முகமூடிகள் முகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை மறைக்கும்போது, மகமூடி அணிந்திருக்கும் நபரின் முகபாவனைகளை மக்கள் எவ்வளவு நன்றாக புரிந்து கொள்ள முடியும்? என்பது குறித்து பி.எல்.ஓ.எஸ் ஒன் ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில், முகமூடி அணிந்த நபர்களின் செயல்பாடுகளை குழந்தைகளால் ஒரு அளவிற்கு புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
இது குறித்து விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி குறித்த அறிக்கையில், ஆராய்ச்சியாளர் ஆஷ்லே ரூபா கூறுகையில், "பெரியவர்களும் குழந்தைகளும் முகம் ஓரளவு மூடப்பட்டிருக்கும் நபர்களுடன் எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டிய நிலைமை இப்போது உள்ளது. ஆனால் இது குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சிக்கு ஒரு பிரச்சினையாக இருக்குமா என்று நிறைய பெரியவர்கள் யோசித்துக்கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யு.டபிள்யு-மேடிசனில் உள்ள உளவியலாளர்கள் 7 முதல் 13 வயது வரை உள்ள 80 க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம், தடையற்ற முகங்களின் புகைப்படங்கள், அறுவை சிகிச்சை முகமூடியால் மூடப்பட்டவை மற்றும் சன்கிளாசஸ் அணிந்திருப்பதைக் காட்டி, இந்த முகங்களில், சோகம், கோபம் மற்றும் பயம் ஆகியவற்றைக் காட்டும், ஆறு லேபிள்களின் பட்டியலிலிருந்து, ஒவ்வொரு முகத்திற்கும் தகுந்த உணர்ச்சியை பொருத்துமாறு குழந்தைகளிடம் கேட்கப்பட்டது.
இதில் 66% க்கு அளவுக்கு குழந்தைகள் முகத்திற்கு சரியாக முகபாவனைகளை பொருத்தியிருந்தனர். கொடுக்கப்பட்ட ஆறு விருப்பங்களிலிருந்து சரியான ஒரு உணர்ச்சியை தேர்ந்தெடுப்பது சுமார் 17% க்கு மேல் இருந்தது. இதில் 28% பேர் வருத்தம், 27% பேர் கோபம், மற்றும் 18% அச்சம் ஆகியவற்றை சரியாக பொருத்தியிருந்தனர். இதில் முகங்கள் மூடப்பட்டிருந்தால்தான் கண்டறிவது கடினமானது. ஆனால் மூக்கு மற்றும் வாயை மறைக்கும் முகமூடியுடன் இருப்பதால, குழந்தைகள் இந்த உணர்ச்சிகளை சரியான விகிதத்தில் அடையாளம் காண முடிந்தது, ”என்று ரூபா கூறினார்.
மேலும் சன்கிளாஸ்கள் அணிந்திருக்கும்போது கோபத்தையும் பயத்தையும் அடையாளம் காண்பது கடினம், அந்த முகபாவனைகளை கண்டறிய, கண்கள் மற்றும் புருவங்கள் முக்கியம். அச்சம், பெரும்பாலும் ஆச்சரியத்துடன் ஒன்று சேர்ந்து குழப்பத்தை தருகிறது. ஆனால் குழந்தைகள் முகமூடியின் பின்னால் இருக்கும் உணர்ச்சிகளை கண்டுபிடிக்க இந்த ஆய்வு மிகவும் சிறந்த்தாக இருந்தது.
இந்த ஆய்வின் மூலம், குழந்தைகளுக்கு முகங்களின் உணர்ச்சிகள் மெதுவாக வெளிப்பட்டன. நிஜ-உலக தொடர்புகளுக்கு வெவ்வேறு கோணங்களில் இருந்தும், விரைவான பார்வைகளிலிருதும் பல விஷயங்களை ஒன்றாக இணைக்க வேண்டிய வழியை இந்த ஆய்வு உருவகப்படுத்துவதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"