scorecardresearch

பெய்ரூட் பெருவெடிவிபத்தின் நேரடி காட்சிகள் – பின்னணி காரணம் என்ன?

Beirut blast : அம்மோனியம் நைட்ரேட்டால் வெடிவிபத்து, இதற்கு முன் சீனாவில் 2015ம் ஆண்டில் 800 டன்கள் அளவில் வெடித்து துறைமுக நகரமான டியான்ஜின் பகுதியை கபளீகரம் செய்திருந்தது

Lebanon, Ammonium nitrate, Beirut port, Beirut explosion, Beirut blast, Beirut news, Beirut videos, Beirut footage, Indian Express

இந்த கட்டுரையை, இவான் ஹில் , ஸ்டெல்லா கூப்பர், கிறிஸ்டியன் டிரெய்பெர்ட், கிறிஸ்டோப் கொய்ட்டி, டிரியு ஜோர்டான், டிமிட்ரி காவின் மற்றும் ஜானி இஸ்மாய் எழுதியுள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச்சிதறிய விபத்தில் இதுவரை 135 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 3 லட்சம் பேரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தின் தாக்கம், 150 மைல்கள் தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த பேரழிவு தொடர்பாக 70க்கும் மேற்பட்ட வீடியோக்கள், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த தி டைம்ஸ் பத்திரிகை, எதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, இதன் பின்னணியில் உள்ள தகவல்கள் குறித்து தெரிவித்துள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கில் உள்ளூர் நேரப்படி மாலை 5.54 மணியளவில், சிறு தீ வந்துள்ளதையும் , அதை தொடர்ந்து வந்த புகையையும் படம்பிடித்த தி லாஸ் ஏஞ்சல்ஸ் பத்திரிகை நிருபர், அதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது வெடி சத்தம் கேட்டதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 14வது அந்த இடத்தில் பெரி தீ ஜூவாலை புறப்பட்டதை அங்கிருந்த தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.

 

அடுத்தடுத்த நிகழ்வுகளை அங்கிருந்தவாறு வீடியோ எடுத்துள்ளனர். தீயணைப்பு மற்றும் அவசர கால நடவடிக்கை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீ மற்றும் புகை குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அதேநேரத்தில், மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டிருந்த வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவந்தன. சிறிது சிறிதாக பரவிய தீ, சரியாக 6.08 மணியளவில் பெரும்வெடிப்பாக வெடித்துச்சிதறியது. இந்த நிகழ்வு, சர்வதேச நாடுகளையும் பெரும்அதிர்ச்சியடைய செய்தது.

லெபனான் அரசு, இந்த விபத்து தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, உரங்கள் மற்றும் சிலநேரங்களில் அணுகுண்டுகளில் பயன்படுத்தப்படும் 2750 டன்கள் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதே, இந்த பெரும்விபத்திற்கு காரணம் ஆகும். 2014ம் ஆண்டில் தங்கள் நாட்டில் அனுமதியின்றி நுழைந்த ரஷ்ய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட், பெய்ரூட் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கிடங்கில் சிறு விபத்து ஏற்பட்டாலும், அது பெருமளவிலான சேதத்தை ஏற்படும் என்று அனைவரும் அறிந்திருந்தனர்.

இந்த அம்மோனியம் நைட்ரேட்டை, லெபனான் ராணுவத்திற்கு தானமாக வழங்கவும், அல்லது தனியார் வெடிபொருட்கள் நிறுவனத்திற்கு விற்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் பலர் ஒரேநேரத்தில் பிளாஷ் லைட்களை பயன்படுத்தியதன் விளைவாக ஏற்பட்ட வெப்பத்தினாலேயே, அம்மோனியம் நைட்ரேட் வெப்பமாகி பெரும்வெடிவிபத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த கிடங்கில் வெல்டிங் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தாகவும், அதில் இருந்து வெளியான சிறு தீப்பொறியே, இந்த வெடிவிபத்திற்கு காரணம் என LBCI செய்தி சேனல் தெரிவித்துள்ளது.

பெரும்வெடிவிபத்தை தொடர்ந்து எழுந்த அடர்ந்த செந்நிற புகை, வெடிவிபத்திற்கு காரணம் அம்மோனியம் நைட்ரேட் தான் என்றாலும் அது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அளவிற்கு தரமானது அல்ல என்று வெடிபொருட்கள் நிபுணர் டாக்டர் ரசேல் லான்ஸ் தெரிவித்துள்ளார். அவர் இமெயில் மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது, அம்மோனியம் நைட்ரேட், செந்நிறத்தில் எரியும். ஆனால், இங்கு நடைபெற்றிருப்பதோ, அடர்ந்த, செந்நிற புகை. இது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட் வெடிக்கவில்லை என்பது புலனாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்வெடிவிபத்து நிகழ்ந்த அடுத்த நாளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் பெய்ரூட் துறைமுக தானிய கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் 460 அடி டயாமீட்டர்கள் அளவிற்கு கடல்நீர் உட்புகுந்துள்ளது.

 

இந்த வெடிவிபத்தில் மொத்தமுள்ள 160 ஏக்கர் இடத்தில், கண்டெய்னரின் கிழக்கு திசையில் உள்ள பகுதிகளே அதிகளவில் பாதிப்படைந்துள்ளன.
இந்த வெடிவிபத்து, 390 அடி நீளம் கொண்ட ஓரியண்ட் குயின் பயணிகள் கப்பலை, கிழக்கு திசையில் 1500 அடி ஆழத்திற்கு மூழ்கடித்துள்ளது. இதுமட்டுமல்லாது, கமர்சியல் துறைமுகத்திவ் வெளிப்புறத்தில் உள்ள பொழுதுபோக்கு பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்த இடிபாடுகள், நகரப்பகுதிகளில் உள்ள தெருக்களில் சிதறிக்கிடப்பதை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக காட்டுகின்றன.

அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால், துறைமுகத்தில் உள்ள வெள்ளைக்கூண்டு காற்றில் பறந்து வருவதுபோன்று பல்வேறு வீடியோக்கள் உலவிவருகின்றன. அங்குள்ள பலரும், இந்த வெடிவிபத்தை, அணுகுண்டு வெடித்துவிட்டதாக பலரும் கருதியிருந்தனர்.

துறைமுக கிடங்கில் எந்த அளவிற்கு அம்மோனியம் நைட்ரேட் இருந்தது என்பதை உறுதியாக கூற முடியவில்லை. அம்மோனியம் நைட்ரேட், டிஎன்டி எனப்படும் டிரைநைட்ரோடொலுவின் வெடிமருந்தை விட 40 சதவீதம் அதிகம் சக்திவாய்ந்தது ஆகும். பெய்ரூட் துறைமுகத்தில் நிகழ்ந்த பெருவெடிவிபத்தின் அழுத்தம் 1.25 மைல்கள் தொலைவில் உள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது.

பெய்ரூட் துறைமுகம், லெபனான் நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வெடிவிபத்தினால், அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகள், தேவாலயங்கள், மசூதிகள், அபார்ட்மெண்ட்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. 2009ம் ஆண்டில் நிகழ்ந்த உள்நாட்டு போருக்கு பிறகே, பெய்ரூட் துறைமுக பகுதி சற்று வளர்ச்சி கண்டிருந்தது.

வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 1.5 மைல்களுக்குள்ளாக 5 மருத்துவமனைகள் உள்ளன. இவைகள் பலத்த சேதமடைந்துள்ளன. 1.86 மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் கண்ணாடிகள் உடைந்து அங்குள்ளவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. பிஎம்ஜி பிகாஜி மருத்துவ மையத்தில் மேற்கூரை விழுந்து பல நோயாளிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. பிரமாண்ட சத்தம் கேட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள், எஞ்சியுள்ள நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மொபைல் போனில் உள்ள டார்ச்சின் உதவியுடன் அழைத்துச்சென்றனர்.

அம்மோனியம் நைட்ரேட்டால் வெடிவிபத்து, இதற்கு முன் சீனாவில் 2015ம் ஆண்டில் 800 டன்கள் அளவில் வெடித்து துறைமுக நகரமான டியான்ஜின் பகுதியை கபளீகரம் செய்திருந்தது. இந்த விபத்தில் 173 பேர் பலியாகியிருந்தனர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: What footage of the Beirut explosion tells us about the blast

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Lebanon ammonium nitrate beirut port beirut explosion beirut blast