Advertisment

2022 குளிர் காலத்தில் இந்தியாவில் காற்றின் தரத்தை பாதித்த லா நினா: புதிய ஆய்வு கூறுவது என்ன?

இந்தியாவில் வழக்கமாக ஏற்படும் காற்று மாசுப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்திய லா நினா; புதிய ஆய்வு வெளிப்படுத்தும் காலநிலை மாற்ற தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
air pollution

டிசம்பர் 16, 2022 அன்று தெற்கு மும்பையில் புகைமூட்டம் மற்றும் மூடுபனி சூழ்ந்தது. அந்த குளிர்காலத்தில் மும்பை வழக்கத்திற்கு மாறாக மோசமான காற்றின் தரத்தை கண்டது. (எக்ஸ்பிரஸ் காப்பகம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Amitabh Sinha 

Advertisment

இந்தியாவில் பருவமழை எல் நினோ மற்றும் லா நினா நிகழ்வுகளால் வலுவாக பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது, இந்த எல் நினோ மற்றும் லா நினா நிகழ்வுகளால் கிழக்கு பசிபிக் பெருங்கடல் மாறி மாறி வெப்பமயமாதல் மற்றும் குளிர்ச்சியாதல் அடைவது உலகம் முழுவதும் வானிலையை பாதிக்கிறது. இரண்டு வானிலை நிகழ்வுகளால் இந்தியாவில் காற்றின் தரம் கூட பாதிக்கப்படலாம் என்று இந்திய ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: La Nina impacted air quality in India in the winter of 2022: What a new study says

பெங்களூருவை தளமாகக் கொண்ட தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் மற்றும் புனேவைச் சேர்ந்த இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு, 2022 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் சில இந்திய நகரங்களில் அசாதாரணமான காற்றின் தரம், அந்த நேரத்தில் நிலவிய லா நினா விளைவின் உச்ச பட்ச நிகழ்வின் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்திய நகரங்களில் காற்றின் தரம் லா நினா நிகழ்வுடன் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை மற்றும் மறைமுகமாக எல் நினோ மற்றும் லா நினாவை கடுமையாக்கும் காலநிலை மாற்றத்துடனும் இணைக்கப்படுகிறது.

இந்தியாவில் மாசுபாட்டிற்கும் குளிர்கால மாதங்களுக்கும் என்ன தொடர்பு?

அக்டோபர் முதல் ஜனவரி வரை, வட இந்திய நகரங்கள், குறிப்பாக டெல்லி, PM2.5 இன் மிக அதிக செறிவுகளை அனுபவிக்கின்றன. பல்வேறு வானிலை காரணிகளான வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் கனத்தன்மை, காற்றின் வேகம் மற்றும் திசை ஆகியவை வளிமண்டலத்தின் கீழ் மட்டங்களில் உள்ள மாசுபடுத்திகளை சிக்க வைப்பதில் பங்கு வகிக்கிறது. இந்த காரணிகள் மற்ற பகுதிகளில் இருந்து குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் எரியும் விவசாய கழிவுகளால் உருவாகும் மாசுகளை டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கும் காரணமாகின்றன.

நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் கடல்களுக்கு அருகாமையில் இருப்பதால், ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான மாசுபாட்டைக் கொண்டுள்ளன.

இருப்பினும், 2022 இன் குளிர்காலம் இந்த இயல்பிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலைக் காட்டியது. டெல்லி உட்பட வட இந்திய நகரங்கள் வழக்கத்தை விட சுத்தமாக இருந்தன, அதே சமயம் மேற்கு மற்றும் தெற்கு நகரங்களான மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்கள் வழக்கத்தை விட மோசமான காற்றின் தரத்தை அனுபவித்தன.

காஜியாபாத்தில் PM2.5 செறிவுகள் குளிர்காலத்தில் இயல்பை விட சுமார் 33% குறைந்துள்ளதாகவும், நொய்டாவில் செறிவு இயல்பை விட 28% குறைவாக இருப்பதாகவும் ஆய்வு கூறியது. டெல்லியில் சுமார் 10% குறைந்துள்ளது. அதே நேரத்தில், மும்பையில் செறிவு 30% உயர்ந்தது, மேலும், பெங்களூரு 20% உயர்வைப் பதிவு செய்தது.

இந்த முரண்பாடான நடத்தைதான் லா நினாவின் சாத்தியமான விளைவுகளுக்கு வழிவகுத்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தபோது ஆய்வு செய்யத் தொடங்கினர்.

காற்றடிக்கும் திசை

2022 குளிர்காலத்தின் ஒழுங்கின்மையை விளக்குவதில் மிக முக்கியமான காரணி சாதாரண காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றமாகும். இந்த நேரத்தில், காற்று பொதுவாக வடமேற்கு திசையில் வீசுகிறது: உதாரணமாக, பஞ்சாபிலிருந்து டெல்லியை நோக்கி வீசி, பின்னர் கங்கை சமவெளி முழுவதும் செல்கிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள விவசாயக் கழிவுகள் டெல்லியில் கலப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இருப்பினும், 2022 குளிர்காலத்தில், காற்று சுழற்சி வடக்கு-தெற்கு திசையில் இருந்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து கொண்டு செல்லப்படும் மாசுக்கள் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர்த்து, ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலிருந்து தெற்குப் பகுதிகளுக்கு பறந்தன (வரைபடத்தைப் பார்க்கவும்).

டெல்லி மற்றும் மும்பையில் உள்ளூர் உமிழ்வு ஆதாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வடமாநிலங்களில் இருந்து வரும் கூடுதல் மாசு சுமை, அதாவது வழக்கமாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறங்கும் மாசுக்கள், வேறு பாதையில் நகர்ந்து தீபகற்ப இந்தியாவை அடைந்தது, சில மும்பையிலும் தரையிறங்கியது,” என்று முன்னணி ஆராய்ச்சியாளரும், நாட்டின் முன்னணி காசு மாசுபாடு நிபுணருமான குஃப்ரான் பெய்க் விளக்கினார்.

மும்பைக்கு அருகிலுள்ள காற்றின் உள்ளூர் சுழற்சியும் அந்த ஆண்டு ஒரு ஒழுங்கற்ற நடத்தையைக் கொண்டிருந்தது. சில நாட்களுக்கு ஒருமுறை நிலத்திலிருந்து கடலுக்கு காற்று ஓட்டங்கள் மாறி மாறி வீசும். நிலத்தில் இருந்து கடலை நோக்கி வீசும் போது காற்று மாசுக்களை நகருக்கு வெளியே கொண்டு செல்கிறது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டில், நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை திசையை மாற்றுவதற்குப் பதிலாக, காற்று ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேலாக ஒரு திசையில் நீடித்தது, இது மும்பையில் அதிக மாசுக் குவிப்புக்கு வழிவகுத்தது.

லா நினா மற்றும் காலநிலை மாற்றம்

இரண்டு நிகழ்வுகளிலும் காற்றின் செயல்பாடு நீட்டிக்கப்பட்ட லா நினாவுடன் தொடர்புடையது என்று பெய்க் கூறினார், இது 2022 குளிர்காலத்தில், வழக்கத்திற்கு மாறாக நீண்ட மூன்று ஆண்டுகளாக நீடித்தது.

"எங்கள் கணினி மாதிரிகளில் லா நினாவின் விளைவாக உலகளாவிய காற்று சுழற்சித் தரவைப் பயன்படுத்தியபோது, ​​கவனிக்கப்பட்ட மாற்றங்களைப் போலவே இந்தியப் பகுதியில் காற்று வடிவங்கள் தோன்றியதைக் கண்டோம். முந்தைய ஆண்டுகளின் தரவுகளுடன் மாதிரிகளை இயக்கியபோது, ​​வலுவான லா நினா இல்லாதபோது, ​​இந்த முரண்பாடான காற்று வடிவங்கள் மறைந்துவிட்டன. இது லா நினா நிலைமைகளுக்கு வலுவான உணர்திறனைக் காட்டியது" என்று பெய்க் கூறினார்.

அனைத்து லா நினா நிகழ்வுகளும் இந்தியாவில் காற்று சுழற்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தாது என்று பெய்க் கூறினார். "இது ஒரு குறிப்பாக வலுவான நிகழ்வு. காற்று சுழற்சியின் தாக்கம் லா நினாவின் மூன்றாம் ஆண்டில் மட்டுமே தெளிவாகத் தெரிந்தது. அதனால், ஏகப்பட்ட விளைவு இருக்கலாம்,'' என்று பெய்க் கூறினார்.

இந்தியாவின் மீது காற்றின் தரத்தில் எல் நினோ எதிர் விளைவை ஏற்படுத்துமா என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று பெய்க் கூறினார்.

அந்த ஆண்டு காற்றின் தரத்தில் அசாதாரண போக்குகளுக்கு காற்றின் வடிவங்களில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே காரணம் அல்ல என்று ஆய்வு கூறியது. இது லா நினாவுடன் தொடர்பில்லாத உள்ளூர் வானிலை நிலைமைகளைக் குறிப்பிட்டுள்ளது, இது வட இந்தியாவில் மாசுபடுத்தும் செறிவுகளைக் குறைப்பதற்கும் காரணமாக இருக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Air Pollution
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment