Divya Goyal
பஞ்சாபின் டார்ன் டரன் பகுதியில் இளம் தம்பதிக்கு (19 வயது ஆண் 24 வயது பெண்) நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தாங்கள் திருமணமானவர்கள் என்றும் குருத்வாராவில் இருந்து அதற்கான சான்றிதழ் பெற்று வைத்திருப்பதாகவும் கூறினர். இந்த ஆண்டு ஜூலை மாதம் பெண்ணின் குடும்பத்தினரால் அந்த ஆணின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.
திருமணத்திற்கான சட்ட வயது என்ன, நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் என்ன நடக்கும்?
இந்து திருமணச் சட்டம், 1955 (இது சீக்கியர்களுக்கும் பொருந்தும்) திருமணத்தின் போது ஒரு பெண் 18 ஆகவும், ஒரு பையன் 21 ஆகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் பெரும்பான்மை சட்டம், 1875 இன் படி: “இந்தியாவில் குடியேறிய ஒவ்வொரு நபரும் 18 வயதை நிறைவு செய்தபின் பெரும்பான்மை வயதை அடைகிறார்கள், 18 வயதுக்கு முன் அல்ல.” என்பதாகும்
இதுகுறித்து மூத்த வக்கீல் ராமன்பிரீத் சிங் சந்து கூறுகையில், "18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இருவர், திருமணமாக இல்லாவிட்டாலும், ‘லிவ்-இன் பார்ட்னர்கள்’ என தங்கள் ஒப்புதலுடன் சேர்ந்து வாழ முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது" என்கிறார்.
"இரண்டு விஷயங்கள் உள்ளன: முதலாவதாக, நீதிமன்றத்தின் பணி என்பது, மனுதாரர் மைனராக இருந்தாலும், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாகும். பாதுகாப்பை வழங்குவதற்கும் வயதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்தவொரு திருமணமும் நீதிமன்றங்களில் நடத்தப்படுவதில்லை. தம்பதிகள் பாதுகாப்பைப் பெற நீதிமன்றத்தை அணுகலாம் அல்லது தங்கள் திருமணங்களை நீதிபதிகளிடம் பதிவு செய்யலாம்," என்று அவர் கூறுகிறார்.
“இரண்டாவதாக, இந்து திருமணச் சட்டத்தின்படி, ஒரு திருமணத்தை செல்லாததாக (முற்றிலும் சட்டவிரோதமாக) அல்லது நீதிமன்றத்தால் செல்லாததாக அறிவிக்க முடியும். பையன் அல்லது பெண்ணின் சம்மதம் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டால் அது 'செல்லாததாக' அறிவிக்க முடியும். ஆனால் இணைந்து வாழ முடிவெடுத்துவிட்டால், 18 வயதை கடந்தவர்கள், தனது பார்ட்னருடன் திருமணம் செய்து கொண்டோ, செய்து கொள்ளாமலோ வாழலாம்" என சந்து கூறுகிறார்.
நீதிபதி ஏ கே சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், இளம் தம்பதி வழக்கு ஒன்றில் (19 வயதுடைய பெண் மற்றும் 21 வயது நிரம்பாத ஆண்) மே 7, 2018 தேதியிட்ட உத்தரவில், "அவர்கள் இருவரும் பெரியவர்கள் என்பதை கவனத்தில் கொள்வது போதுமானது. அவர்கள் திருமணத்திற்குள் நுழைய தகுதியற்றவர்களாக இல்லாவிட்டாலும், திருமணத்திற்கு வெளியே கூட ஒன்றாக வாழ அவர்களுக்கு உரிமை உண்டு. தேர்வு செய்யும் சுதந்திரம், அவர் யாருடன் வாழ விரும்புகிறாரோ அந்த பெண்ணுடையதாக இருக்க வேண்டும்" என்றார்.
பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறை கூட இப்போது அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கான வயது 18 என்பதை ஒரே சீராக மாற்றுவது குறித்து விவாதம் நடந்து வருகிறது. மூத்த வழக்கறிஞர் ருச்சி சேக்ரி கூறுகையில், பஞ்சாபில் 2016 இல் வடிவமைக்கப்பட்ட ஆனந்த் திருமணச் சட்டம் மற்றும் விதிமுறைகள் , சீக்கிய திருமணங்களை தனித்தனியாக பதிவு செய்வதற்கு மட்டுமே பொருந்தும், சர்ச்சைகளால் அல்ல" என்று குறிப்பிடுகிறார்.