Pranav Mukul
Kozhikode plane crash tabletop runway a challenge : கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை விபத்து ஏற்பட்டது. 190 பயணிகளுடன் பயணித்த அந்த விமானம் 2010ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நிகழ்ந்த முதல் பெரிய விமான விபத்தாகும். 2010ம் ஆண்டு மங்களூரு விமான நிலையத்தில் இது போன்ற விபத்து ஒன்று ஏற்பட்டது. கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய Boeing 737-800 விமானம், டேபிள்டாப் ஓடுதளத்தில் இருந்து நழுவி 35 அடி ஆழத்தில் விழுந்து இரண்டாக பிளந்தது. டேபிள்டாப் விமான நிலையங்கள் எப்போதும் மலையின் உச்சியில் கட்டமைக்கப்படுகிறது. அங்கு தரையிறங்குதல் என்பது மிகவும் சிரமமானவை. மேலும் ஓடுபாதையில் எந்த ஒரு விளிம்பும் இல்லாததால் தரையிரங்குதல் சவாலானது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
/tamil-ie/media/media_files/uploads/2020/08/tabletop-runway.jpg)
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. நல்ல வேளையாக தீப்பிடிக்கவில்லை. அதனால் உயிரிழப்புகள் குறைவாய் உள்ளன என்று மூத்த அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். சிவில் ஏவியேசன் இயக்குநரகம் அதிகாரிகள் கூறும் போது, வழக்கத்திற்கு மாறாக அதிக வேகத்தில் விமானம் தரையிறங்கியதாக தெரியவந்துள்ளது. இது ஒடுதளத்தில் விமானத்தை நிறுத்துவதற்கான நேரத்தை குறைத்துவிட்டது என்று அவர்கள் கூறினார்கள். கோழிக்கோடு மற்றும் மங்களூருக்கு அடுத்தபடியாக, மிசோரமிம் லெங்புய், சிக்கிமின் பக்யோங், சிம்லா, ஹிமாச்சல் பிரதேசத்தின் குல்லு ஆகிய பகுதிகள் டேபிள்டாப் விமானநிலையங்களாகும். இவை இல்லாமல் பூட்டானின் பரோ மற்றும் நேபாளின் காத்மாண்டோ விமான நிலையங்களும் மலைச்சிகரங்களில் கட்டி அமைக்கப்பட்டவை.
மேலும் படிக்க : அதிர்ஷ்டவசமாக தீப்பிடிக்கவில்லை: கேரள விமான விபத்தை விவரிக்கும் அதிகாரிகள்
2010ம் ஆண்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் விமானம் தீப்பிடிக்க துவங்கிவிட்டது. அதில் 158 நபர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தரையிறங்க 181 பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
தவறுகளுக்கு இடம் இல்லாமல் துல்லியமான அணுகுமுறை இருந்தால் மட்டுமே டேபிள்டாப் ஓடுபாதையில் விமானங்களை தரையிறக்க முடியும் என்று பைலட்கள் கூறுகிறார்கள். 2010ம் ஆண்டு விபத்திற்கு பிறகு டி.ஜி.சி.ஏ, அளவில் பெரிய விமானங்களை கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்க தடை விதித்தது. அதிகப்படியான எடை காரணமாக, வேகத்தை குறைத்து தரையிறக்க நீண்ட ஓடுபாதைகள் தேவை என்பதால் இந்த தடை அமலுக்கு வந்தது.
கோழிக்கோடு விமான நிலைய ஓடுதளத்தின் தூரம் 2,860 மீட்டர்களாகும். இது மங்களூரு விமான நிலைய ஓடுதள தூரத்தை காட்டிலும் 400 மீட்டர்கள் குறைவு. அளவில் சிறியதாக விமானங்களை இயக்கும் விமான நிலையங்களில் இந்த விபத்து கவனத்தை ஈர்க்கலாம். பாட்னாவில் இந்த ஓடுதளத்தை காட்டிலும் குறைவான நீளமே கொண்ட ஓடுதளம் உள்ளது. அதன் ஓடுதளம் 2,072 மீட்டர் நீளம் கொண்டது. டெல்லி ரன்வே 29/11 தான் இந்தியாவில் அதிக நீளம் கொண்டது. அதன் தூரம் 4,430 மீட்டர்கள்.
கோழிக்கோட்டில் நிலவிய மோசமான காலநிலை, விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது, விபத்தை மேலும் மோசமாக்கியது. மழை பெய்து வந்ததால் ஒரு அடுக்கிற்கு விமான நிலையத்தில் நீர் சூழந்திருக்கிறது. அதனால் உராய்வு குறையும். மேலும் விமானத்தில் ப்ரேக்குகளை பயன்படுத்தினால் அது சறுக்கலுக்கு வழி வகுக்கும். முழுமையான பிரேக்குகளை பயன்படுத்தாமல், விமானங்களை சரியான நேரத்தில் தரையிறக்குவது விமானிகளுக்கு மேலும் சவாலான காரியமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil