Lessons from a melting Antarctic glaciers : இந்த பனிப்பாறையில், நியூயார்கில் உள்ள பெருநகரான மன்ஹட்டான் நகரின் மூன்றில் இரண்டு பங்கு அளவுள்ள பள்ளம் ஏற்பட்டு வருவதாக 2019ம் ஆண்டு நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் பனிப்பாறைக்கு கீழே முக்கிய புள்ளியில் சூடான தண்ணீரை கண்டுபிடித்துள்ளனர்.
அண்டார்டிக்காவில் மிதந்துகொண்டிருக்கும், சுமார் பிரிட்டன் நாட்டின் பரப்பளவுள்ள பெரிய, பெரிய பனிப்பாறைகள் உருகிவருவது பல .ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. பனிப்பாறைகளுக்கு கீழே உள்ள சூடான தண்ணீரே பனிப்பாறைகள் உருகி வருவதற்கு காரணம் என்று ஒரு புதிய ஆராய்ச்சி குறிப்பிட்டு சொல்கிறது.
பனிப்பாறைகள் என்றால் என்ன? அவை ஏன் முக்கியம்?
த்வைட்டீஸ் பனிப்பாறைகள் என்று அழைக்கப்படும் பனிப்பாறைகள், 120 கிலோ மீட்டர் அளவு அகலம் கொண்ட பரந்த பனிப்பாறைகள் ஆகும். வேகமாக நகர்ந்துசெல்லும் இவை கடந்த சில ஆண்டுகளாக உருகி வருகின்றன. இதன் அளவால் (1.9 லட்சம் சதுர கிமீ) இதில் தண்ணீரின் அளவும் அதிகமுள்ளது. அந்த தண்ணீரின் அளவு உலகளவில் கடல் நீரின் மட்டமத்தை அரை மீட்டருக்கும் மேல் உயர்த்தும் என்று கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் அதிலிருந்து வெளியேறும் பனியின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. உலகளவில் 4 சதவீதம் அளவிற்கு கடல் நீர் மட்டம் உயர்வது த்வைட்டீஸ் பனிப்பாறைகளால் ஏற்படுகிறது. இன்னும் 200 முதல் 900 ஆண்டுகளில் அது உருகி முழுவதும் கடலில் சரிந்துவிடும். கடலின் மிதமான நீரோட்டத்திற்கு அண்டார்டிக்காவின் இந்தப்பனிப்பாறைகள் அவசியமாகிறது. இப்பனிப்பாறைகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களால், அவை இறுதிநாளை எதிர்நோக்கியுள்ள பனிப்பாறைகள் என்றழைக்கப்படுகின்றன. (Dooms day glacier)
புதிய ஆய்வில் கிடைத்துள்ள தகவல்கள் என்ன?
இந்த பனிப்பாறையில், நியூயார்கில் உள்ள பெருநகரான மன்ஹட்டான் நகரின் மூன்றில் இரண்டு பங்கு அளவுள்ள பள்ளம் ஏற்பட்டு வருவதாக 2019ம் ஆண்டு நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் பனிப்பாறைக்கு கீழே முக்கிய புள்ளியில் சூடான தண்ணீரை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்விற்கு சர்வதேச பனிப்பாறைகள் மையம் நிதியளித்துள்ளது. இம்மையத்திற்கு இங்கிலாந்தின் இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சிலும், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பும் இணைந்து தலைமை வகித்து, பனிப்பாறைகள் குறித்து 2018ம் ஆண்டு முதல் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றன. தரையில் இருந்து உறையும் புள்ளிக்கு மேலாக இரண்டு டிகிரியில் தண்ணீர் உள்ளதாக நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஏன் அது குறிப்பிடத்தக்கது?
தரைப்பகுதி என்பது பனிப்பாறைக்கு கீழே உள்ள பகுதியாகும். இங்கு தான் மிதக்கும் ஐஸ்கள் மற்றும் நிற்கும் ஐஸ்களுக்கு இடையே மாற்றம் நடைபெறும். அந்தப்பகுதி பனிப்பாறையின் பின்வாங்கல் நடைபெறும் பகுதியாகும். பனிப்பாறைகள் உருகி, எடையிழக்கும்போது, எங்கு உள்ளதோ அந்த நிலங்களில் மிதக்கும். இது ஏற்படும்போது தரைப்பகுதியில் பின்வாங்கல் நடைபெறும். இது பனிப்பாறைக்கு அடியில் உள்ள கடல் நீர் விரைவில் உருகும் வாய்ப்பை அதிகரிக்கும். இது பனிப்பாறை விரைவாக உருகி தரைப்பகுதியை மேலும் பின்வாங்க வைக்கும். இந்தப்பகுதியில் உள்ள சூடான தண்ணீர் உலகிற்கு எச்சரிக்கை விடுக்கிறது. பூமியில் நடந்து வரும் கொடிய மாற்றங்களே பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என நியூயார்க் பல்கலைக்கழகத்தின் டேவிட் ஹாலண்ட் கூறுகிறார்.
சூடான தண்ணீர் குறித்து எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
600 மீட்டர் ஆழம் மற்றும் 35 சென்டிமீட்டர் அகலம் கொண்ட ஒரு துளையை தோண்டி, ஐஸ்பின் என்ற கடலை ஆய்வு செய்யக்கூடிய கருவியை பனிப்பாறைகளுக்க கீழே நீரோட்டம் உள்ள இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தினார்கள். அதன் மூலம் அங்கு சூடான தண்ணீர் உள்ள இடத்தை பதிவு செய்துகொண்டார்கள். பனிப்பாறையின் தரைப்பகுதியில் அது உருகுமிடத்தில், நிறுத்தமுடியாத பின்வாங்கலை அது சந்தித்து வருகிறது. இதனால் உலகளவில் கடல் நீர்மட்டம் உயர்வதில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹாலண்ட் கூறினார்.
தமிழில் R.பிரியதர்சினி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“