இங்கிலாந்தில் லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் பிப்ரவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்தது தெரியவந்தது. நைஜீரியாவில் முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட நகரத்தின் நினைவாக இதற்கு லாசா வைரஸ் பெயரிடப்பட்டது.
இந்த நோயுடன் தொடர்புடைய இறப்பு விகிதம் குறைவாக உள்ளது, சுமார் ஒரு சதவீதம். ஆனால் மூன்று மாத கர்ப்பிணிப் பெண்கள் போன்ற குறிப்பிட்ட நபர்களுக்கு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தின்படி, சுமார் 80 சதவீத பாதிப்புகள் அறிகுறியற்றவை, எனவே அவை கண்டறியப்படாமல் உள்ளன. சில நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம் மற்றும் கடுமையான நோயை உருவாக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பதினைந்து சதவீதம் பேர் இறக்கலாம்.
லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன?
1969 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவின் லாசாவில் தான், லஸ்ஸா காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் மாசுபாட்டிற்கான மையங்கள் (சிடிசி) குறிப்பிடுகிறது.
நைஜீரியாவில் இரண்டு செவிலியர்கள் இறந்த பிறகு இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது.
எப்படி பரவுகிறது?
இந்த காய்ச்சல் எலிகளால் பரவுகிறது, இது முதன்மையாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்ட உணவுப் பொருட்களுடன் ஒருவர் தொடர்பு கொண்டால் அவர் வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம்.
நோய்வாய்ப்பட்ட நபரின் பாதிக்கப்பட்ட உடல் திரவங்களுடனோ அல்லது கண்கள், மூக்கு அல்லது வாய் போன்ற சளி மூலமாகவும் மற்றொருவருக்கு பரவலாம்.
இருப்பினும், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு மக்கள் பொதுவாக தொற்றுநோய்க்கு ஆளாக மாட்டார்கள். கட்டிப்பிடித்தல், கைகுலுக்குதல் அல்லது பாதிக்கப்பட்ட ஒருவரின் அருகில் அமர்ந்துகொள்வது போன்ற சாதாரண தொடர்பு மூலம் தொற்று பரவாது.
அறிகுறிகள்
1-3 வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் பொதுவாக வெளிப்பட தோன்றும். லேசான அறிகுறிகளில் லேசான காய்ச்சல், சோர்வு, பலவீனம் மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும். இரத்தப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், வாந்தி, முக வீக்கம், மார்பு, முதுகு மற்றும் வயிற்றில் வலி மற்றும் அதிர்ச்சி ஆகியவை மிகவும் தீவிரமான அறிகுறிகள்.
அறிகுறிகள் தோன்றிய இரண்டு வாரங்களில் இருந்து மரணம் ஏற்படலாம், பொதுவாக பல பாதிப்புகளில்’ உறுப்பு செயலிழப்பின் விளைவாக மரணம் நிகழ்கிறது.
காய்ச்சலுடன் தொடர்புடைய மிகவும் பொதுவான சிக்கலில்’ காது கேளாமையும் ஒன்று என சிடிசி குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் பல்வேறு அளவுகளில் காது கேளாமையைப் புகாரளிக்கின்றனர். இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில், காது கேளாமை நிரந்தரமாக இருக்கும்.
குறிப்பிடத்தக்க வகையில், காய்ச்சலின் லேசான மற்றும் கடுமையான வெளிப்பாடுகளில் காது கேளாமை ஏற்படலாம்.
எப்படி தடுப்பது?
எலிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி.
நோய் பரவும் இடங்களில் எலிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது, எலிகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க மற்ற பகுதிகளிலும் சுகாதாரத்தைப் பேணுவது, எலி-புகாத கண்டெய்னரில் உணவை வைப்பது மற்றும் எலிப் பொறிகளை வைக்க CDC அறிவுறுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“