊழலுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஒரு நெடிய போராட்டத்திற்கு பிறகு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது நீதித்துறையில் முக்கிய பொறுப்பு வைக்கும் நபர் தலைவராக இருப்பதை இச்சட்டம் உறுதி செய்தது. இந்த அமைப்பின் இதர 8 உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நீதித்துறை சார்ந்தவர்களாகவும், மீதம் உள்ளவர்களில் பட்டியல் இன, பட்டியல் பழங்குடி, ஓ.பி.சி., சிறுபான்மையினர் அல்லது பெண்கள் இடம் பெறுவதையும் உறுதி செய்தது. லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களைக் கையாள வேண்டும். இதில் பொது ஊழியர்கள் என்பது லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் உள்ளடக்கியது. லோக்பால் மார்ச் 2019இல் நியமிக்கப்பட்டு , அதன் விதிகள் உருவாக்கப்பட்டு, மார்ச் 2020 முதல் செயல்படத் தொடங்கியது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஸ் தலைமையில் லோக்பால் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி, 2019-20ல் 1,427 புகார்களும், 2020-21ல் 110 புகார்களும், 2021-22ல் (ஜூலை 2021 வரை) 30 புகார்களும் பதிவாகியுள்ளன. விதிகளை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், நீதித்துறை உறுப்பினர்களில் ஒருவரான நீதிபதி (ஓய்வு) திலீப் பி போசலே ராஜினாமா செய்தார்.
மாநிலங்களில் இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
லோக்ஆயுக்தாக்கள் மத்திய லோக்பாலுக்கு சமமாக மாநிலங்களில் இயங்குகிறது. ஒவ்வொரு மாநிலமும் மாநிலத்திற்கான லோக்ஆயுக்தா என அறியப்படும் ஒரு அமைப்பை நிறுவ வேண்டும், அவ்வாறு நிறுவப்படவில்லை என்றால் அல்லது ஏற்கனவே மாநில சட்டமன்றத்தால் சட்டம் உருவாக்கி அமைப்பை ஏற்படுத்தி குறிப்பிட்ட பொது ஊழியரகளுக்கு எதிரான ஊழல் புகார்கலை விசாரிக்க வேண்டும். இது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஓராண்டுக்குள் செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாச் சட்டம், 2013 இன் பிரிவு 63 கூறுகிறது.
முதலில், ஒவ்வொரு மாநிலத்திலும் லோக்ஆயுக்தாவை கட்டாயமாக்க இந்த சட்டம் உருவாக்கப்பட்டாது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பிராந்தியக் கட்சிகளும், பாஜகவும் இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று வாதிட்டன. சட்டம் பின்னர் ஒரு கட்டமைப்பை உருவாக்கி, லோக் ஆயுக்தாவை அமைப்பது குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது.
எந்தெந்த மாநிலங்களில் லோக்ஆயுக்தாக்கள் உள்ளன?
2013 சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, லோக் ஆயுக்தாக்கள் ஏற்கனவே சில மாநிலங்களில் செயல்பட்டு வந்தன - மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் அவை தீவிரமாக செயல்பட்டு வந்தன. இந்த சட்டத்தை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்போது அனேக மாநிலங்களில் லோக் ஆயுக்தாக்கள் செயல்பட்டு வருகின்றன. ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்காளம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் எந்த லோக் ஆயுக்தாவையோ அல்லது மேல் லோக் ஆயுக்தாவையோ நியமிக்கவில்லை என்று 2018 இல் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. இந்த நியமனத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர்களிடம் கேட்டது,. மேலும் ஏன் இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை என்பதற்கான காரணங்களை பட்டியலிடவும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
எவ்வாறாயினும், மாநிலங்கள் தங்கள் சொந்த சட்டங்களை உருவாக்க அதிகாரங்கள் கொண்டிருப்பதால் லோக் ஆயுக்தாவின் அதிகாரங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக் கூடிய ஒன்றாக உள்ளது. அதாவது பதவிக்காலம் மற்றும் அதிகாரிகளை வழக்குத் தொடர தேவையான அனுமதி உள்ளிட்டவை.
நாகாலாந்து: ஆகஸ்ட் 3, 2021 அன்று, நாகாலாந்து மாநில லோக்ஆயுக்தா பதவியை ஒரு வருடத்திற்கு காலியாக வைத்திருக்கும் அதிகாரத்தை அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியது. அப்-லோக்ஆயுக்தா மங்யாங் லிமா ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியின் உறுப்பினர் என்பதால் அவரின் நியமனத்திற்கு கடுமையான விமர்சனத்தையும் பெற்றது.
லோக்ஆயுக்தா நீதிபதி (ஓய்வு) உமாநாத் சிங் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. தொற்றுநோய் காரணமாக பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டி நீதிபதி சிங் டெல்லியில் இருந்து பணிபுரிந்தார். டெல்லியில் அமர்ந்திருக்கும் ஒருவரால் எப்படி மாநிலத்தின் லோக்ஆயுக்தா நீதிபதியாக பணியாற்ற முடியும். உங்கள் பதவியை நீங்கள் அவமதிக்கின்றீர்கள் என்று உச்ச நீதிமன்றத்தை நாடிய மாநில அரசின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர் தன்னுடைய பதவியில் இருந்து விலகினார்.
கோவா: கோவாவின் லோக்ஆயுக்தாவுக்கு வழக்குத் தொடரும் அதிகாரம் இல்லை. ஜூன் 2020 இல் அவர் ஓய்வு பெறும்போது, நீதிபதி (ஓய்வு) பிரபுல்ல குமார் மிஸ்ரா, தன்னுடைய ஒன்றரை ஆண்டு பதவிக்காலத்தில் பொது அதிகாரிகளுக்கு எதிராக அவர் சமர்ப்பித்த 21 அறிக்கைகளில் ஒன்றில் கூட நடவடிக்கை எடுக்காத மாநில அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்து பதவியை விட்டு வெளியேறியதாகக் கூறினார்.
பீகார் : பீகாரில் தவறாக புகார் அளிக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு சிறை தண்டனை தருவதை உறுதி செய்யும் வகையில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இது தன்னுடைய அலுவலகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து அடையாளத்தை வெளிப்படுத்தாமல் புகார்களை அளிக்க விரும்பும் அதிகாரிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என்ற விமர்சிக்கப்பட்டது.
உ.பி. : 2012ல் உத்தரபிரதேசத்தில் லோக்ஆயுக்தாவின் பதவிக்காலத்தை 8 ஆண்டுகளாக உயர்த்தி சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் மார்ச் 16, 2006 அன்று நியமிக்கப்பட்ட லோக் ஆயுக்தா நீதிபதி (ஓய்வு) என் கே மெஹ்ரோத்ரா, திருத்தத்துடன் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு பெற்றார். உச்ச நீதிமன்றம் 2014இல் இந்த சட்டத்தை உறுதி செய்தது.
2015ல், தேர்வுக் குழுவில் இருந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி அரசு மற்றொரு திருத்தம் கொண்டு வந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி டி ஒய் சந்திரசூட், அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கத்தைக் காரணம் காட்டி, நீதிபதி (ஓய்வு) ரவீந்திர சிங்கை லோக் ஆயுக்தாவாக நியமிக்கும் முன்மொழிவுடன் உடன்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.