இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தின் (எம்.சி.சி.ஐ) நிறுவன உறுப்பினர் பிரசாந்த் போஸ் என்கிற கிஷாந்தா, மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆக மாறினார். ஜார்க்கண்டில் அவர் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.
சிபிஐ (மாவோயிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினர் பிரசாந்த் போஸ் என்ற கிஷாந்தா மற்றும் 5 பேரை ஜார்கண்ட் காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. வயதில் 70களின் பிற்பகுதியில் இருக்கும் கிஷாந்தா, அந்த அமைப்பின் சிந்தனைக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜார்க்கண்ட் காவல்துறைத் தலைவர் நீரஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், மாவோயிஸ்ட் அமைப்பின் களஞ்சியம் காவல்துறையிடம் பிடிபட்டுள்ளார் என்று கூறினார்.
கிஷாந்தா இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தின் (எம்.சி.சி.ஐ) நிறுவன உறுப்பினர் ஆவார். அந்த அமைப்பு சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆக மக்கள் யுத்தக் குழுவுடன் இணைக்கப்பட்டது. ஜார்க்கண்டில் அவர் மீது ஐம்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர் மீது 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.
கிஷாந்தா கைது
சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் பல்லான் சர்தார் மற்றும் சூரஜ் சர்தார் ஆகிய இரு பகுதி தளபதிகள் சரணடைந்ததைத் தொடர்ந்து கிஷாந்தா மற்றும் மற்ற 5 நபர்களை போலீசார் நெருக்க முடிந்தது. கிரிதி மாவட்டத்தில் உள்ள பரஸ்நாத் மலைப்பகுதியில் இருந்து மேற்கு சிங்பூமில் உள்ள அடர்ந்த சரண்டா சால் காடுகளை நோக்கி மாவோயிஸ்டுகளின் உயர்மட்ட தலைவர்கள் பயணிக்க இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
இது குறித்து காவல்துறை கூறுகையில், 5 ஆண்கள் மற்றும் 1 பெண், அவர்கள் அனைவரும் சந்தேகப்படும்படி இருந்தனர். சரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள சரைகேலாவின் கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் பிடித்து வைக்கப்பட்டு, கூட்டு விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ச்சியான விசாரணையைத் தொடர்ந்து, கட்சியைச் சேர்ந்த இருவர் பிரசாந்த் போஸ் மற்றும் அவரது மனைவி ஷெய்லா மாரந்தி அல்லது ஷெய்லாதி என அடையாளம் காணப்பட்டனர்.
“மற்ற 4 நபர்களும் கிரிதி பகுதியைச் சேர்ந்த பிரேந்திர ஹன்ஸ்தா மற்றும் ராஜு துடு, மற்றும் மேற்கு சிங்பூமின் கிருஷ்ணா பஹாடா மற்றும் குருசரண் போத்ரா ஆகியோர் செயல்பாட்டில் உள்ள சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள்” என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 6 பேரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்யப்பட்டனர்.
கிஷாந்தாவின் வாழ்க்கை
1960களின் முற்பகுதியில், நக்சல்களுடன் தொடர்புடைய தொழிலாளர் அமைப்பில் பிரசாந்த் போஸ் சேர்ந்தார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் 1974-ல் கைது செய்யப்பட்டார். 1978-ல் அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனாய் சாட்டர்ஜியுடன் இணைந்து இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தை நிறுவினார்.
அதன்பிறகு, கிரிதி, தன்பாத், பொகாரோ மற்றும் ஹசாரிபாக் ஆகிய இடங்களில் ஜமீன்தார்களுக்கு எதிராக பிரசாந்த் போஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தத் தொடங்கினார். அவர் 2000ம் ஆண்டு வரை உள்ளூர் சந்தால் தலைவர்களுடன் பணியாற்றினார். மேலும் பலமு, சத்ரா, கும்லா மற்றும் லோஹர்டாகாவில் நக்சல் அமைப்பை பலப்படுத்தினார்.
இந்த காலகட்டத்தில், பிரசாந்த் போஸ் காவல்துறை மற்றும் ரன்பீர் சேனா மற்றும் பிரம்மர்ஷி சேனா போன்ற உயர் ஜாதி ஜமீன்தார்களின் ஆயுதம் ஏந்தியவர்களுக்கு எதிராகப் போராடினார் என்று ஜார்கண்ட் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
1960களின் முற்பகுதியில், நக்சல்களுடன் தொடர்புடைய சிபிஐயில் (மாவோயிஸ்ட்) தொழிலாளர் அமைப்பில் பிரசாந்த் போஸ் சேர்ந்தார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
2004-ல் சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சி நிறுவப்பட்டதில் இருந்து, கிஷாந்தா அதன் மத்தியக் குழு, மத்திய இராணுவ ஆணையத்தின் உறுப்பினராகவும், கிழக்கு பிராந்திய பணியகத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். தெற்கு சோட்டாநாக்பூர் பகுதியில் பணிபுரிந்த அவர், சரண்டா காட்டில் வசித்து வந்தார். அவர் ஜார்கண்ட், பீகார், ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் அமைப்பை வலுப்படுத்த முயன்றார். மேலும், மேற்கு வங்க மாநிலக் குழுவின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
காவல்துறையின் கருத்துப்படி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பொதுச் செயலாளரும், ஜாம்ஷெட்பூரின் அக்கட்சியின் சிட்டிங் எம்.பி.யுமான சுனில் மஹதோவை 2007ல் கொல்லப்பட்டது உட்பட பல மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் போஸ் ஈடுபட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின் தாக்கம்
கிஷாந்தா கைது செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின், மகாராஷ்டிரா-மத்தியப் பிரதேசம்-சத்தீஸ்கர் மண்டலத்தின் தலைவரான மிலிந்த் டெல்டும்டே உட்பட 26 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளுக்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் ஒரு பெரிய அடியாகும். மேலும், இது கணிசமாக அவர்களுடைய மன உறுதியை இழக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் டிஜிபி சின்ஹா தனது செய்தியாளர் கூட்டத்தில், கிஷாந்தா 40-45 ஆண்டுகளாக செயல்பட்டதாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கிய தலைவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் கூறினார். “சிபிஐ (மாவோயிஸ்ட்) உருவான பிறகு, கிஷாந்தா இரண்டாவது தலைமையாகவும் மற்றும் அதன் சித்தாந்தவாதியாகவும் அவருடைய அந்தஸ்து உயர்ந்து இருந்தது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு எங்களிடம் ஒரு தகவல் களஞ்சியம் உள்ளது. அதை ஆய்வு செய்ய எங்களுக்கு பல மாதங்கள் ஆகும்” என்று சின்ஹா கூறினார்.
பிரசாந்த் போஸின் சிந்தாந்த திறமைக்கு முடிவு கட்டப்பட்டதை காவல்துறைத் தலைவர் பாராட்டினார்: “அவர் நம் அனைவரையும்விட மனதளவில் மிகவும் விழிப்புடன் இருக்கிறார். அவர் அருகில் சென்றால், அவர் உங்களை நக்சலாக மாற்றுவார்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.