இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணன் கோயில் கட்டுமானத்தை இம்ரான் கான் ஏன் நிறுத்தக் கூடாது?

சிந்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு அரசு, அந்நாட்டு சிறுபான்மையினரை துன்புறுத்துவதாக கூறப்படும் ஒரு போக்கை இந்த கோயில் அடியோடு மாற்றும்.

By: July 18, 2020, 4:20:51 PM

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த சமீபத்திய கட்டுரையில்,” பாகிஸ்தானில் இந்து கோயில் கட்டுவதற்கான திட்டத்தையும், பாழடைந்த நிலையில் காணப்படும் அனைத்து கோவில்களை புணரமைக்கும் திட்டத்தையும் பிரதமர் இம்ரான் கான் நிறுத்தக்கூடாது”என்று நியூஸ் வீக் பாகிஸ்தான் நாளிதழின் கன்சல்டிங் எடிட்டர் கலீத் அகமத் எழுதியிருந்தார்.

இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்து கிருஷ்ணர் கோவிலின் கட்டுமானமானத்தை ஆசிரியர் இங்கு குறிப்பிடுகிறார்.

பிரச்சனையை விரிவாக விளக்கும் கலீத் அகமத் , “2018 ஆம் ஆண்டில், இஸ்லாமிய பெயரிடப்பட்ட ஒரு நகரத்தில் இந்து கட்டமைப்பைக் அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து,   ஸ்ரீ கிருஷ்ணா மந்திருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தினை மதகுரு எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம், இம்ரான் கான் அரசு, இந்த திட்டத்திற்கான முதல் தவணைத் தொகை ரூ.1.3 மில்லியன் டாலர் ஒதுக்கியதன் மூலம் திட்டம் தொடங்கப்பட்டது ” என்று தெரிவித்தார்.

ஆனால், இதற்கான எதிர்ப்பு அலை மீண்டும் பாகிஸ்தானில் தோன்றியது. இந்து நாடாளுமன்ற உறுப்பினரும், தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ) உறுப்பினருமான லால் சந்த் மல்ஹி, சிந்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு அரசு, அந்நாட்டு சிறுபான்மையினரை துன்புறுத்துவதாக கூறப்படும் ஒரு போக்கை இந்த கோயில் அடியோடு மாற்றும் என்று நினைத்திருந்தார்.

“துரதிர்ஷ்டவசமாக, ஆளும் தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சி  முக்கிய கூட்டாளியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (காயிட்-இ-ஆசாம்) இஸ்லாமாத் நகரில் இந்து கோயில்களின் கட்டுமானத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது,” என்று கலீத் அகமத் எழுதுகிறார் .

எவ்வாறாயினும், இந்த திட்டத்திற்கான நில உரிமையை மூலதன மேம்பாட்டு ஆணையம் (சி.டி.ஏ)  இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற  அமைப்புக்கு மாற்றியது; கோவில் கட்டுமானத்திற்கான துவக்க  விழா ஜூன் மாத இறுதியில் நடை பெற்றது. இதில், மத்திய மத விவகாரங்களுக்கான அமைச்சர்,  இந்து சமூகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிய பொற்காலத்தை பாகிஸ்தான் நினைவுகூர வேண்டும் என்று அகமது தெரிவித்தார். வரலாற்றில் இஸ்லாமியர்கள் இந்துக்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர் என்பதற்கான பல எடுத்துக்காட்டுகளையும் அவர் எடுத்துரைத்தார்.

“மதம் முஸ்லிம்களுக்கு அவர்களின் பாக்கிஸ்தானைப் பெற்றுள்ளது, ஆனால் கணிதம் அவர்களின் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பலவீனமான பாடமாக உள்ளது”என்று ஆசிரியர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Krishna temple islamabad first hindu temple in islamabad imran khan pakistan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X